Friday, November 9, 2012

இல்லறம் சிறக்க சாப்பிடுவோம் நண்டு கறி!

சீனர்கள் விரும்பி சாப்பிடும் 'ஆன்ம புஷ்டி விருத்தியாகும்' தமிழக நண்டுகள்

கையில வெண்ணெய்ய வெச்சுக்கிட்டு, நெய்க்கு அலைஞ்ச கதை மாதிரி, நம்ம ஊர்லேயே நண்டு இருக்கும் போது, வெளிநாட்டு வயாகராவ, விவரம் தெரியாம, தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை.
சீனாக்காரங்களுக்கு முக்கியமான ''எண்டர்டைன்மென்ட்'' மனைவிங்க தான்! அதனாலத் தான் என்னவோ உலகத்திலேயே மிகப் பெரிய ஜனத்தொகைன்னு பேரு வாங்கி வச்சிருங்கிறாங்க. இது எப்படி...? எல்லாம் நண்டு செய்ற வேலை தான்!


நண்டுக்கறி சாப்பிட்டா ரொம்ப இயற்கையாவே ஆன்ம புஷ்டி கிடைக்கும். தாம்பத்ய வாழ்க்கை `ஜோரா' இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

நண்டுக்கறியும், குழம்பும் ஆண்களுக்கு மட்டும் சந்தோஷத்தைக் கொடுக்கும் விஷயம் அல்ல. பெண்களுக்கும் இது ஏக உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பது முக்கிய தகவல்.

இப்படி சீனாக்காரங்க நண்டு விஷயத்தை எப்படியோ மோப்பம் புடிச்சுட்டு வந்து, இப்ப, தமிழ்நாட்டுல இருந்து ஏகப்பட்ட நண்டு விமானத்துல பறந்துக்கிட்டு இருக்கு.

காரைக்கால் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2002ல இருந்து புதுசா நண்டு வளர்க்க ஆரம்பிச்சு, கடந்த 2006ல 450 கிலோ நண்டும், 2007ல 675 கிலோ நண்டும் சீனாவுக்கு போயிருக்கு.

பொதுவா ஒரு நண்டு அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை இருக்கும். அரை கிலோ நண்டு விலை ரூ.270. ஒரு கிலோ நண்டு விலை ரூ.500 (இது பழைய விலை... இப்போ...)

சீனாக்காரங்களுக்கு புரிஞ்ச ரகசியம், நம்ம ஆட்களுக்கு எப்படி தெரியாம போச்சுன்னு தெரியலை. பரவாயில்லை. இன்னைக்கு ராத்திரியாவது மனைவியை சந்தோஷப்படுத்த நண்டுக்கறி சாப்பிடுங்க!

இல்லறம் சிறக்க சாப்பிடுவோம் நண்டு கறி!

"அல்லாஹ் எதை ஹலாலாக்கினானோ அது ஹலால். எதை ஹராமாக்கியுள்ளானோ அது ஹராம். எது பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டானோ, அது உங்களுக்காக அவன் விட்டுக் கொடுத்ததாகும். (அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸி ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : திர்மிதீ, இப்னுமாஜா)
http://www.nidur.info/

1 comment:

சேக்கனா M. நிஜாம் said...

குழந்தைகள் அதிகம் விரும்புவது நண்டாகத் தான் இருக்கும் :)