உருதுணையாக இருப்பது தந்தையும் மற்றும் நல்ல சூழலில் வளர்வதுமாக இருக்கும்.தாய் மகளுக்கு தனக்கு தெரிந்த அத்தனை கலையையும் சொல்லித் தருவாள்.தனக்கு தெரியாததையும் அறிந்துக் கொள்ள வழி வகுப்பாள். உடை உடுத்துவது முதல் சமைப்பதுவரை தெரியவைப்பாள். பொதுவாக தாயின் குணமே மகளுக்கும் இருக்கும். அதனால்தான் தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை என்பார்கள். ஒரு தகப்பன் கெட்டவனாக இருந்தால் அதனால் அந்த தாய் படும் அவதியினைப் பார்த்து அந்த தாய்க்கு பிறந்த குழந்தைகள் பொறுப்புடன் நடப்பார்கள். தாய் மார்க்கப் பற்றும் நன்னடத்தையும் கல்வி அறிவும் பெற்றிருக்க தனது குழந்தையையும் சிறப்பாக வளர்ப்பாள். அந்த குழந்தை வளர வளர ஒரு ஆசிரியர் அதற்கு அவசியம் தேவைப்படுகிறது. இந்த உலகில் இறைவனைப் பற்றியும் அவனது படைப்புகளின் ஆற்றல் அறிய வருகின்றான் .கல்வியின் மீது நாட்டம் கொள்கின்றான்
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! 20:114.-குர்ஆன்
என்ற திருமறையின் வார்த்தையை மனனம் செய்து அதன் நம்பிக்கையோடு படிக்கும் போது அவனது கல்வி அறிவு வளர்சியடைகின்றது
எது நல்லது எது கெட்டது என்பதனை தெரிந்து நல்லது நாடி கெட்டதை விட்டு விலகி வாழ முயல்கின்றான். அந்த ஆசிரியரும் ,தாயும்,தந்தையும் மற்றும் உடன் இருப்போரும் நல்லவர்களாக இருந்து விடும்போது அவனது வாழ்வும் சிறப்படைகின்றது . அதுவே மாற்றமாக இருக்க நேரிட்டால் அனைத்தும் கெட்டு அவனது வாழ்வு மோசமாகிவிடும் . அதனால் நாம் ஆசிரியரை தெரிவு செய்வதில் கவனம் தேவை.
மனிதனுக்கு அறிவை தந்த இறைவன் தனி மனிதனுக்குள் அடைத்து வைக்காமல் மற்றவருக்கும் பகிர்ந்தளிப்பதையே விரும்புவான். அது தேடிக் கிடைக்கும் போது சிறப்பாக அமையும்.
No comments:
Post a Comment