Thursday, November 1, 2012

பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி -3)


நான்  பல நாடுகள் பார்த்து வர சுற்றுலா சென்றபோது  பாரிசிலிருந்து லண்டனிலிருந்து செல்வதற்கு விசா வாங்க பாரிசில் உள்ள லண்டன் விசா வாங்க லண்டன் விசா தரும் அலுவலகம் சென்றேன் . விசாவிற்கான தொகையை முதலிலேயே கட்டி விட வேண்டும் .விசா கிடைக்க வில்லையென்றால் கட்டிய பணத்தை திரும்பப் பெற முடியாது என்பதனை   அறிவிப்புப் பலகையில் குறிப்பு எழுதப்பட்டிருந்தது.

எனது முறை வந்ததும் நான் விசா வழங்கும் அதிகாரியை சந்தித்தேன் .
அவர் கேட்ட முதல் கேள்வி " எதற்காக லண்டன் போகிறீர்கள்"
'லண்டன் சுற்றிப் பார்க்க செல்கின்றேன்' எனது பதில்.
' உங்கள் நாட்டில் இந்தியாவிலேயே விசா வாங்கி வந்திருக்கலாமே'
'நான் பாரிஸ் வந்தது எனது உறவினரைப் பார்க்க ஆனால்  பாரிஸ் வந்த பின்தான் லண்டன் அருகில் இருப்பதால் லண்டனையும்  போய்  பார்ப்போம் என்ற ஆர்வம் வந்தது' .
அவர்களது எண்ணம் லண்டன் வருபவர்கள் அங்கேயே வேலை செய்ய தங்கி விடுவார்கள் என்பதுதான்.


அவர் சொன்னார் ' உங்களுக்கு இங்கு விசா தர முடியாது'
"விசா தர முடியாததற்கு முறையான காரணம் சொல்லுங்கள்" ' நான் காமென்வெல்த்  நாட்டைச் சார்ந்தவன் .உங்கள் நாட்டு சரிதத்தை முழுமையாக படிதிருக்கின்றேன் அதுவும் நான் சட்டம் பயிலும்போது உங்கள் நாட்டு அரசியல் சட்டம் படித்துள்ளேன். நான் உங்கள் நாடு வந்து எங்கள் பணத்தை செலவு செய்கிறோம் அது உங்களுக்கு அந்நிய செலாவணியை  ஈட்டுத்  தருகின்றது அது உங்களுக்கு ஆதாயம்தானே' என்றேன் .
உங்கள் பாஸ்போர்ட் திருச்சியில் வழங்கப்பட்டுள்ளது .(1-Sep 86)அதற்கு ஒரு காரணம் உள்ளது அதனால் உங்களுக்கு தர இயலாது' என்றார் .(31-10-90)

சரி அப்படியென்றால் நான் கட்டிய பணத்தினை திருப்பத் தாருங்கள் என்றேன்.
அவர் மறுத்தார் , நான் தொடர்ந்து அவரிடம் வாதம் செய்ய மேல் அதிகாரி அம்பாசிடரிடம் அவர் என்னை அனுப்பினார் .


நாட்டு  தூதர் (ambassador) மேல் அதிகாரி நான் சொல்லும் காரணங்களை முறையாகக் கேட்டுக் கொண்டு அவர் சொன்னார் . பலர் திருச்சியில் தவறாக முகவரி கொடுத்து லண்டன் வந்து விட்டார்கள் . அதனால் உங்களைப் பற்றிய சரியான விவரம் திருச்சி பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகத்தில் அறிந்துக் கொண்டு மூன்று நாட்கள் கழித்து  விசா தருகின்றோம் அதுவரை பொறுத்திருங்கள்'. என்றார் ,
நான் சொன்னேன் 'அதுவரை என்னால் பொறுத்திருக்க முடியாது, நீங்கள் விசாவுக்காக கட்டிய பணத்தை திருப்பித் தாருங்கள் .நான் தரும் பாரிஸ் முகவரிக்கு தெரிவியுங்கள் நான் இங்கு பாரிசில் இருந்தால்  மூன்று நாட்கள் கழித்து  விசாவுக்கு பணம் கட்டி விசாவுக்கு அனுமதி கேட்கின்றேன் என்றேன்,
எனது முறையான வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டு சிறப்பு அனுமதியாக நான் கட்டிய பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி  ஆணையிட்டார் . இந்நிகழ்வு  எனக்கு மனநிறைவை தந்ததுடன் மன தைரியத்தையும் தந்தது .

பாரிசில் இருக்கும்போது ஒரு மாத பிரயாணமாக பாரிசிலிருந்து காம்பியா நாடு சென்றிருந்தேன்.  எனது முந்தைய பாஸ்போர்ட்களை( முதலில்  வாங்கிய பாஸ்போர்ட்August 67) தவறுதலாக எனது நண்பர் வீட்டில் காம்பியாவில் விட்டு வந்து விட்டேன் .அதில் பல நாடுகள் சென்ற விபரமும் இருந்தது .அது எனக்கு விசா கிடைக்க உதவியிருக்கும். 

இம்மாதிரி நம் நாட்டில் நடந்தால் இங்குள்ள அதிகாரிகள் பொறுமை காட்டுவார்களா? அந்த காலம் எப்பொழுது வரும்!

நாம் வெளிநாடு செல்லும்போது கையில் அந்நிய செலாவணி காசோலை வைத்திருப்பது மிகவும் உதவும் .நாம் உண்மையாக நடந்துக்கொண்டால்  அது நமக்கு மன தைரியத்தை தரும்
 பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி -1)

பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி-2)

6 comments:

சமூக விழிப்புணர்வு பக்கங்கள் said...

Masha Allah !

Good informations for who is intend to travel aboard



VANJOOR said...

VERY INTERESTING.

EXCITING.

THANKS FOR SHARING.

BEST REGARDS.
VANJOOR

mohamedali jinnah said...

அன்பான மதிப்புமிக்க பெரியவர்கள் தந்துள்ள கருத்துரைகள் மகிழ்வைத் தருகின்றது .
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

ஜெய்லானி said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
//விசா தர முடியாததற்கு முறையான காரணம் சொல்லுங்கள்" ' நான் காமென்வெல்த் நாட்டைச் சார்ந்தவன் .உங்கள் நாட்டு சரிதத்தை முழுமையாக படிதிருக்கின்றேன் அதுவும் நான் சட்டம் பயிலும்போது உங்கள் நாட்டு அரசியல் சட்டம் படித்துள்ளேன். நான் உங்கள் நாடு வந்து எங்கள் பணத்தை செலவு செய்கிறோம் அது உங்களுக்கு அந்நிய செலாவணியை ஈட்டுத் தருகின்றது அது உங்களுக்கு ஆதாயம்தானே' என்றேன் .//

சரியான பாயிண்ட் :-) , நம்மில் பலருக்கு அதிகாரிகளிடம் சரியான முறையில் பேசத்தெரியாததால் பலன்கள் கிடைப்பதில்லை .

உங்களை போல எல்லோருமே கேள்வி கேட்டால் விசா கிடைக்கிறதோ இல்லையோ கட்டிய பனம் திரும்ப கிடைப்பது உறுதி :-)

MARECAN said...

Walaykum Salam

wonderful clip..now you are big creator...ma shaa allah

mohamedali jinnah said...

ஜெய்லானி அண்ணன் மற்றும் MARECAN அண்ணன் இருவருக்கும் மிக்க நன்றி . தங்கள் கருத்துரைகள் ஊக்கம் தருகின்றது
பாரிஸ்,லண்டன், காம்பியா மூன்று வீடியோவும் கட்டுரைக்காக உள்ளது .தாங்கள் பார்த்திருக்கலாம்