Sunday, November 18, 2012
சொந்த வீடு (கவிதை)
வரைமுறையாய் கட்டிய வீட்டை
அறைஅறையாய் சென்று
கண் குளிர ரசித்தான்...!
அரையாண்டு உழைப்பில்
வானுயர்ந்த தன் கனவை
அணுவணுவாய் புசித்தான்...!
தரைமுதல் தளம் வரை - பல
தலைமுறை தாங்கும்படி
நிலையாய் கட்டுவித்தவன்..!
நரைவிழுந்த அப்பாவுக்கு
நடுக்கூடப் பக்கத்தில் - தனி
அறையை ஒப்புவித்தான்..!
மனைவி மக்களுக்கு
மேல்தள அறைதனை - அவரவர்
விரும்பியபடி தந்தவன்...
ஆளுக்கொரு அறையை
ஆளச்செய்து விட்டு
ஆசையாய் கட்டிய இல்லத்தில்
தான் மட்டும் தங்காமல்...
தன் பிழைப்பைத் தேடி - பொருள்
ஈட்ட பறந்து சென்றான்
கட்டிய வீட்டின் கடனை அடைக்க
அயல்நாடுக்கு ,,,,!
by Suresh Subramanian
ரிஷ்வன் கவிதைத் துளிகள்
Source : http://www.rishvan.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment