Tuesday, November 13, 2012

முழுமையான நெருக்கம் கிடைக்க முடியுமா!

 ஆத்ம நண்பன் , உயிருக்கு உயிரான தோழன், இவர்களிடம்  முழுமை உண்டா!

அறிவை சொல்லித் தந்த ஆசிரியர் எனப்படுவோர்  இந்த வட்டத்தில் வருவாரா!

இனிய வாழ்வை தருபவராக கருதப்படும் மனைவியினால் முழுமையான வாழ்வை பெற்றுவிட முடியுமா ! 

பாசத்தை தந்த பெற்றோர் நம் மனதில் முழுமை பெற்று விடுவார்களா!

யாரிடம்தான் முழுமையான நெருக்கம் கிடைக்கும்!

நண்பனிடம்  கருத்து ஒற்றுமை கிடைக்கும். உயிரைக்கொடுத்து உதவுவார்கள் பெற்றோர்கள். மனைவி நமக்கு நல்லது கெட்டதுகளில் பங்கு பெறுவாள் மற்றும் உடலோடு ஒன்ற உடலுறவு தருவாள் .  பின் யாரிடம்தான் முழுமை கிடைக்கும்.!
முழுமையான நெருக்கம் கிடைக்க ஆசைப்பட்டு நாம் நொறுங்கி விட வேண்டியதுதான்.
முதுமை கிடைத்தாலும் முழுமை கிடைக்காது.
முழுமையான நெருக்கம் என்பதின் இலக்கணம்தான் என்ன ?
முழுமை என்பது ஆன்மிகம் ,உணர்வு அறிவு உடல் உறவு இத்தனையும் உள்ளடக்கியதுதான்

ஆன்மிகம் அடங்கிய ( spiritual)  உணர்ச்சி வயப்பட்ட (emotional  ) அறிவு சார்ந்த (intellectual ) உடல் உறவு (physical relation  ) இத்தனையும் உள்ளடக்கிய உறவோடு நமக்கு கிடைக்கும் மனிதரை பெற முடியுமா?  


முழுமையாக நம்பி முற்றிலும் ஏமாற்றம் ! நேசமும்  பாசமும்  நிலைத்து நிற்காது
கிடைத்ததில் மகிழ்வு கொண்டு தொடர்ந்த வாழ்வில் தொய்வில்லாமல்   நிறைவு காண்பதில்தான் வாழ்வில் நிம்மதி
அன்பு செலுத்துவது  மற்றவரிடமிருந்து அதை மற்றவரிடமிருந்து எதிர் பார்க்காமல் இருப்பதில் மகிழ்வு
நம்பிக்கை கொள் நடப்பது நடந்தே தீரும் என்ற எண்ணத்தோடு!
வேண்டியது கிடைக்கவில்லையெனில் அதுதான் நியதி!

இறை பக்தி நம்மிடம் இருக்கலாம் ஆனால் புகழுக்காக செய்யப்ப்படும் தர்மம் அதன் செயல்பாட்டு முழுமை காண முடியாது . இறைவன் நமது  மனதைத்தான் பார்க்கின்றான் . இறைபக்தியுடன் செயல்படுகின்றான் இருப்பினும் அதில் குறை இருந்தாலும் அவன் ஏற்றுக் கொள்வான் . புகழுக்காக செய்யப்படும் தர்மமும் மற்றவர் கவனதிர்க்காக  வேண்டப்படும் வேண்டுதலும் இறைவனது  கணக்கில் வந்து சேராது .

நம்பு இதில் முழுமை இருப்பதாக . கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவது  உயர்வு . முழுமையும் நெருக்கமும்   கிடைத்ததாக மனதில் ஏற்றுக் கொள்வது வாழ்வின் அடித்தளம்.


இறப்பில்தான் முழுமை உண்டு அது பிறப்பிலும் இல்லை.
இறைவனின் ஆற்றலை நம்பு உண்மை விளங்கும்.
இயன்றதைச் செய் மற்றதை இறைவனிடம் விட்டு விடு
இறைவனை நேசி இன்பம் காண்பாய்.

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். -1 புகாரி ஹதீஸ்

  அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.- 2:112.குர்ஆன்

. 'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார் -13புகாரி ஹதீஸ்

No comments: