Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, July 16, 2014

கோமாளிகளின் கோணங்கித்தனம்..!

“டேய் வேட்டி கட்டிய பயலயெல்லாம் கீழே உக்கார வைடா. பேண்ட்,கோட் போட்டவனை எல்லாம் சேர்ல உக்கார வைடா!”

இந்த வரிகள் நடிகவேள் எம்.ஆர்.ராதாவால் ரத்தக் கண்ணீர் படத்தில் சொல்லப்பட்ட வசனம். எம்.ஆர்.ராதா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் இன்றையச் சட்டவிதி நடைமுறையை நையாண்டி செய்து இருக்கிறார்.

வேட்டி என்பது கலாச்சாரச் சின்னம். பண்பாட்டு வெளிப்பாடு, தனிமனித சுதந்திரம், இதைத் தடுப்பது தவறு என்றெல்லாம் இன்றையச் சட்டமன்றத்தில்கூட விளக்கமும் எதிர்ப்பும் தரப்பட்டிருக்கிறது.

கிரிக்கெட் கிளப்பில், அவர்களுக்குள்ள உரிமையில், வேட்டி கட்டிய மனிதர்களுக்குக் கிளப்புக்குள் இடமில்லை என்று விதிவகுத்துக் கொண்டார்கள். இந்த விதியால் இன்றைக்குப் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள்.

Monday, June 30, 2014

இலங்கையில் இஸ்லாமியர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்?

“இலங்கையில் மதங்களுக்கு இடையேயான பதட்டநிலை பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. முஸ்லிம், இந்து, பவுத்த மதங்களை சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள்” அமெரிக்க காங்கிரஸுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த ஆண்டு இறுதியில் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில் இடம்பெற்றிருந்த வரிகள் இவை. இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆங்காங்கே நடந்த சிறு தாக்குதல்கள், பவுத்த பிக்குகளால் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் அழிப்பு என்று நடந்த சம்பவங்களை அவ்வறிக்கையில் எடுத்து சொல்லப்பட்டிருந்தது. இலங்கையில் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் மதமோதல்கள் எழலாம் என்றும் கவலையோடு அமெரிக்க அரசு சுட்டிக் காட்டியிருந்தது.

Saturday, April 12, 2014

தேர்தல் முடியும் வரை அரசியல் பேசக்கூடாது

தேர்தல் முடியும் வரை அரசியல் பேசக்கூடாது என்று வீட்டில் தடை உத்தரவு போட்டுவிட்டதால் காலையில் எழுந்து என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகள் படிப்பதற்காக வைத்திருந்த "மேஜிக் பாட்" இதழை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். அதிலிருந்து ஒரு கதை.

ஒரு ஒட்டகம் வழி தவறி காட்டுக்குள் வந்துவிட்டது. காட்டுக்குள் இருந்த நரி, அதை சிங்க ராஜாவிடம் கூட்டிச் சென்றது. சபையில் இருந்த அனைத்து விலங்குகளும் ஒட்டகத்தை அதிசயமாகப் பார்த்தன. ஒட்டகம் தன்னுடைய சோகமான ஃப்ளாஷ் பேக்கைச் சொன்னவுடன் சிங்கம் மனமிரங்கி "இனி நீ என் காட்டில் வாழலாம், உனக்கு தீங்கு வராமல் நான் காப்பேன்" என்று உறுதியளித்தது. ஒட்டகமும் நம்பிக்கையுடன் சந்தோஷமாக அங்கேயே தங்கி விட்டது.

Thursday, March 13, 2014

கட்சிகளுக்கு செலவில்லாமல் நல்ல விளம்பரம் கிடைக்கிறது .

தேர்தல் காலங்களில் விரும்பாத கட்சிகளை அதிகமாக சாட, ஏசி பேச  அந்த கட்சிகளுக்கு  செலவில்லாமல் நல்ல விளம்பரம் கிடைக்கிறது .
அடுத்தவரை மரியாதை குறைவாக பேச அதுவே உங்கள் மீதும் திரும்பும்
அடுத்தவனை கேவலப் படுத்துபவன் தானும் கேவலப்படுத்தப் படுவான் என்பதனை அறிய வேண்டும் .
அது உடனே நிகழும் அல்லது சில நாட்கள் சென்று நிகழும் .

ஒரு கட்சியை ஆதரிப்பவர்கள் உங்கள் கட்சியின் குறிக்கோள்,திட்டம்,கடந்த கால சேவைகளைப் பற்றி  சொல்லுங்கள். .
தேர்தலில் மட்டும் உங்களைப் பற்றியே பேச வேண்டிய கட்டாயம் .
அது தேவை .அது பெருமை அல்ல .

Monday, March 10, 2014

புன்னகையை விற்பவளின் கதை

பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. உங்களைப் போலவே நானும் துயருருவதை சொல்வதற்கும் இயலவில்லை. புன்னகையால் துயரக் கண்ணீரை மறைத்தபடி, ஒப்பனைகளால் பிரச்சினைகளை மூடி, இந் நிறுவனத்துக்கு வரும் உங்களை வரவேற்கிறேன்.

இரு விழிகளிலும் மையிட்டு விழிநீரை மறைத்த போதிலும், இதழ்களுக்குச் சாயமிட்டு மெருகூட்டிய போதிலும், ஆத்மாவை இரு கைகளிலேந்தி புன்னகையால் உங்களை வரவேற்ற போதிலும், இப் புன்னகையால் மூடப்பட்டிருக்கும் எனது வாழ்க்கையானது முட்கள் நிறைந்ததென எவ்வாறு உரைப்பேன்? தேவதையொருத்தியாக நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள் எனினும் நான் ஒரு பொம்மையல்ல. இந் நிறுவனத்துக்குள் நுழையும் கணம்தொட்டு உங்களுக்கு காணிக்கையாக்கும் புன்னகைகளுக்கு ஊதியம் கிடைக்கிறதெனக்கு. வாய் நிறைய 'வணக்கம்' சொல்லி உங்களை வரவேற்று பணப்பையின் சுமைக்கேற்ப கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தும் நீங்களும் நானும் அறியாமல் எங்களை விற்கும் நடைமுறையிது. தலைமை அதிகாரியின் மனநிலையை சாந்தப்படுத்தவும் எனது புன்னகைதான் தேவைப்படுகிறது.

Monday, March 3, 2014

இப்படியும் தோன்றும்

அரசியல் கோட்பாடு அலையாகிறது
அரசியல் வித்தகர்களால் விலையாகிறது

தேர்தலில் கண்ட கட்சி காளான்கள்
தேர்தல் முடிவில் காணாமல் மறையும்

இப்படியும் தோன்றும்

காக்கா பிடிப்பதினிலே தேர்தல் நேரத்தினிலே - உமக்கு
ஜாதி நிறம் தோன்றுவதில்லையே கட்சிக்காரா

பார்க்கும் இடங்கில் எல்லாம் - உந்தன்
உண்மை நிறம் தோன்றுதையே கட்சிக்காரா

கேட்கும் ஒளியில் எல்லாம் - நின்றன்
கட்சி இசை பாடுதடா கட்சிக்காரா

தீக்குள் விரலை வைத்தால் கட்சிக்காரா - உன்னை
தீண்டும் அச்சம் தோன்றுதடா கட்சிக்காரா

Sunday, March 2, 2014

தமிழன் மட்டும் ஏன்..?

பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித் திரிந்த பறவைகளே... பாடல் வரிகளை நெஞ்சிலிருந்து அழித்துவிட எவராலும் முடியாது. காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் தோழமையின் மேன்மைக்கு தினந்தோறும் துதிபாட அர்த்தமுள்ள வார்த்தைகளால் நிர்மாணித்த கவிதாலயம் அந்தப் பாடல்.

இந்தியிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தால், நாடாளுமன்றத்தின் 15வது மக்களவை கடைசி முறையாக வெள்ளியன்று உற்சாகத்துடன் கூடி, நெகிழ்ச்சியுடன் பேசி, கனத்த இதயத்துடன் கலைந்த நேரத்தில் இரண்டாவது தேசிய கீதமாக அதுதான் இசைக்கப்பட்டிருக்கும்.

மன்மோகன் சிங்கின் கண்ணாடியில் ஈரம் படர்கிறது. அத்வானி கர்சீப் எடுத்து கண்களை துடைக்கிறார். சோனியாவை வாயார புகழ்கிறார் சுஷ்மா. அத்வானியை அவையின் தந்தை என்கிறார் மார்க்சிஸ்ட் வாசுதேவ் ஆச்சார்யா. இன்னொரு அடி மேலே தூக்குகிறார் முலாயம் சிங் யாதவ். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பாராட்டுகளை சமர்ப்பிக்கிறார் சுஷில் குமார் ஷிண்டே.

தமிழ்நாட்டில் வாழும் நம்மை பொருத்தவரை கற்பனைக்கு அப்பாற்பட்ட காட்சிகள்.

Friday, February 28, 2014

இருக்கும் சிக்கலை அவிழ்க்க 'அல்லோலப் ' படும் நிலை

கசடில் கரைந்து போகாமல்
உள்ளம் உறைந்து நிற்கிறது

கசடுகளை கொட்டியதால் கரைகள் நிறைந்து விட்டன
உள்ளத்தில் உள்ள உய்ர்வானதை கொட்ட இடத்தைக் காணோம்

ஊமையாய் உலகில் நடக்கும் அவலங்களை அழிப்பதற்க்கே நாட்கள் போதவில்லை
மெளனமாய் காலத்தை வேலையில் ஈடுபடுத்தி நிற்குமிடமும் நாற்றம் வீசுகிறது
அரசும் ஆதரவு தரவில்லை
உடனிருக்கும் மானிடரும் கண்டு கொள்வதில்லை

Tuesday, February 25, 2014

வி.ஐ.பி.களின் காலர் ட்யூன்!

எழுதியவர் யுவகிருஷ்ணா

  மாதத்துக்கு முப்பது ரூபாய் செலவழித்தால் போதும். நமக்கு போன் செய்பவர்களின் காதில் ‘ட்ரிங் ட்ரிங்’குக்கு பதிலாக நாமே தேர்ந்தெடுக்கும் பாடல் இசைவெள்ளமாய் பாய்கிறது. சாமானியர்களுக்கு மட்டும்தான் இந்த ‘காலர் ட்யூன்’ வசதியா. அரசியல் புள்ளிகளும் அசத்தலாமே. ஒய் நாட்? வி.ஐ.பி.களின் தற்போதைய ‘மூடு’க்கேற்ப நம்முடைய தாழ்மையான பரிந்துரைகள்...


                                                        அஞ்சா நெஞ்சன் :
“அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை...
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை?”

Monday, October 28, 2013

யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !


குறிப்பு - ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது.  அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது.

Monday, November 26, 2012

துப்பாக்கி எடுத்துவிட்டான்

துப்பாக்கி எடுத்துவிட்டான் - இந்தியன்
துப்பாக்கி எடுத்துவிட்டான்

சுதந்திரம் இழந்து
புழுவாய்ப் பூச்சியாய்
அடிமையாய்க் கிடந்த நாட்களில்கூட
அகிம்சையைத்தான் கையில் எடுத்தான் - இந்தியன்
அகிம்சையைத்தான் கையில் எடுத்தான்

இன்றோ
துப்பாக்கி எடுத்துவிட்டான் - இந்தியன்
துப்பாக்கி எடுத்துவிட்டான்

அண்ணல் காந்தியின் அகிம்சா வேதங்களை
நொறுக்கிப் புதைத்து புதைத்த இடத்தில்
நெடுமரங்களே வளர்த்து விட்டான்
இந்தியன்
ஆனால்...
அமிதாப் அங்கேயும்
அஜித்குமார் இங்கேயும்
அரிதாரம் பூசிக்கொண்டு
பொய்த் திரையில் எடுத்ததை
நிஜமாகவே எடுத்துக்கொண்டான்

Sunday, July 8, 2012

அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)

 அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
(by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி)

அரசியல் வாழ்க்கை

(இக்கட்டுரையில்  அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஹாஜியார் என்றே குறிப்பிடுவோம்) ஹாஜியார் அவர்களின் அரசியல் ஈடுபாடும் அதன் வாயிலாக ஆற்றிய பணியும் சிறப்பு வாய்ந்தன. .முஸ்லிம்களுக்கிடையே அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியும், ஒற்றுமையை  உண்டாக்கவும் நாடெங்கும் முஸ்லிம் மாநாடுகள் நடைப்பெற்றன.  ஹாஜியார் அவர்கள் மாயூரம்  வட்டத்திற்கு தலைமையேற்றார்கள், அவர்களின் தலமையின் கீழ் அனைத்து  ஊர் மக்களும் அணி வகுத்தனர்.  1938-ம் ஆண்டு மாயூரம் தாலுக்கா மாநாட்டைக் கூட்டினார்கள். மிகுந்த கோலாகலத்துடன் பேறு வெற்றியுடன் நடந்தது அம்மாநாடு. பெருந்  தலைவர்கள் பலர் பங்கு பெற்றனர். இதுகாறும் இந்த பகுதியிலே அம்மாதிரியொரு மாநாடு நடைபெற்றதில்லை என்று  சொல்லுமளவுக்கு இருந்தது. மாநாட்டையொட்டி ரூபாய் ஆயிரத்திற்கு மேல் சொந்த பணத்தை செலவு செய்தார்கள்.

 பிறகு 1942-ம் ஆண்டு சென்னையில் மாநில முஸ்லிம்லீக் மாநாடு பெருமளவில் நடந்தது. பட்டி தொட்டிகளிலிருந்தும் மக்கள் மாநகரை நோக்கி திரண்டனர். அலைகடளென  ஆர்ந்தெழுந்த மக்களை ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் அழைத்து செல்லும் பொறுப்பு ஹாஜியார் அவர்கள் மீதே சார்ந்திருந்தது. அவர்கள் அயரவில்லை. பிறைகொடி பிடித்த அப்பெருங் கூட்டதிற்கு தனி இரயில் வண்டி ஒன்றை ஏற்பாடு செய்து ஒரு சரித்திரத்தையே  சமைத்தார்கள். ஒழுங்கோடும் உவகையோடும் அனைவரும் இரயில் ஏறி மாநாடு கண்டு வெற்றிகரமாக ஊர் திரும்பினர். தனி  இரயில் ஏற்படுத்தியதின் மூலமாக சொந்த பணம் வெகுவாக செலவழிந்ததையும் அவர்கள் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. சமுதாயப் பணியே அவர்களது இதய மூச்சாக இருந்தது.

Tuesday, February 28, 2012

மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்பது ஏன்!


 மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்பது ஏன்!

அரசியல் வாதிகளும் இனவெறி கொண்டவர்களும் நம்மை பிரிந்து இருக்க வைத்து தன்னுடைய ஆதாயத்தினை வளர்த்து வைக்க முயற்சிகின்றனர். இப்பொழுது இருக்கும் கல்வி  முறையும் இதனைச் சார்ந்ததாக இருக்க முயற்சி எடுக்கப் படுகின்றது .


 நான் இஸ்லாம் வழியை விரும்பியும் அறிந்தும்  பின்பற்றுபவன் .நான் பிறந்தது இறைவன் அருளால் முஸ்லிமாக. ஆனால் நான் மற்ற மார்க்கத்தினை பின்பற்றுபவரை மதிக்கின்றேன் .எனக்கு  குடும்ப  அளவிலும் தனிப்பட்ட முறையிலும் கணக்கிலடங்காத நண்பர்கள் உண்டு .இதில் நாத்திக கொள்கை கொண்டவர்களும் அடக்கம் . நான் யார் மனதினையும் புண்படுத்தும்படி எழுதுவதில்லை . நான் உலகக்  குடிமகனாக(Citizen Of  The World உலகப் பிறஜையாக) இருக்க விரும்பினாலும் இந்திய பிரஜையாக இருப்பதிலும் தமிழனாக இருப்பதிலும் பெருமையடைகின்றேன்.இஸலாம் என் வழி தமிழ் என் மொழி .     உங்கள் மார்க்கம் உங்களுக்கு உயர்வாக இருக்கலாம்.

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
-குரான் 109:6.

நான் இஸ்லாம் வழியை விரும்பியும் அறிந்தும்  பின்பற்றுபவன்
 நான் பேஸ் புக்கில் நல்ல நண்பர்களைப்  பெற்றுள்ளேன் ஆனால் அது அதிகமாக முஸ்லிம்களாக இருக்கின்றனர்.நான் அனைவரையும் நேசிக்க மற்றும்  யார் விரும்பினாலும் தடையில்லாமல் நண்பர்களாக  ஏற்றுக் கொள்ள விரும்பினாலும் ஏற்றுக் கொள்கின்றேன்  அதில்  அதிகமாக முஸ்லிம்களாக இருக்கின்றனர்.     ஆனால் ட்விட்டரில் அப்படி அல்ல.  ட்விட்டரில் இஸ்லாமிய நண்பர்களை விட அதிகம்  இது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. இந்தியாவில்தான் மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்கின்றனர் அதில் தமிழ்  நாடும் விதிவிலக்கல்ல . இது மிகவும் வருந்த வேண்டிய செய்தி.எத்தனை மதங்கள்  ஜாதிகள் அவர்களுக்குள் போராட் டங்கள்!

ஒரு நபித்தோழராகிய சஹாபி நாயகத் திருமேனியை நோக்கி, ‘நம் இனத்தின் மீது பற்றுக் கொள்வது, அதிலும் தீவிரமான பற்றுக் கொள்வது தவறா?’ என வினாத் தொடுத்தார். இவ்வினாவுக்கு விடை கூற வந்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ‘ஒருவர் தன் இனத்தின்மீது பற்றுக்கொள்வது இயற்கை. அது பற்றாக மட்டுமே வளர்ந்து வளமடைய வேண்டுமேயல்லாது, வெறியாக மாறிவிடக் கூடாது’ என்றார்கள்.
     
  உங்கள் மார்க்கம் உங்களுக்கு உயர்வாக இருக்கலாம்.என் மார்க்கம் எனக்கு உயர்ந்தது. இது நல்ல கொள்கையாக இருக்கலாம் என்பதே என் கருத்து. நேசிப்பதற்கும் கருத்து வேறுபாடுகளுக்கும்  நட்பில் எந்த காலத்திலும் மோதல் வரக்கூடாது . நாம் பெரியார் ,அண்ணா ,கலைஞர்  பேராசிரியர் அன்பழகன்  மற்றும் பலர்  கொண்டிருந்த கொள்கை நம்மிடமிருந்து மாறு பட்டிருந்தாலும் அவர்களது   உயரிய எழுத்துக்களை கருத்துகளை    விரும்பி  படிக்கின்றோம்.அதில் நமக்கு கட்டாயம் உடன்பாடு இருக்க வேண்டும்   என்ற அவசியமில்லை.
  நாம் பல சரித்திரங்களை[ப் நம்முடன் வாழும் மக்களைப் பற்றி அறியாமல் இருக்கின்றோம் என்பதுதான் உண்மை . என்னுடன் படித்த கல்லூரி நண்பர் என்னிடம் கேட்டார் .  முஸ்லிம்கள் வீட்டில் சைவ உணவு சாபிடுவார்களா மற்றும் உங்கள் வீட்டில் தமிழ் பேசுவார்களா என்று! நான் பிறப்பால் தமிழன்  வீட்டில் தமிழ் தவிர வேறு மொழி  பேசுவதுமில்லை மற்ற மொழியும் தெரியாது . உலகத்தில் அணைத்து நாட்டிலும் முஸ்லிம்கள் உள்ளனர் அந்தந்த நாட்டில் பிறந்தோர் அந்த மொழிதான் பேசுவர் .கேரளாவில் உள்ளவர்  மலையாளத்திலும் ஆந்திராவிலுல்லோர் தெலுங்கிலும் மற்ற இடங்களில் உள்ளவர் அந்த மொழிதான் அவர்களுக்கு தாய் மொழியாக இருக்கும் என்று விளக்கமளித்தேன். அவர் இத்தனை ஆண்டுகள் தெரியாமல் இருந்தேனே என வருத்தப் பட்டதுடன் .நாம் படிக்கும் பாடத்தில் இவ்வகையான பாடங்களும் அவசியம் சேர்க்கப் படவேண்டும் என சொன்னார். காஸ்மீரில் அதிகமாக வசிக்கும் மக்கள் முஸ்லிம்கள் அவர்கள் உருது பேசுகின்றனர். நம் நேரு அவர்களும் காஸ்மீர் வழியில்   வந்தவர்தான்.அங்கு நடக்கும் ஒரு  தீவிரவாதியும் முஸ்லிம்தான் அதற்கு பலியாவதும் முஸ்லிம்தான். தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் எல்லா மதத்திலும் உள்ளனர் . ஆனால் சில  தீவரவாதி நடத்தும் செயலை இஸ்லாமிய தீவிரவாதியால்  நடத்தப்பட்டது என்று பெரிதுபடுத்தி எழுதியும்  பேசியும் வருவோர்தான் உண்மையான தீவிரவாத்தினை தீண்டுவோராக உள்ளனர் . இஸ்லாம் தீவிரவாத்தினை  ஆதரிக்கவில்லை . ஜிஹாத் என்பது மனதினை கட்டுப்படுத்துவதுதான். உலகில் சமாதானத்தையும் அமைதியையும் நீதியையும். நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியே உண்மையான ஜிஹாத்

"முஃமின்களே!  ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்;

(அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்;

இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்,

இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்! ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்!

எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்."
-திருக்குர்ஆன் 49:11
"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.

 Friends are like flowers நண்பர்கள் - நட்பு குறள் 

788: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

Tuesday, October 11, 2011

கன்னத்தில் முத்தமிட்டால்........... -புதுசுரபி


வாப்பா....... வாப்பா.............

”என்னம்மா?”
”வாப்பா... சாயங்காலம் சீக்க்ரம் வந்திருங்க, சரியா ஆறு மணிக்கெல்லாம் நிகழ்ச்சி ஆரம்பிச்சிருவாங்க, கலெக்டர் தான் சீப் கெஸ்ட். நான் பேச ஆரம்பிக்கையில் நீங்க இருக்கணும் சரியா........... "  சொல்லிக்கொண்டே கல்லூரிப் பேருந்தைப் பிடிக்கப் பறந்தாள் ஆயிஷா.

"சரிம்மா, அம்மாவோடு வந்திடறேன் இன்ஷா அல்லாஹ்" சிரித்துக்கொண்டே பதிலுரைத்தார் வாப்பா.

"சிரிக்காதீங்க, என்ன தான் இருந்தாலும் ஒரு முஸ்லிம் பொண்ணு பேசிற தலைப்பையா தேர்ந்தெடுத்திருக்கிறாள்; முத்தமாம் முத்தம், எனக்கு வர இஷ்டமில்லை....." கோபத்துடன் சமையலறைக்குப் போனாள் அம்மா.

ஆயிஷா, மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி. கல்லூரியின் இலக்கியப் பேரவை சார்பில் நடத்தப்படும் விழாவுக்கு கலக்டர் அழைக்கப்பட்டிருக்கிறார். விழாவில் மாணவர்களின் பேச்சுப் போட்டியும், தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆயிஷா தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு 'முத்தம்'. அதனால் தான் இத்தனை யுத்தம்.

" இதற்காகவா ரெண்டு நாளா குறிப்பெடுத்திங்க வாப்பாவும் மகளும்..... சரியில்லைங்க....."  அம்மா மீண்டும் குமுறினாள் சிற்றுண்டியை மேசையில் வைக்கும் போது.

" சரி விடு, நீ அவ கூடரெண்டு நாளா சண்டை போட்ட,  அதுதான் உனக்கு சஸ்பென்ஸ்ன்னு சொல்லியிருக்காள்...... , வந்து கேட்டுப்பாரு"

 "அஞ்சு மணிக்கு வர்றேன், ரெடியா இரு."  சிற்றுண்டி முடித்து அலுவலகத்திற்கு கிளம்பினார்.

கல்லூரியிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 'ஆயிஷா என்ன பேசப்போகிறாள்?'
எல்லோரும் கேட்டுக்கொண்ட கேள்வி இதுதான்.

மணி 6:15  ஆகிவிட்டது, வாப்பாவை காணவில்லையே என்ற வருத்ததோடு வாசலை நோட்டமிட்டுக்கொண்டிருந்த ஆயிஷாவை பேச அழைத்தார் தொகுப்பாளர்.

கல்லூரி வாயிலைஅடையும் நேரம், ஆயிஷாவை தொகுப்பாளர் அழைக்கும் சப்தம் கேட்டு விரைவாக உள்ளே நுழைந்தனர் வாப்பாவும் அம்மாவும்.

மேடையில் உள்ளோரையும், வந்திருந்தவர்களையும் வரவேற்று பேசி முன்னுரையினை முடிக்கும் நேரம், பெற்றோரைப் பார்த்த சந்தோசத்தில் பேச்சைத் தொடரந்துகொண்டிருந்தாள் ஆயிஷா.
".......... முத்தத்தினால், தனக்கு கிடைக்க வேண்டிய கவர்னர் பதவியினை ஒருவர் இழந்து விட்டார்,  அப்படி பதவி மறுக்கப்பட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. நான் ஒன்றும் குற்றம்  புரியவில்லையே, முத்தம் கொடுப்பதில்லை என்று தானே சொன்னேன், இதற்கும் என்னுடைய பதவிக்கும் என்ன தொடர்பு? அந்த மனிதருக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது. "


    "அன்பர்களே, உங்களுக்கும் கூட இந்த ஐயம் எழலாம், இன்னும், இது எந்த மாநிலத்தில் நடந்தது? என்றும் கூட கேட்கத் தோன்றும். பதவி இழப்பு இன்று ஒருவேளை நடந்திருந்தால் முத்தம் கொடுத்ததற்காக வேண்டுமானால் நேர்ந்திருக்கும்."

    அவையில் ஒரே சிரிப்பொலி; அம்மாவுக்கோ மகள் அரசியல் பேசுகிறாளே என்ற வியப்பு!

    நண்பர்களே! விஷயத்திற்கு வருகிறேன்,  நான் சொன்ன அந்த நிகழ்ச்சி ஏறத்தாழ ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. உமர் பின் கத்தாப் (ரழி) என்ற நபித் தோழர் 'கலீபா' வாக ஆட்சி புரிந்த நேரம், அந்த மனிதர் ஆளுனராக பதவியமர்த்த அழைக்கப்பட்டிருந்தார். அந்த நேரம் கலீபாவுக்கும் ஆளுநராக பதவியேற்க வந்திருந்தவருக்கும் நடந்த உரையாடலின் இடையே, "......நானெல்லாம் என் குழந்தைகளை கொஞ்சுவதா? முத்தமிடுவதா?? அப்படி எதுவுமே செய்தது கிடையாது" என்று அது ஏதோ குற்றமான செயல் போல சொன்ன மாத்திரத்திலேயே, கலீபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள், அந்த நபருக்கு தரவிருந்த பதவியினை ரத்து செய்து உத்தரவிட்டார்கள்.
    குழம்பிப்போய் இருந்த அந்த நபரிடம் சொன்னார்கள், "உனது மனம் உன் குழந்தைகளிடமே இரக்கம் காட்டவில்லை கருணைகாட்டவில்லையெனில், பிறகு நீர் எப்படி மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்துகொள்வீர்? இறைவன் மீது ஆணையாக உம்மை ஒருபோதும் ஆளுனர் ஆக்கமாட்டேன்" என்று கூறி திருப்பி அனுப்பினார்கள்.

    அவை மிகுந்த அமைதியுடன் காணப்பட்டது, ஆயிஷா அடுத்ததாக தொடர்ந்தாள்.

    முத்தத்திற்கும் கருணைக்கும் தொடர்பா?  ஆம் நண்பர்களே, அண்மையில் ஒரு அறிவியல் செய்தியினைப் படிக்க நேர்ந்தது. நாம் நம் குழந்தைகளைக் கொஞ்சி அரவணைத்து முத்தமிட்டு மகிழ்வது நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் பாசம் காரணமாக என்று நினைத்திருக்கிறோம், ஆனால் அது அவற்றையும் மீறி இதயத்தின்பால் ஊறுகின்ற கருணையின் காரணமாக என்றறியும் போது வியப்பை அளிக்கிறது,

    பெற்றோர் குழந்தையினை முத்தமிடுவத்தின் மூலம் அந்தக் குழந்தை ஓர் உணர்வு ரீதியான அரவணைப்பைப் பெறுகிறது. அதுவும் ஒரு தாய் முத்தமிடும் போது குழந்தையுடனான பாசப்பிணைப்பு உயிரியல் மூலம் உறுதிசெய்யப்படுகிறது, பெற்றோரின் இந்த ஆத்மார்த்தமான முத்தத்தினால், எந்த ஒரு எதிர்மறையான சூழ்நிலையிலும் தாழ்வுமனநிலை என்பது குழந்தையின் உள்ளத்தினைப் பாதிக்காது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது,

    மேலும், குழந்தையினை முத்தமிடுவதால் குழந்தைக்கும் அதேவேளையில் பெற்றோருக்கும் மகிழ்ச்சியான ஒரு மனநிலையினை அடையமுடிகிறது,
    குழந்தையின் இதயம் சீராக செயலாற்ற பெரிதும் உதவுகிறது.

    தாய் தன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டால் என்ன நடக்கிறதென்பதை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையை உங்களுக்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.  ஒரு தாய் தன் குழந்தையினை கருவில் சுமக்கும் போது அதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கான தேவைகளை ஈடுசெய்கிறாள். ஆனால் குழந்தை பிறந்த பிறகு வெளி உலகில் குழந்தையினைத் தாக்கும் நோய்க்கு எதிர்சக்திகளை உருவாக்குவதில் முத்தம் பெறும் பங்கு வகிக்கிறது. ஆச்யர்யமாக இருக்கிறதல்லவா?? ஆம், ஒரு தாய் முத்தமிடுவதன் மூலம் கிருமிகளின் மாதிரி எடுக்கப்பட்டு வெளித் திசுக்கள் மற்றும்,   நினைவுத்திறன் 'பி' வகை செல்கள் மூலம் அந்த கிருமிகளின் வீரியம் அழிக்கப்பட்டு, இதற்கான நோய் எதிர்ப்பு சக்திகள் உருவாக்கப்பட்டு அவை 'பி'வகை செல்களினால் நினைவுத்திறன் கொண்டு தாய்ப்பால் மூலம் குழந்தைக்குப் போய்ச்சேருகிறது.
    குழந்தையும் நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாப்பு பெறுகிறது.

    எனவே தான் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே, அறிவியல் அறிந்திராத காலத்தில் தோன்றிய எங்கள் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், குழந்தைகளை முத்தமிடாத ஒரு கிராமவாசியைப் பார்த்து, "இறைவன் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா??" என்று கூறினார்கள்.

    "அன்பும் கருணையும் கலந்திருக்கும் முத்தத்தினைப்.........................."

    வார்த்தையினை முடிப்பதிற்குள் அரங்கில் கரவொலி நிரம்பியிருந்தது.
    அம்மா, ஆயிஷாவின் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டிருந்தாள்

ரபீக் .

Tuesday, March 22, 2011

அரசியல் உறுதிப்பாடினால் சிங்கப்பூர் வழிகாட்டுகிறது,

அரசியல் உறுதிப்பாடினால் சிங்கப்பூர் வழிகாட்டுகிறது   பல  இன ஐக்கியத்திற்குப் பாராட்டு.
  சிங்கப்பூர் இப்போதைய தலைமைத்துவத்தின் கீழ் நெடுங்காலம் அரசியல் உறுதிப்பாட்டுடன் விளங்கி வரும்  சிங்கப்பூரில் விரைவான பொருளாதார் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதற்கு வலுவான தலைமைத்துவமும் மக்களின் கடின உழைப்புமே காரணம்.இந்த இரண்டு சிறப்புகளையும் பெற்றிராததால் தான்  வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் பல தலை தூக்க முடியாத நிலைமையில் இன்று  இருந்து  வருகிறது.
   வளச்சி  வரும் ஆசிய நாடுகளுக்கு சிங்கப்பூர் மிகச் சிறந்த முன்னோடியாக திகழ்கிறது. வளச்சி பெற்றுள்ள நாடுகள் கூட சிங்கப்பூரிடமிருந்து  சிலவற்றை எடுத்துக்கொள்ள  இயலும். பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினை தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பல்மடங்கு உயர்ந்துள்ளது.
   மலேசியா ,தாய்லாந்து , லாவோஸ் , தென்வியட்னாம்,ஜப்பான், ஹான்காங் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வந்த பின்பு அறிந்த உண்மை இது .
சிங்கப்பூரின்  அரசியல் பொருளாதார  சமூகவியல் சிறப்புகள் வாய்த்தது.
இங்கு நிலவும் பல  இன மக்களின் ஒருமைப்பாடு தண்மை  வெகுவாக கவரக்  கூ டியது.  ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் கொண்டு சில நாடுகளில் இன ஐக்கியம்  ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது.
    சிங்கப்பூரில் பல இன மக்கள்  வாழ்ந்துவரினும் அரசியல் சமுதாய நீதி  ஆக்கியவற்றை தலைமைத்துவம் வழுவாது பேணி வருவதால் இங்கு இனவாத பிரச்னைக்கு என்றுமே இடமிருக்காது,  சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் சாசனத்தின் மூலம் உத்தரவாதமளிக்கக் கூடிய முற்போக்குக் குடியரசாக   சிங்கப்பூர் விளங்குகிறது.
  
     நாட்டு நடப்புகளை சிங்கப்பூர் மக்கள் நன்கு உணர்ந்தவர்களாக உள்ளனர் .
உழைத்து முன்னேற   விரும்பும் செயல் வேகம் மக்களிடம் மேலோங்கி நிற்கிறது .இதனால் வெற்று  அரசியல் முழக்கங்களுக்கு  இடமேற்படாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். சிங்கப்பூர் போன்ற செயல் முனைப்பு உள்ள  சமுதாயத்தில் அரசியல் சந்தர்பவாதங்களுக்கும், சுரண்டலுக்கும் என்றைக்குமே இடமிருக்க முடியாது .

    ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக சிங்கப்பூர்தான் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கின்றது .இந்த வளர்ச்சி வேகம் சிங்கப்பூரில் தொடர்ந்து இருந்து வரும் .வெளிநாட்டு மூலதனங்களைக் கவரும் வகையில் சிங்கப்பூரின் பொருளாதாரக்  கொள்கைகள் இருப்பது இதற்கு நல்ல அடிப்படை.

   பயண தொழில் வளர்ச்சியிலும் சிங்கப்பூருக்கு சிறப்பான இடம் எப்பொழுதும் இருக்குமாறு செயல்படுகிறது .சிங்கப்பூருக்கு வரும் பணக்கார பயணிகள் தங்கள் தாயகத்தில் இருப்பது போன்று உணரக்கூடிய  அளவுக்கு பயணத்துறைப் பணிகள் இங்கு சிறப்பாக இருக்கின்றன.

முஹம்மது அலி ஜின்னா, நீடூர்.)

(nidurali" "நீடூர்அலி") 






Monday, March 7, 2011

ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே?


(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்.(ஓ)

        பேட்டை முதலாளி என்று செல்லமாக அழைக்கப்பட்ட தோல் வியாபாரத்தில் கொடிகட்டிப் பிறந்த கண்ணிய மிகு காயிதே மில்லத் தனது உடல், பொருள், ஆவி அத்தனையும் இஸ்லாமிய சமூகத்திற்காக அர்ப்பணித்து தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவிலும் தலை நிமிர்ந்து நிற்க வைத்த பெருமை படைத்த அப்பழுக்கற்ற அரசியல் வாதிமட்டுமல்ல நாடடுப்பற்று மிக்க புகழ் மிக்கவர். தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி, பகுத்தறிவு பகலவன் பெரியார், எழைப்பங்காளன் காமராஜர் போன்றவர்களுடன் இணையாகப் பேசப்பட்டவர் காயிதே மில்லத் அவர்கள். 1967 ஆம் ஆண்டு நான் புதுக்கல்லூரி மாணவனாக இருந்த போது பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் பொருப்பினை ஏற்ற போது குரோம்பேட்டை வீடு தேடிச் சென்று வாழ்த்துப் பெரும் அளவிற்கு உயர்ந்தவர் காயிதே மில்லத். தனது நீண்ட மேலாடையில்(ஓவர்கோட்) மெலிந்த உருவமானாலும் உயர்நது விளங்கினாரர்.

  அவருக்கு உறுதுணையாக சிம்மக் குரலோன் திருப்பூர் மொய்தீன், ரமணசமுத்திரம் பீர்முகம்மது, இலக்கியச் செல்வன் லத்தீப், முகவை எஸ்.எம். செரீப், வந்தவாசி வகாப், பத்திரிக்கையாளர் திருச்சி ஈசூப், கொள்கைச் செம்மல் ஏ.கே. சமது, இளைஞர் சிங்கம் செஙகம் அப்துல் ஜப்பார் போன்றவர்கள் இருந்ததால் இந்திய பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தன்மையுடன் இரட்டைப்படையில் பதவி வகித்து இஸ்லாமிய குரலினை ஒலிக்கச் செய்தது. ஆனால் இன்று தங்கள் கட்சியினை அங்கீகாரம் பெற முடியாத அளவிற்கு தாவூத் மியாகான் கட்சி சவால் விடடும், தி.மு.க கட்சியின் பின்னால் ஒளிந்து கொள்ளும் அளவிற்கு தேய்து விட்டது பரிதாபமாக இல்லையா தோழர்களே?