Tuesday, November 20, 2012

நாம் சமைத்து கொடுப்பது பெரிய தண்டனையா!


பொருள் ஈட்ட குடும்பத்தை விட்டுப் பிரிந்து இடம் மாறி போக வேண்டிய நிலை.
அங்கு  பின் அம்மா விசாரிப்பது ' தம்பி எப்படிடா இருக்கே . உடம்பை பார்த்துக்கோ . நேரத்திற்கு சாப்பிடு'
'ஏதோ இருக்கேன்மா .ஹோட்டல் சாப்பாடுதான் சரியில்லை வயிறு கோளாறு பண்ணுது அதனாலே அறையிலே தங்கி இருக்கும் நாங்கள் சேர்ந்து நாங்களே சமைத்து சாப்பிடலாமென்று  இருக்கோம்' மகன்.
 'உடம்பை பார்த்துக்கோப்பா' அம்மா
நேரம் ஆச்சும்மா வேலைக்கு போகணும் அப்புறமா பேசுறேன். மகன்.
இது நாம் கேட்ட உரையாடல்தான்.

விடுமுறைக்கு  ஊர்  வந்த பின்...
'வயிறார சாப்பிட்டு வருசமாச்சு.'  இப்படி சிலர்.
வெளிநாடு சென்று ஊர் வந்தால் கல்யாண வீட்டு பிரியாணியை சாப்பிட மிக்க ஆர்வம் . என்னதான் வீட்டில் பிரியாணி சமைத்தாலும் பண்டாரி வைத்து பெரிய  செம்பு சட்டியில் ஆக்கிய பிரியாணியை சாபிடுவது மிகவும் சுவைதான்.
உண்பது வாழ்வதற்கு . வீட்டில் இருக்கும் பொழுது நமக்கு வகை வகையாய் சமைத்து கொடுக்க வீட்டில் மகளிர் அந்த வேலையில் ஈடுபடுவதால் நமது வேலை சாபிடுவது மட்டும்தான் . வீட்டை விட்டு பொருள் நாடி வெளிநாடு சென்ற பிறகு உணவு விடுதியில்  சாப்பிட முற்பட்டால் திரட்டிய பணமும் போய் உடலும் பாதித்துவிடும் . நாமே சமைத்து சாப்பிடும் பொழுது மன மகிழ்வும் உடல் நலமும் கிட்டுவதோடு பணமும் சேமிக்க முடியும் .
மனைவியுடன் “உணவில் உப்பில்லை!  அல்லது இவ்வளவு காரமா! ,உனக்கு உன் அம்மா சமைக்க கற்றுக் கொடுக்க வில்லையா! ” இப்படி ஏக தாளமாக இளக்காரமாக பேசினோம். அதற்கு அவள் “ஏன் நீங்கள் சமையுங்களேன்” என்று ஒரு நாள் கூட சொன்னதில்லை . நாமும் ” நான் சமைக்கிறேன் பார் ” என்று சொல்ல மனமும், தைரியமும் இல்லை . அப்படி நாம் சமைத்து கொடுப்பதுதான் அவளுக்கு கொடுக்கும் பெரிய தண்டனையாக அமைந்துவிடும் என்பது மனைவிக்கு தெரிந்திருப்பதால் அவள் “ஏன் நீங்கள் சமையுங்களேன்” என்று ஒரு நாள் கூடசொல்ல மாட்டாள்.

பெண்களுக்கு தனது தாய் சொல்லித் தந்த சமையல் கலைதான் தெரியும்.  அதில் புதுமை காண நாட்டம் இருக்காது .ஆனால் ஆணுக்கோ புதுமை நாடும் நாட்டம் இருக்கும் . 'ஆட்டுக்கறி ஆனத்தில் முருங்கக்காய் போடு என்று சொன்னால்' அது அவர்களுக்கு அது பிடிக்காது .நாமோ அப்படியும் செய்து சாப்பிட்டுப் பார்ப்போமே என்ற ஆவல் அதிகமாகும் . அது மாதிரி சமைத்து பார்த்து சாப்பிடும்போது நமக்கு மிகவும் சுவையாக இருககும் .காரணம் அது நம்மால் உருவானது .பெண்கள் அதனை விரும்பினாலும் சொல்வதற்கு சிறிது தயங்கலாம். பின்பு அவர்களே அதனை தொடர்வார்கள்

சமைக்கத்  தெரியாதே என்ற கவலை வேண்டாம் . இதோ சில வீடியா உங்களுக்கு.   சமைத்து மகிழ்வோடு உணவு அருந்தி வாழுங்கள் .
இப்பொழுது மனைவியுடன் போட்டி போடலாம்!




No comments: