ஒபாமாவின் நன்றி சொல்லும் பேச்சு அருவிபோல் குளிர்ச்சியாக கொட்டியது . அமெரிக்க கொள்கை நமக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமையைப் பாருங்கள் .அரசியல் அவர்களது நட்பை பிரிப்பதில்லை .போட்டி இடுபவர் ஒரே மேடையில் முறையான விளக்கம் தருகின்றனர் .இது நம் நாட்டுக்கும் வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் .
---------------------------------------------------------------------------------------------------------
சாதாரண மக்களும் உயர் பதவிக்கு வரலாம்: நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஒபாமா உரை
அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து சிகாகோ நகரில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
எனக்கு வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை போட்டி கடுமையாக இருந்தது. ரோம்னி கடும் சவாலாக இருந்தார். இந்த வெற்
றி அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி.
அமெரிக்க குடும்பமான நாம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றாக பாடுபடுவோம். வேலைக்காக போராடும் சூழல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்கு சிறப்பான மாற்றம் காத்திருக்கிறது.
சாதாரண மக்களும் உயர் பதவிக்கு வரலாம். முன்னேற்றப் பாதையை நோக்கி ஒற்றுமையாக செல்வோம். நாட்டின் வளர்ச்சிக்காக ரோம்னியுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். சிரமங்களுக்குப் பிறகே முன்னேற்றம் கிடைக்கும்.
அமெரிக்க மக்கள் கடன் சுமை இல்லாத நிலையை உருவாக்க பாடுபடுவேன். எனது வெற்றிக்காக வலிமையான ஒரு குழு பாடுபட்டது. எனது வெற்றி அமெரிக்க மக்களின் வெற்றி. என்றும் மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்.
Thanks to Malaimalar.
No comments:
Post a Comment