Showing posts with label மனைவி. Show all posts
Showing posts with label மனைவி. Show all posts

Friday, January 16, 2015

புரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா? மனைவியா?

 
 
கணவன் மனைவியையும்
 மனைவி கணவனையும்
 மூச்சுக் காற்றினைப் போல
 தீர்ந்தே போகாமல்....
 தொடர்ந்து....
 இடையறாது
 மன்னித்துக்கொண்டே இருக்கும்போது
 அவர்கள்
 மீண்டும் புதிதாகப் பிறக்கிறார்கள்
 மீண்டும் புதிதாகக் காதலில் வீழ்கிறார்கள்
 மீண்டும் புதிதாகக் கல்யாணம் கட்டிக்கொள்கிறார்கள்
 ஆகையினால்
 மீண்டும் புத்தம் புதிதாக
 அந்த முதலிரவுச் சொர்க்கங்கள்
 தேன்நிலவில் நிறைந்து நிறைந்து
 உடலெங்கும் மனமெங்கும்
 உயிரெங்கும் வழிந்தோடுகின்றன.
 
அன்புடன் புகாரி 

புரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா மனைவியா


கணவனை அவன் தேவைகளை
மனைவியால் புரிந்துகொள்ள முடியுமா?

மனைவியை அவள் தேவைகளை
கணவனால் புரிந்துகொள்ள முடியுமா?

கொஞ்சம் முடியலாம்
முழுமையாய் முடியாது.
அதுதான் உண்மை

ஆக...
கணவனும் மனைவியும்
புரிந்துகொள்ள முடியாது
என்பதைப் புரிந்துகொண்டு
அபரிமிதான அன்பு செலுத்தினால்
அதுதான் உண்மையான
புரிந்துணர்வு

Wednesday, July 9, 2014

இந்திரா கிளப்பிய விவாத சுனாமி


மனசுக்குள் பெருமையும் சந்தோஷமும் வண்ணத்து பூச்சிகளாக சிறகடித்து பறந்தன.

இப்படி பரவசப்பட்டு நீண்டநாள் ஆயிற்று. வீட்டுக்குள் திரும்பி காரை நிறுத்தும்போது வாட்சை பார்த்தாள். மணி 10. நள்ளிரவுக்கு முன் வீடு திரும்பியது கடைசியாக எப்போது என்று நினைவுக்கு வரவில்லை. ’அம்மா ஆச்சரியப்படுவாள்’ என்று நினைத்தவாறு இறங்கியவள் பார்வை முன்கதவை நோக்கி வளைந்து செல்லும் படிக்கட்டில் ஏறியது.
அம்மா நின்றிருந்தாள். குபுக்கென்று பொங்கி வழிந்தது உற்சாகம்.

Monday, May 26, 2014

அப்பனாவது விளையாட்டா ! பிரசவ நேரத்தில் ஹீரோ இப்படியும் அப்படியுமாக டென்ஷனாக அலைந்துக் கொண்டிருப்பார்.

ஹீரோயினுக்கு பிரசவம் என்றால், லேபர் வார்டு வாசலில் ஹீரோ இப்படியும் அப்படியுமாக டென்ஷனாக நகம் கடித்தபடி அலைந்துக் கொண்டிருப்பார்.

நிஜவாழ்க்கையில் இப்படியா நடக்கிறது, இன்னும் ஏன் இந்த இத்துப்போன சீனை எல்லா படத்திலும் வைக்கிறார்கள் என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இதே நேரத்தில் நானும் அப்படிதான் அலைந்துக் கொண்டிருந்தேன். வயிற்றை தள்ளிக்கொண்டு, என் கையைப் பிடித்து அழுத்திவிட்டு திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே பரிதாபமாக ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த மனைவியின் முகம் பிரேம் போட்ட படமாய் நெஞ்சில் அப்படியே இன்னும் மாட்டியிருக்கிறது. கிட்டத்தட்ட அரைமணி நேர பரிதவிப்பு. கதவை திறந்துக் கொண்டு நர்ஸ் ஒருவர் டென்ஷனாய் வெளியே வந்தார். ஏதாவது சொல்வார் என்று எழுந்து நின்று அவரது முகத்தை பார்க்கிறேன். என்னை கண்டுகொள்ளாமல் வேகமாக கடந்துச் சென்றார். “ஏதேனும் சிக்கல் ஆயிட்டிருக்குமோ?” என்று படபடவென மனசு அடித்துக் கொண்டது.

