Showing posts with label கோபம். Show all posts
Showing posts with label கோபம். Show all posts

Sunday, August 30, 2015

மனநிலைகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறக் கூடியது...

இன்று இருக்கும் மனநிலையில் மறுநாள் ஒருவரும் இருப்பதில்லை..

மனிதர்கள் நடை முறைகள்
அப்படித் தான்.

"கொஞ்ச முன்னால வரை
ஒழுங்கா தான் பேசினார்..

அதற்கிடையில் அவருக்கு
என்ன ஆகி விட்டது..

இப்போ ஏன் இப்படி சாடுகிறார்..

வரக்கூடியக் கோபத்திற்கு அவன் மண்டையை உடைக்கலாம் னு தோனுது .." என்றெல்லாம் சொல்வார்கள்...

பெரும்பாலும் எல்லோரும் சந்திக்கும் பொதுவானப் பிரச்சினை இது...

எல்லோருமே இப்படித் தான் இருப்பார்களா என்றால்
நிச்சயமாக கிடையாது...

Tuesday, April 7, 2015

'கொலஸ்ட்ரால் கொடுங்க' !

ஒரு முறை ஜப்பார் அண்ணன் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.

'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே ஜப்பார் அண்ணனுக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக ஜப்பார் அண்ணனிடம் , 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றார் , ஜப்பார் அண்ணன் உடனே சொன்னார்,

"அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் "Colestrol FREE" ன்னு எழுதியிருக்கு.."
Sadhiq Prince

தகவல்:  ஜப்பார் அரசர் குளம்

Tuesday, April 30, 2013

உறவு மேம்பட ஊடல் வேண்டும்

தொடர்பு துவங்கியது
தொடர்பு தொடர்ந்தது
தொடர்பு காதலாக தொடர்ந்தது
தொடர்பு உணர்வோடு ஒன்றியது
தொடர்பு முகநூல் வழியே உருவானது
தொடர்பு உறவாக மாறியது
தொடர்பு கணவன் மனைவியாக சேர்ந்தது
தொடர்பு ஊடலை உட்கொண்டது
ஊடல் உறவை வலுப்படுத்தியது
ஊடல் கட்டியவளுடன் ஓட்டச் செய்தது

கோபம் வந்தது பிரிக்க முயன்றது
காதல் வந்ததை பிரிக்க முயன்றோர் தூபம் போட்டனர்
கோபம் அறிவை மங்கச் செய்தது
ஊடல் உறவை கூட்டச் செய்தது

ஊடல் வேண்டும் உறவோடு ,உணர்வோடு ,
உடலோடு ஒட்டிய மனைவியோடு
உறவு மேம்பட ஊடல் வேண்டும்

Wednesday, November 21, 2012

பணிப்பெண் வாங்கிய சாட்டை அடி தண்டனை.


 மன்னன் அறையை சுத்தப்படுத்த சென்ற பெண் வேலையின் அயர்வினால் தன்னையறியாமல் மன்னனின் படுக்கையில் சாய்ந்து உறங்கிவிட்டாள் . மன்னன் தனது படுக்கையில் பணிப்பெண் உறங்குவதைக் கண்டு வெகுண்டு அவளுக்கு தண்டனையாக சாட்டையால் அடிக்க அப்பணிப்பெண்  சிரித்துக் கொண்டே இருந்தாள்.
மன்னனுக்கு கோபம் அதிகமாக நான் அடிப்பது உடலில் நோவு தரவில்லையா! சிரிக்கின்றாயே என்றான்.
 அதற்கு அப்பணிப்பெண் "சில துளி நேரங்கள் தூங்கியதர்க்கே இத்தனை சாட்டையடி ஆனால் காலமெல்லாம் நீங்கள் இதில் உறங்குகின்றீர்கள்  உங்களுக்கு இறைவன் கொடுக்கப் போகும் தண்டனையை நினைதேன்,அதன் நிமித்தம் சிரிப்பு வந்தது" என்றாள்
மன்னன் தன் தவறை உணர்ந்து அப்பணிப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டான்.இறைவனிடன் பாவமன்னிப்பு தேடி வேண்டினார்

இது ஒரு சரித்திர நிகழ்வு

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.-திருக்குர்ஆன் -4:36


Sunday, July 1, 2012

கோபம் கொன்றுவிடும் !

 உயிரினம் அனைத்துக்குமே கோபம் வருவது இயல்பு. சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனுக்கும் கோபம்  வரும். மனிதனைத் தவிர மற்ற இனங்களுக்கு வரும் கோபம் தற்காலிகமானது ஆனால் மனிதனுக்கு வரும் கோபம் பல்வகையானது.அது வந்து மறையும் சமயத்தில் மனதில் நிலைத்து நிற்கும். மின்னல் வேகத்தில் வந்து அதே வேகத்திலும் மறையும், கோபம் வருவது இயல்பு. அது மனித உணர்வுக்கு உள்ளடக்கம். கோபம் வர ஒரு காரணமும் இருக்கலாம். கோபப்படுவதற்கு கோபப்பட்டுத்தானே ஆக வேண்டும். கோபத்தின் அளவுகோல் அதிகமாக அதனால் விளையும் பாதிப்பும் அதிகமாகின்றது. கோபம் அதிகமாக வருவது அதிக இரத்த அழுத்தம் உள்ளவருக்கும்,தாழ்வு மனப்பான்மை உடையவருக்கும்.அதிக கவலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தூக்கம் குறைவாக உள்ளவர்களுக்கும், பிரச்சினையை தீர்க்க வழி தெரியாமல் திண்டாடுபவர்களுக்கும்  இது அதிகம் வர வாய்ப்புள்ளது. கடுமையான கோபம் மனதை பாதிப்பதோடு உயிரையே போக்கி விடும் ஆற்றலுள்ளது,  இது குறிப்பாக அதிக இரத்த அழுத்தம் உள்ளவரின் உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும்.  கோபம் கொள்வதால் .ஆரோக்கியத்தையும் அழித்துவிடும். கோபத்தில் எடுக்கக் கூடிய சில முடிவுகள் வாழ்வையே தலை கீழகாக  புரட்டி எடுத்து விடும் அல்லது வாழ்ந்த சுவடுத் தெரியாமல் அழித்து விடும். 
ஒருவருக்கு கோபம் வந்து அதனால் மற்றவரை பழி வாங்கும் திறனிருந்து ஆனால் கோபத்தை தணித்துக்கொண்டு கோபம் உண்டாகியவரை மன்னித்தாரோ அவர்தான் உயர்ந்தவர். கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்.

Wednesday, April 25, 2012

உண்மையும் பொய்யும் கலந்த கலவை!


கவிதைக்கு அழகு பொய் கலப்புதானாம்.  "கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு"
கவிதையோடு வாழ்கையும் பொய்யாகி விட்டது. கணவன் மனைவிக்கிடையே ,அரசு அலுவலகத்தில் ,முதலாளி மற்றும் தொழிலாளிக்கிடையே , ஏன் தொழும் இறைவனிடத்திலும் பொய்யாக வணங்கும் வாழ்கை வந்ததால் எங்கும் நிறைத்த
பொய் இனிய வாழ்வினை கெடுக்கின்றது. 
எது உண்மை! எது பொய்! என்பதனை கண்டுபிடிக்க ஆய்வு முடிந்தபாடில்லை. அடித்து, உதைத்து, மருந்து கொடுத்து மயங்க வைத்து, மின்சார முறையை கையாண்டு , மனோதத்துவ முறையைக் கையாண்டு அல்லது தவறான முறையில் மகிழ்வை உண்டாக்கி இன்னபிற வகைகளை கையாண்டாலும் உண்மையாக உண்மையான குற்றங்களை மற்றும் அதனை செய்தவர்களை இனம் காண முடியவில்லை. கண்டு பிடித்தாலும் கண்டு கொள்ளாமல் போய்விடுபவர்களை கண்டு பிடிக்கமுடியவில்லை. ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு என்பதால் தானே வந்து ஒரு வேளை உண்மையை ஒப்பித்து விடலாம். கோபமும் தாபமும் நம்மிடையே வந்து போவதால் ஒரு சில நமையும் மற்றும் தீமையும் ஏற்பட வாய்ப்புண்டு. அறிவு ஜீவிகள் ஆத்திரப் பட்டால் சில நல்ல கருத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு