வார்த்தைகளை நேசிக்கிறேன்.ஆனால் பிழையில்லாமல் எழுதத் தெரியாது
கற்பனை வரும் எழுத முற்பட்டால் வார்த்தைகள் வராது
படிப்பேன் , கல்லூரி வரை படிக்க வாய்பில்லை கவிதை படிப்பேன் கவிதை எழுத யாப்பிலக்கணம் தெரியாது
பேசுவேன் ,பாடவும் ஆசை , குரல் வளமில்லை
அழகை கண்டு மயங்குகின்றேன் , நான் அழகானவனில்லை
கடற்கறையில் காதல் செய்கிறார்கள், யாரும் என்னை கண்டு கொள்ளவில்லை
திருமணம் செய்ய ஆசை, யாரும் பெண் தர விரும்பவில்லை
குழந்தைகள் மீது கொள்ளை ஆசை, அவர்கள் மிட்டாய் கேட்கிறார்கள்
மிட்டாய் வாங்க கடைக்குப் போனால் பணம் கேட்கிறார்கள்
நண்பர்கள் சேர்ந்தார்கள், அவர்களோடு இணக்கமாக இருக்கத் தெரியவில்லை
பணம் சேர்க்க ஆசை, அதற்கு தவறான வழி தெரியாததால் பணம் சேர்க்க முடியவில்லை
ஊரைச் சுற்றி உலகத்தை சுற்றிப் பார்க்க ஆசை அதற்கு மந்திரியாக வேண்டும்
அரசியலில் ஈடுபட்டு மந்திரியாக விருப்பம், வாக்குசீட்டில் என் பெயர் இல்லை.
அனைத்திலும் ஆசை, ஒன்றுமே எனக்கு கிடைப்பதில்லை
கிடைத்ததை வைத்துக் கொள்வற்கும் அச்சமாக உள்ளது திருடன் திருடி விடுவானென்று
நீண்ட வாழ்வுக்கு ஆசைப்பட்டேன் , மின்சாரமில்லாமல் கொசுக்கடியால் வியாதி வந்து சேர்ந்தது
இனானமாக அனைத்தும் தந்தார்கள் ஊரெங்கும் மருத்துவரில்லா வைத்தியசாலை உட்பட அரசுக்கோ மக்களைப் பற்றி அக்கறை இல்லை .நானும் மக்களுள் ஒருவன்
நான் ஏன் என்னைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும் !
மறு லோகம் நினைத்து இந்தலோகத்தில் வாழ்வோர் சிலர்
இந்த லோகத்தையே நினைத்து வாழ்வோர் சிலர்
இறு லோகமும் நினைத்து வாழ்வோர் சிலர்
இத்தனையும் நினைத்தவர் மின்சாரத்தை நினைக்கவில்லை
நம்மை மின்சாரம் நினைக்க வைத்துவிட்டது .
நீ என்ன மந்திரவாதியா! நீ நினைத்த போதெல்லாம் நான் வர
உன் சம்சாரமே நீ கூப்பிட்ட நேரத்தில் வர மறுப்பாள்
நான் உன் சம்சாரமும் அல்ல, நீ என் கணவனும் அல்ல
எனக்கென்று ஒரு மரியாதையுண்டு
முன்பே உன் அழைப்பின் திட்டத்தில் நான் இருந்திருக்க வேண்டும்
ஆசை வேண்டாம் கிடைப்பது கிடைக்கட்டும்
ஓசை வேண்டாம் புலம்பல் வேண்டாம்
நேசம் வேண்டும் இறைவன் நேசம் வேண்டும்
அவன் கொடுப்பது கொடுக்கட்டும்
தேடல் வேண்டும் கொடுப்பது அவனாக இருக்கட்டும்
No comments:
Post a Comment