Monday, November 19, 2012

எந்த மனிதனும் திறமையுள்ள மருத்துவரையே நாடுவான்.

பால்தாக்கரேயைக் கார்டூனிஸ்ட் என்றும் காலமிஸ்ட் என்றும் புனிதப் பசுவாக்க முயலும் ஊடகங்கள் அவரது மருத்துவர் ஒரு முஸ்லிம் எனச் சொல்லி பால்தாக்கரேயை மதச்சகிப்புத்தன்மை மிக்கவராகக் காட்ட முயல்கின்றன. தன் உயிரின் மீதும் உடல் நலத்தின்   மீதும் அக்கறையுள்ள எந்த மனிதனும் திறமையுள்ள மருத்துவரையே நாடுவான். தன் உயிர் மீது அக்கறை உள்ளவன் அதைக் காப்பாற்றுவதில் ஜாதி மதம் பார்க்க மாட்டான். அப்படித்தான் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பால்தாக்கரேவுக்கு ஜலீல் பார்கர் மருத்துவர். இதனால் பால்தாக்கரே மனித நேயமிக்க பண்பாளர் என்று நிறுவ  ஊடகங்கள் முயல்வது வெட்கக்கேடு.

மகாராஷ்டிரர் தவிர பிறர் மும்பைக்கு வருவதற்கு  விசா வாங்க வேண்டும் என்று திமிராகச் சொல்லியும்  டெல்லியில் பிறந்ததால் பெருமைப்படுகிறேன் எனச் சொன்ன ஷாருக்கான் டெல்லிக்கே போய் விடட்டும் என்று மிரட்டியும்  தாம்  முதலில் இந்தியன் பின்னரே மும்பைக்காரர் என்று கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் சொன்னதைக் கண்டித்தும் .இந்தியவின்  ஒருமைப்பாட்டைக் கேலிக்குள்ளாக்கிய நபருக்கு இந்திய தேசீயக் கொடி போர்த்தி அரசு மரியாதையுடன் தகனம்.

இந்த நாட்டின் சட்டங்களுக்கோ நீதிமன்றங்களுக்கோ கட்டுப்படாமல்  ரவுடியிஸம் செய்ததால்  போலீஸ் நெருங்கக் கூட அஞ்சும் தாதாவாக இருந்ததால்.....   ..கிருஷ்ணா கமிஷன் முடிவைச் செயல்படுத்த முடியாமல் அரசை மிரட்டியதால்........ அரசு மரியாதையுடன் சவ அடக்கம் என்றால் அடுத்த அரச மரியாதை மும்பை தாதா தாவூதுக்குக் கொடுக்கலாம்

பால்தாக்கரே  குற்றவாளி என  கிருஷ்ணா கமிஷன் முடிவு செய்தும் அவர் மீது வழக்குப் பதியப்பட்டும் கூட அவரை நெருங்க முடியாத சட்டத்தால், அரசால் . பால்தாக்கரேவுக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டு  தகனம் செய்யப்பட்டதோடு நீதியும் புதைக்கப்பட்டு விட்டது.


Read more about புதைக்கப்பட்ட நீதி
http://www.inneram.com/

No comments: