பள்ளிக்கூடம் வருவேன் தொடர்வேன்
பள்ளிக்கூடம் தொடர தினம் அடி வாங்குவேன்
பள்ளிக்கூடம் பெயர் கேட்டால் ஏதாவது சொல்வேன்
பள்ளிக்கூடம் தொடர தினம் அடி வாங்குவேன்
பள்ளிக்கூடம் பெயர் கேட்டால் ஏதாவது சொல்வேன்
புத்தகத்தை தொடுவேன் படிக்கமாட்டேன்
நோட்டுப் புத்தகத்தை எ டுப்பேன் கிறுக்குவேன்
பொருள் புரியும் முன்னே பள்ளி செல்கிறேன் நோட்டுப் புத்தகத்தை எ டுப்பேன் கிறுக்குவேன்
பள்ளி சென்ற காரியம் புரியாமல் திரும்புகிறேன்
மதியம் உணவை திரும்ப வீடு கொண்டுவருவேன்
விளையாடவிட்டால் விளையாடுவேன்
வீட்டுக்கு வந்து டீவீயில் 'கேம்' விளையாடுவேன்
அண்ணன் துப்பாக்கி படம் பார்க்க நானும் பார்ப்பேன்
அந்த துப்பாக்கி எனக்கும் வேண்டும் என்று கதறுவேன்
அம்மா துப்பாக்கி வாங்கி கொடுப்பாள்
துப்பாக்கியை வைத்து சுட்டு சுட்டு பழகுவேன்
அப்பா வந்து துப்பாக்கியை பிடுங்குவார்
'பாவம் பயனை அழவிடாதீங்க' அம்மா சொல்வாள்
'பயனை கெடுக்கிறாய் ' என்பார் அப்பா
'அவன் சின்ன பையன்தானே மூன்று வயதுதானே' என்பாள் அம்மா
'அடுத்த வீட்டு மூன்று வயது பயன் என்னம்மா இங்கிலீஸ் பேசுறான்' அப்பா சொல்வார் .
'அவங்க வீட்லே எல்லோரும் இங்கிலீஸ் பேசுறாங்க' அதான் அவன் பேசுறான்
'என்னது எதிர்த்து பேசுறாய்' என்று என்னிடம் பிடுங்கிய துப்பாக்கியை அம்மா மீது கோபமாய் வீசினார்
அம்மா என்னையும் அழைத்துக் கொண்டு பாட்டி வீட்டுக்கு வந்து விட்டாள்
அப்பாடி இனி நான் நல்லா விளையாடலாம்! பள்ளிக்கூ டம் போக வேண்டாம்!
எனது மூன்று வயது பள்ளிக்கூட கிறுக்கல் வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர்கள் வாழ்கையில் விளையாடுகின்றனர் .
No comments:
Post a Comment