Wednesday, April 30, 2014

இடப் பெயர்ச்சி

FBயில் Pa Raghavan ஐயா பற்ற வைத்தார் விருத்தம் எழுத. பற்றிக் கொண்டு எரிகிறது இப்போ:)

இடப் பெயர்ச்சி

மனைவியுடன் படம்பிடிக்க மனதில் எண்ணி
மாலையிலே படக்கடைக்கு முனைந்து வந்தேன்
வினையதுவாய் இடப்பக்கம் அவளே நிற்க
விரைந்துவந்த கடைத்தோழர் வேண்டாம் என்றார்
துணையவளுக்(கு) 'இடங் கொடுக்க கூடா' தாமே
துடித்தெழுந்தாள் ஐதீகம் தாக்கக் கண்டு..
எனையிழுத்தே இடந்தள்ளி வலமே வந்து
எப்பவுமே மனைவியரே 'Right'டு என்றாள்

Saturday, February 15, 2014

குடும்பம் மகிழ்வாய் இருக்க


மனைவி  மீது  மென்மையான புரிதல் மற்றும்  நட்பு இருக்க வேண்டும் .

பண்பட்ட, மென்மையான முறையில் இனிய வார்த்தைகளைக் கொண்டு    மனைவியுடன் பேச வேண்டும் .

மனைவி  சோகமாக கவலையாக  இருக்கும்  போது அவளது கவலையை நீக்க முயற்சிக்க மனைவியுடன் நேசம் காட்ட வேண்டும்.   இரக்கம் கொண்டு அவளை சந்தோஷப்படுத்த  வேண்டும் .  சிறந்த நண்பராக  மனிவியின்  பிரச்சனைகளை தீர்க்க  மனைவிக்கு  ஆதரவாக  இருக்க வேண்டும் .

 குழந்தைகள் கல்வி கற்க அவளுக்கு உதவ வேண்டும் .
மனைவி செய்த தவறுகள் பற்றி முரட்டுத்தனமாக கோபம் கொண்டு வார்த்தைகளை அள்ளி வீசக் கூடாது.   அவளுக்கு  அமைதியாக சிகிச்சை செய்வது போல் செயல்பட வேண்டும். 

அவள்  கோபப் படும்போது  அமைதியாக இருக்க வேண்டும் .
நாம் தவறு செய்திருந்தால்  மன்னிப்பு கேட்க வேண்டும் . மனைவியிடம் மன்னிப்பு கேட்பதை மரியாதை குறைவாக கருதக் கூடாது. அன்பை அதிகப் படுத்துவது ஒரு உயர்ந்த செயல்தான் .அது ஒரு  பாக்கியமாகும் .
 " என் கணவர்  யாரையும் விட என்னை நேசிக்கிறார் . " என்று சொல்லும்படி ,நினைக்கும்படி வாழ்வது உயர்வானதே

Saturday, December 7, 2013

கவிதை தொகுதி .... ஆரம்பம்..!!

முதல் பத்து - 01
--------------------------------

மூணு பைசாவுக்கு
அஞ்சு மாங்கா பிஞ்சு !

சித்ரா பௌர்ணமியில்
கீரன் சொற்பொழிவு !

கோடை விடுமுறையில்
சைக்கிள் "ரிம்மின் "
டக்கர டக்கர !

ஓடியொளிந்த
தம்பி - தங்கைகளின்
ச்சீ..யொலிகள்..

பின்பான பாச அழைப்புகள்..!!

Sunday, November 10, 2013

இல்லறம் இனிமையாக இருக்க வழிகள்

கணவன், மனைவி இருவருக்குள்ளும் நல்ல understanding இருக்கனும்.. விட்டுக்கொடுக்கும் மனபக்குவம் வேண்டும்.. அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. கணவன் - மனைவி இருவருக்குள்ளும் விட்டுக்கொடுத்து போக வேண்டும்.இப்போது இல்லறம் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இனிமையாக செல்ல வழிகளை பார்க்கலாம்.

பெண்களுக்கு :

• உங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்க. அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக்கொடுங்க.

• வேலைக்கு போயிட்டு வரும் ஆண்களிடம் வீட்டுக்கு வந்தவுடன் படபடவென்று வீட்டில் நடந்த விசயங்களை உளர கூடாது..அலுவலகம் முடிந்து கணவர் வீடு வரும்போது முகத்தில் புன்னகை ஏந்தி ஆர்வமுடன் அவரை எதிர்நோக்க வேண்டும். எந்த நேரத்தில் என்ன விசயம் பேசினாலும் பொறுமையுடன், இனிமையாகவும் அமைதியாகவும் எடுத்து சொல்லனும்.

Saturday, November 9, 2013

கணவன் உண்ட பிறகு அவரது விரலை மனைவியும், மனைவி உண்ட பிறகு அவரது விரலை கணவனும் சூப்புவது ஈர்ப்பை தரும்

சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும்

"சாப்பிட்டு முடித்தவுடன் உங்கள் விரல்களை நீங்களோ அல்லது மற்றவரோ (உங்கள் விரல்களை) சூப்பாதவரை அந்த இடத்தை விட்டு எழுந்திருக்காதீர்கள்" என்பது நபிமொழியாகும்.

நாம் நமது விரலை சூப்புவது என்பது அனைவரும் புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இங்கு மற்றவர் நம் விரலை சூப்புவது குறித்தும் கூறப்பட்டுள்ளது எனில் அந்த மற்றவர் யாராக இருக்க முடியும்? மனைவியாகத்தானே இருக்க முடியும்!

Thursday, October 3, 2013

மயக்கம்.....!

தாங்கிய தாய் வயிற்றில் ஒரு மயக்கம்!
தரணி மண் மீது விழுந்தபின் ஒரு மயக்கம்!

விழுந்த வேதனையில் விடியும்வரை ஒரு மயக்கம்!
விடிந்தபின் பசி கொடுக்கும் ஒரு மயக்கம்!

பசி நீங்க பருகும் தாய்ப்பால் ஒரு மயக்கம்!
தாய்ப்பால் நின்றவுடன் தானாக வரும் ஒரு மயக்கம்!

தகுதிகாண் பருவம்வரை தாங்காத ஒரு மயக்கம்!
தக்கதொரு காலத்தில் கல்வியே ஒரு மயக்கம்!

வளர்ந்த பின் பருவ காலத்தில் ஒரு மயக்கம்!
வடிவழகு மனைவி மீது ஆசை ஒரு மயக்கம்!

Wednesday, June 19, 2013

தாய்மார்களின் கூச்சல் தாங்க முடியவில்லை !

'அய்யையோ !' என்ற மனைவியின்  அலறல் கேட்டு கணவன் கத்துகிறார்
'ஏன் இப்படி கத்துகிறாய்' என்று
இங்கே வந்து பாருங்கள் உங்கள் பிள்ளைகள் ( அப்பவும் நம்ம பிள்ளைகள் என்ற வார்த்தை வருவதில்லை) பண்ற அநியாயத்தை ! என்று கதறுகிறாள்
( அரசியல் குற்றவியல் சட்டப் பிரிவு தண்டிக்கப் படும் குற்றத்தைப் போல் )
கணவன்  மனைவியின்  அலறல் கேட்டு ஓடி வந்து பார்த்து
'இதற்கா இவ்வளவு கூக்குரல்' என மனைவியை கண்டிக்கிறார்
'ஆமா உங்களுக்கு என்னைத்தான் கண்டிக்கத் தெரியும். பெத்தவளுக்குத்தானே பிள்ளையின் அருமைத் தெரியும் ' என்று முனங்கிக் கொண்டு பிள்ளைகளை கண்டிக்கிறாள் தாய் .

அப்படி என்னதான் குழந்தைகள் குற்றம் செய்து விட்டார்கள்!
படங்களைப் பாருங்கள்



Friday, June 7, 2013

அவசரமாய்த் தொடர்பு கொள் !


அவசரமாய்த் தொடர்பு கொள் !
தகவல் வந்த திசைக்கும்
எனக்கும் இடையே
சில
மாநிலங்கள் இருந்தன.

நேற்று வரை
இம்மென்றால் இறக்கி வைத்த
இணையம்,
இன்று உம்மென்று இருந்தது.

என் மின்னஞ்சல்
அச்சு ஒடிந்து போன
ஒற்றைச் சக்கரத் தேராய்
மலையடிவாரத்தில் மண்டியிட்டது.

நைந்து போன வாழைநாராய்
என்
கணிப்பொறி இணைப்பு
இறுதி மூச்சை இழுத்துக்
கொண்டிருந்தது.

தொலை பேசியை
அவசரமாய் இழுத்து
பரபரப்பாய் அழுத்தினால்,
எதிர் பக்கத்தில் அது
நிதானமாய் அடித்து ஓய்ந்தது.

Thursday, April 4, 2013

உனைக் காண நெஞ்சம் நெகிழும்

அழகாய் வீடு கட்டினேன் வாரிசுகள் வாழ
அழகான மனைவி வீட்டோடு வாரிசுகள் போய் விட்டனர்

தாயோடு பிணங்கியதால்
தாயின் மனம்விட்டு மறைவாயோ!

கட்டிய வீட்டில் மனைவி தனியே தவிக்க
கட்டிய விட்டின் கடனை அடைக்க  வெளிநாட்டில் நான்

அருளிலா நெஞ்சம் அகம் விட்டகல
நீருனுள் புகுந்து உலாவியும்
நெருப்பாய் நெஞ்சம் கொளுத்துவதேன்

காரிருளால் நெஞ்சம் தடுமாறுதே
ஞாயிறு வர இருள் மறையும்

உனைக் காண துழாவும் விழிகள்
உனைக் காண நெஞ்சம் நெகிழும்

Friday, March 22, 2013

உங்கள் மனைவி உலகின் மகிழ்ச்சியானபெண்ணாக இருக்கட்டும்!

. உங்கள் மனைவி உலக நடைமுறையில் மகிழ்ச்சியான பெண்ணாக  இருக்க சில நடைமுறைகளை கையாள்வது அவசியமாகின்றது. இது வாழ்வில் தேவையாகின்றது

1.தனிமையில் எதிர்பாராத முத்த மழையால்  அன்பை பொழிய வைப்பது

2. மனைவியோடு வருத்தமிருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் பாதையை கடக்கும் போது கையைப் பிடித்து பாதுகாப்பாய் அழைத்துச் செல்வது

3 எலி வலையானாலும் தனி வலை வேண்டுமென்பதுபோல் சிறிய வீடாக இருந்தாலும் தனி வீடு கட்டி சொந்த வீட்டில் வாழ்வது

4.அவளுக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்வது.

5.உங்கள் விருப்பத்திற்கு முதலிடம் கொடுக்காமல் முடிந்தவரை அவளது விருப்பத்திற்கு பொருட்களை வாங்கிக் கொடுப்பது.

6. உங்கள் உடம்பை அழுத்தி விடச் சொல்லாமல் உங்கள் மடியில் அவளது தலை வைத்து படுக்கச் செய்து அவளது தலை முடியை அன்பாக மெதுவாக கோதி விடுவது(அவசரமாக செய்து  சவரி முடி விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்)
7. குளியல் அறையை காற்றோட்டமுள்ள இடமாக இருக்கச் செய்து இனிய இசையை குறைவான ஒலி கொடுக்கச் செய்து அவள் குளிக்கும் நேரத்தை மகிழ்வுறச் செய்வது. (அப்பொழுதுதான் அவளை தினம் குளிக்க ஆர்வமுண்டாக்கும் அதனால் உங்களை மகிழ்வுறச் செய்ய ஒரு ஆர்வம் உண்டாகும் )

 8.  சத்தான உணவு சாப்பிட கொடுத்து குடும்ப வாழ்வில் உற்சாகம் உண்டாக்க வேண்டும்.

9. உடல் நலமுற்ற காலங்களில் உடனிருந்து உதவுதல்

10. மனைவியின் உறவு முறைகளுக்கு மதிப்பளித்து அவர்களை வரவேற்பது

11. தேவையில்லாமல் அவளது தனிப்பட்ட உரிமைகளில் இடையூறு செய்வதனை தவிர்த்தல் அவசியம்.    

 12. குறை கண்டுபிடிபதனை தவிர்த்து நிறைவான செயல்களை பாராட்டி பேசுவது உயர்வு

Friday, January 4, 2013

எதுவும் தலைநகரில் நடந்தால் தான் தலையில் ஏறுமோ!

எதுவும் தலைநகரில் நடந்தால் தான் தலையில் ஏறுமோ!
இப்பொழுதாவது தலையில் ஏறியதே!

நமது கடமை தவறை தடுப்பது
குஜராத் குல்பர்க்கா சொசைட்டி முஸ்லிம் பெண்கள் பனிரெண்டு பேர் நிர்வாணமாக்கப் பட்டு கேவலப் படுத்தப் பட்டனர்.
வயிற்றை கிழித்து குழந்தையை கொன்று தாயையும் கொன்ற கொடுமை.
இதற்கு அத்தனை முக்கியப் படுத்தி செயல்பட நிதானம்
அதனை மறந்த நிலை.

நன்மையான செயல் செய்ய தாமதமும் வேண்டாம்
தீமையான செயலை தடுக்க தாமதமும் வேண்டாம்

பெண்ணியம் பேசும் மாந்தர் பெண்களுக்கு உரிமை கேட்டனர்
பெண்ணியம் பேசும் சில மாந்தர் பெண்களுக்கு கவரும் ஆடை உடுத்துவதிலும் உரிமை கேட்டனர்
பெண்ணியம் பேசும் மாந்தர் பெண்கள் இப்பொழுது ஆடை உடுத்துவதில் முறை வேண்டும்மென்று விரும்புகின்றனர்

ஒரு குழந்தை பிறந்த பின் அதனை பாதுகாக்க தாய் படும் சிரமங்களை நினைத்துப் பாருங்கள்
நம்மைப் பெற்றவரும் ஒரு தாய்தான் அவளும் பெண்தான் தாய் என்ற சொல்லுக்கு மதம் என்ற பொருளில்லை மதமில்லை. அவளையும் மத வேறுபாடு கற்பிக்கும் கொடுமை .மனித நேயத்தை தாயோடு புதைக்க முயலும் பேதமை அழியட்டும் .

Sunday, November 18, 2012

சொந்த வீடு (கவிதை)


வரைமுறையாய் கட்டிய வீட்டை
அறைஅறையாய் சென்று
கண் குளிர ரசித்தான்...!

அரையாண்டு உழைப்பில்
வானுயர்ந்த தன் கனவை
அணுவணுவாய் புசித்தான்...!

தரைமுதல் தளம் வரை - பல
தலைமுறை தாங்கும்படி
நிலையாய் கட்டுவித்தவன்..!

நரைவிழுந்த அப்பாவுக்கு
நடுக்கூடப் பக்கத்தில் - தனி
அறையை ஒப்புவித்தான்..!

மனைவி மக்களுக்கு
மேல்தள அறைதனை - அவரவர்
விரும்பியபடி தந்தவன்...

ஆளுக்கொரு அறையை
ஆளச்செய்து விட்டு
ஆசையாய் கட்டிய இல்லத்தில்
தான் மட்டும் தங்காமல்...

தன் பிழைப்பைத் தேடி  - பொருள்
ஈட்ட பறந்து சென்றான்
கட்டிய வீட்டின் கடனை அடைக்க
அயல்நாடுக்கு ,,,,!

by Suresh Subramanian
ரிஷ்வன் கவிதைத் துளிகள்
Source : http://www.rishvan.com

மனைவி சொல் கேட்டு மானமும் போச்சு வாழ்வும் போச்சு !

தெரு ஓரம் அழகிய வாகனம்
ஓடிப்போய் ஓர் அலசல் பார்வை
உறவினர் ஓசைக் கேட்டு உறங்க
மென்மையான ஒலி எழுப்ப
விழித்துப் பார்த்து வாழ்த்து சொன்னார்

வாங்க வாங்க வீடு வரை வாங்க
வார்த்தை மதித்து வந்தார்
கட்டிய வீட்டை காட்டி விளக்கம் கொடுத்தேன்
படுக்கை அறை அதில் குளியல் அறை
 பெரிய கூ டம் சின்ன கூ டம்
அடுப்பங்கறை அதில் பொருட்கள் வைக்க இணைப்பு அறை
மகளுக்கு, மகன்களுக்கு தனித் தனி அறை
வீடனைத்தும் சலவைக் கல் பதிப்பு
பார்த்தார்! அங்கும் இங்கும் பார்த்தார்
தொழ வேண்டும் தொழ அறை உண்டா! என வினவினார்
'பெரிய அறையில் தொழலாம்' என்றேன்
'வேண்டாம் !  அருகில் பள்ளி அங்கு தொழ செல்கிறேன்' என்றார்

புறப்பட்டு முன் ' உங்களிடம் ஓர் உதவி'
'சொல்லுங்கள் நேரம் ஆனது '

வயதிற்கு வந்த மகள்களுக்கும் மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்க விரும்பினேன்
வாழ்கைப் பட்டவள் நல்ல வீடு இருப்பின்  நல்ல வரம் கிடைக்குமென்றாள்
வசதியாக வீடு கட்டியதில் சிறிய கடன்
கட்டிய வீட்டைப் பார்த்து செலவந்தர்கள் ஓடிவர
மக்களுக்கு சிறப்பாக திருமணம் முடித்ததில் பெரிய கடன்

Tuesday, November 13, 2012

முழுமையான நெருக்கம் கிடைக்க முடியுமா!

 ஆத்ம நண்பன் , உயிருக்கு உயிரான தோழன், இவர்களிடம்  முழுமை உண்டா!

அறிவை சொல்லித் தந்த ஆசிரியர் எனப்படுவோர்  இந்த வட்டத்தில் வருவாரா!

இனிய வாழ்வை தருபவராக கருதப்படும் மனைவியினால் முழுமையான வாழ்வை பெற்றுவிட முடியுமா ! 

பாசத்தை தந்த பெற்றோர் நம் மனதில் முழுமை பெற்று விடுவார்களா!

யாரிடம்தான் முழுமையான நெருக்கம் கிடைக்கும்!

நண்பனிடம்  கருத்து ஒற்றுமை கிடைக்கும். உயிரைக்கொடுத்து உதவுவார்கள் பெற்றோர்கள். மனைவி நமக்கு நல்லது கெட்டதுகளில் பங்கு பெறுவாள் மற்றும் உடலோடு ஒன்ற உடலுறவு தருவாள் .  பின் யாரிடம்தான் முழுமை கிடைக்கும்.!
முழுமையான நெருக்கம் கிடைக்க ஆசைப்பட்டு நாம் நொறுங்கி விட வேண்டியதுதான்.
முதுமை கிடைத்தாலும் முழுமை கிடைக்காது.
முழுமையான நெருக்கம் என்பதின் இலக்கணம்தான் என்ன ?
முழுமை என்பது ஆன்மிகம் ,உணர்வு அறிவு உடல் உறவு இத்தனையும் உள்ளடக்கியதுதான்

ஆன்மிகம் அடங்கிய ( spiritual)  உணர்ச்சி வயப்பட்ட (emotional  ) அறிவு சார்ந்த (intellectual ) உடல் உறவு (physical relation  ) இத்தனையும் உள்ளடக்கிய உறவோடு நமக்கு கிடைக்கும் மனிதரை பெற முடியுமா?  

Tuesday, November 6, 2012

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

Tuesday, May 1, 2012

தொடரும் காலத்தினை பின் தொடரும் நம்பிக்கையான நபர் !


 தொடரும்  காலத்தினை பின் தொடரும் நம்பிக்கையான நபர்  மனைவியாகத்தான் இருக்க முடியும் . ஆசை அறுபது நாட்கள் மோகம் முப்பது நாட்கள் (தகுந்த காரணமின்றி மனைவி தன் கணவனுக்கு உடலுறவை மறுப்பது விலக்கப்பட்ட செயல் (ஹராம்) ஆகும்)

காலமெல்லாம் கனிவும்,பாசமும், பேணிக் காக்கும்  சேவையும் பகிர்ந்துக்  கொள்ளும் மகிழ்வுகளும்,  சந்ததிகளை தொடரவைத்து நமக்காக சரித்திரம்  படைக்கப் பாடுபடும் தொண்டு மனமும் மனைவி கிடைத்ததால் நாம் அடைந்த பாக்கியம்.
"இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்;... (Surah Al Nahl 16:72)

 இன்ப துன்பங்களில் பங்கு  கொள்வதுடன் நாம் அடையும் வெற்றி தோல்விகளிலும் தோள் கொடுத்து நம் நிலையை தடுமாற விடாமல் பாது காப்பவள் மனைவி.  மனைவியுடன் அன்பு கலந்து நிற்பதால் மனிவியுடன் கிடைக்கும் மகிழ்வுக்கு எல்லை இல்லை. 
மனதில் துக்கம் வரும் போது நெஞ்சை வருடிவிடும் ஆறுதல் அளிக்கும் கலப்படமற்ற மாமருந்து. 
உயிர் வாழ உணவு ஓய்வின்றி உணவு செய்து கொடுத்து  வருவது முதல் ஆடைகளை துவைத்து கொடுப்பது வரை வீட்டினை சுத்தம் செய்வதிலும்  தனது சேவையை தொடர்ந்து ஈடுபட்டு குடும்பத்தினை பாதுகாத்து வரும் மாண்பு. ஒரு நாள் மனைவி வீட்டில் இல்லையென்றால் அந்த வீடே ஒளி இழந்த வீடாக காட்சியினை அறிய முடியும். மனைவி என்றால் வீட்டை விளங்கச்செய்பவள் என்று பொருள். மனை=வீடு = வி=விளங்கச்செய்பவள்