1999-2000 ஆண்டுகளில், நான் பத்திரிகைகளில் வாசகர் கடிதம், துணுக்குகள் எழுதிக்கொண்டிருந்த சமயத்தில், ராஜு சுந்தரம் - சிமரன் காதல் உச்சத்தில் இருந்த நேரம். ஒரு முறை ஐரோப்பாவிற்கு சூட்டிங்கிற்காக போய் திரும்பிய ராஜு சுந்தரத்தின் பேட்டியை ஆனந்த விகடன் போட்டிருந்தது.
"அதெல்லாம் கிடக்கட்டும், ஐரோப்பாவிலிருந்து சிம்ரனுக்கு என்ன வாங்கி வந்தீங்க ராஜூ சுந்தரம் சார்?"- என்று ஒரு வாசகர் கடிதத்தை சும்மா வேடிக்கையாய் விகடனுக்கு அனுப்பி அது அடுத்த வாரம் பிரசுரமாகியிருந்தது.
Showing posts with label மகன். Show all posts
Showing posts with label மகன். Show all posts
Monday, July 14, 2014
Thursday, February 27, 2014
அன்பு தாங்க வாழ்க்கை அதை எப்பதான் புரிஞ்சுப்பாங்களோ!
இன்றைக்கு காலைல ஆபிஸ் போனேன், நான் என்னோட சைக்கிள் நிறுத்துற இடத்துல ஒரு மகனும் அவருடைய தாயாரும் பேசிட்டு இருந்தாங்க! நான் கொஞ்சம் நகருங்கன்னு சொல்லிட்டு என் சைக்கிளை நிறுத்திக்கொண்டிருக்கும் பொது , நான் விரும்பாமலேயே அவர்களின் உரையாடல் என் செவியை தீண்டியது.
அந்த அம்மா சொன்னாங்க, நான் உன் ப்ரண்ட், என் கிட்ட எதையும் மறைக்காதடா தம்பி
அதுக்கு அந்த மகன், இல்லேம்மா பேஸ்புக்ல தான் அந்த பொண்ணு பழக்கம் மூனு மாசம் தான், மூனு முறை தான் பாத்திருக்கேன்னு!
நீ என்னடா இப்படி சொல்ற, அந்த பொண்ணோட அப்பா வந்து மிரட்டுறாங்க, பொண்ணு முழுகாம இருக்காளாமே!
வந்து இல்லம்மா, நான் டேப்ளட் வாங்கித்தரட்டுமான்னு கேட்டேன், அப்பவெல்லாம் இல்ல சரியாயிடுச்சுன்னு தான் சொன்னா,
இதையெல்லாம் விரும்பாமத்தான் கேட்டியான்னு கேட்குறீங்களா?........இல்லைங்க இயல்பாவே என்னால ரொம்ப மெதுவாதான் நடக்க முடியும். அதனால கிசுகிசு ப்பா அவங்க பேசினாலும் அது என் மனசை பிழிய ஆரம்பிடுச்சுடுச்சு, இதுக்கு பேர் காதலான்னு யோசிட்டு நான் நடக்கும் போதே அந்த மகன் ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க! என்கிட்ட படுத்த மாதிரி எத்தனை பேருக்கிட்ட படுத்தாளோ!
அந்த பொரம்போக்கை நிஜமாவே அந்த பொண்ணு நேசிச்சிருந்தா பாவம் அவளும் அவ குழந்தையும்! சும்மா பொறுக்கி பண்ணாடையா இருந்தா என்ன கண்ராவி கலாச்சாரம் டா சாமி!
யோசிட்டு போய் ஆபிஸ்ல உட்கார்ந்ததுல கொஞ்ச நேரம் வேலை பார்க்க முடியல,

Sunday, November 18, 2012
மனைவி சொல் கேட்டு மானமும் போச்சு வாழ்வும் போச்சு !
தெரு ஓரம் அழகிய வாகனம் ஓடிப்போய் ஓர் அலசல் பார்வை
உறவினர் ஓசைக் கேட்டு உறங்க
மென்மையான ஒலி எழுப்ப
விழித்துப் பார்த்து வாழ்த்து சொன்னார்
வாங்க வாங்க வீடு வரை வாங்க
வார்த்தை மதித்து வந்தார்
கட்டிய வீட்டை காட்டி விளக்கம் கொடுத்தேன்
படுக்கை அறை அதில் குளியல் அறை
பெரிய கூ டம் சின்ன கூ டம்
அடுப்பங்கறை அதில் பொருட்கள் வைக்க இணைப்பு அறை
மகளுக்கு, மகன்களுக்கு தனித் தனி அறை
வீடனைத்தும் சலவைக் கல் பதிப்பு
பார்த்தார்! அங்கும் இங்கும் பார்த்தார்
தொழ வேண்டும் தொழ அறை உண்டா! என வினவினார்
'பெரிய அறையில் தொழலாம்' என்றேன்
'வேண்டாம் ! அருகில் பள்ளி அங்கு தொழ செல்கிறேன்' என்றார்
புறப்பட்டு முன் ' உங்களிடம் ஓர் உதவி'
'சொல்லுங்கள் நேரம் ஆனது '
வயதிற்கு வந்த மகள்களுக்கும் மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்க விரும்பினேன்
வாழ்கைப் பட்டவள் நல்ல வீடு இருப்பின் நல்ல வரம் கிடைக்குமென்றாள்
வசதியாக வீடு கட்டியதில் சிறிய கடன்
கட்டிய வீட்டைப் பார்த்து செலவந்தர்கள் ஓடிவர
மக்களுக்கு சிறப்பாக திருமணம் முடித்ததில் பெரிய கடன்
Wednesday, August 8, 2012
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை மதிக்காது உயர் வில்லையே
நெஞ்சில் நின்று வாழும் ரூபம்
பெற்ற தாயன்றி வேரொன்று ஏது ?
- அம்மா
அகமதர் நபிதொட்டு அனைத்துயர் மேதைகளை
அகிலத்திற் களித்தது தாய் தானம்மா
மகன் பெற்ற புகழ் கண்டு போறாமை உலகத்தில்
மனம் பொங்கி மகிழ்வதும் தாய் தானம்மா
பேருச்சி மலை மீது புகழ் ஓங்கி நின்றாலும்
நான் எந்தன் தாய் பாதம் கீழ் தானம்மா
தாயை நான் மறந்தாலும் தாய் என்னை மறக்காத
தருமத்தை யான் மறவா நிலை வேண்டுமே !
என் தாயே பொறுப்பாயே
- அம்மா
உன் தாயின் பாதத்தில் உன் சொர்க்கம் நபிசொன்ன
பொன் வாக்கு என் நெஞ்சின் அலை யானதே
பொற் தாயின் பணிவிடையால் பேருவை சுல் கர்ணிக்கு
பெருமானை தரிசிக்கும் நிலை போனதே
வயதான தாய் வீட்டில் பணிவிடை என் பொருப்பில்
உயர்வான கடன் ஹஜ்ஜும் கடனில்லையே
இறைபொருத்தம் யான் வேண்டின் எனை ஈன்ற தாய் பொருத்தம்
கிடைத்தாலே புவிவாழ்வில் அது போதுமே !
என் தாயே பொருந்துவாயே !
- அம்மா
பொன் முத்து மணி என்ன பூலோக செல்வங்கள்
பூராவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா!
மலை போன்று விலை வைத்து புவி சந்தை எங்கிலும்
கேட்டாலும் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் உன் வயிற்றில் எனை சுமந்து
நீ பட்ட பெரும் பாட்டை மறை கூறுதே !
காலங்கள் எல்லாமும் நொடி நொடியாய் நன்றி கடன்
செய்தாலும் பெற்றெடுத்த கடன் தீருமா ?
என் தாயே என்னுயிரே !
- அம்மா
தாயில்லா பிள்ளைகள் தவிக்கின்ற நிலை கண்டு
கரையாத கல் நெஞ்சும் கரையுதம்மா.
நோய் பட்டு தன் பிள்ளை பாய் தன்னில் கிடக்கையில்
வாய் விட்டு அழுவதும் தாய் தானம்மா
பாலூட்டி சோறு(ruu)ட்டி ஈ எறும்பு கடிக்காமல்
இரவெல்லாம் விழித்ததும் தாய் தானம்மா
தாயே உன் பொன் மனம் கலங்காமல் பார்த்துன்னை
தலை மீது வைத்தல் என் கடமை அம்மா
என் தாயே இதயமே
-அம்மா.
முதற்கடமை யார் மீது என கேட்க மும்முறை
அருந்தாயைச் சொன்னார்கள் நபி நாதரே
நபி மூஸா சுவனத்து தோழராய் ஆனவர்
முதிர் தாய்க்கு பணி செய்த அரும் தோழரே
மறை வேதம் கிரந்தங்கள் இறைத்தூதர் உயர்வாக
உரைக்கின்ற தாய்மைதான் லேசானதா?
என்ன ஈன்ற தாயே உன் ஆசியே என் வாழ்வு
தாயே உன் நல்லாசி தா என் தாயே !
என் தாயே என் மூச்சு!
அம்மா ....
பாடல் - கொள்ளுமேடு, ஹாபீஸ் பாருக் ஹஜ்ரத் அவர்கள்.
பாடல் பாடியவர் -தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள்.
வீடியோ - S.E.A. முஹம்மது அலி ஜின்னா, நீடூர்.
தீனிசைத் தென்றல், தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
நன்றி

Wednesday, May 2, 2012
அம்மாவின் ஆற்றாமையும் அவரது அவசியமான பொய்யும்!
அன்பு மகனே உன் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தேன். என் மகன்
பெரிய படிப்பு படித்து வேலையில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்து முதல் சம்பளம்
இன்று வாங்கி வருவான் அதில் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ந்து இறைவனைத்
தொழுது அந்த தொகையில் ஒரு பங்கை தர்மம் செய்வதோடு உறவினருக்கும் கொடுத்து
,மற்றொரு பங்கை உனது மேல் படிப்புக்காக வாங்கிய கடனில் சிறிது கொடுத்து
மீதி உள்ளதனில் சிறிது மாத செலவுக்கு சேமிப்பதோடு மகிழ்வுடன் நாங்களும்
வெகு நாட்களுக்குப் பிறகு நல்ல உணவு சமைத்து சாப்பிடலாம் என்ற நினைவோடு
இருந்தேன் . நான் நினைத்ததை மற்றவர்களிடமும் சொல்லி மகிழ்ந்தேன்.
பலமணி நேரங்கள் நானும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காத்திருந்தோம். மாலை நேரம் முடிந்தது. இரவு நேரமும் வந்தது. நீ வந்த பின்புதான் அனைவரும் சேர்ந்து உணவு அருந்தும் முடிவுடன் இருந்தோம். நேரம் கடந்துக் கொண்டே இருந்தது . ஒவ்வொருவராக அயர்ந்து போய் உண்ணாமலேயே இருந்த இடத்திலேயே அமர்ந்தவாறே தூங்க ஆரம்பித்து விட்டனர்.
நான் மட்டும் உறங்காமல் உன் நலம் நாடி இறைவன் பெயரைச் சொல்லி ஓதிக் கொண்டிருந்தமையால் நடுநிசியில் நீ வந்து வாசற் கதவை தட்டும்போது மலர்ந்த முகத்துடன் உன்னை வரவேற்றேன். 'ஏன் இவ்வளவு நேரம்! உன் வருகைக்காக எல்லோரும் காத்திருக்கிறார்களே நேரத்திற்கே வீடு வந்திருக்கலாமே' என்றேன்! 'அம்மா நான் வருவதாகத்தான் இருந்தேன் ஆனால் என்னோடு வேலை செய்யும் நண்பர்கள் என்னை அவர்களுக்கு முதல் சம்பளத்தில் ஒரு விருந்து கொடு என்று பெரிய நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து சென்று விட்டாரர்கள். நான் வாங்கிய சம்பளத்தில் பாதி செலவழிந்து விட்டது' என்றான்.
நான் போட்ட திட்டங்கள் நிறைவேறாமல் போனதே என்ற ஆற்றாமை மனதில் இடியாகத் தாக்கினாலும் அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல் 'நீ இதனை சொல்ல வேண்டாம் மாதக் கடைசியானதால் விடுபட்ட வேலைகளை முடிக்க நேரமாகிவிட்டது மற்றும் பாதி சம்பளம்தான் தந்தார்கள் மீதியை அடுத்த மாதம் தருவதாக சொல்லியுள்ளார்கள்' என்று சொல்லிவிடு என்றேன்.
பெற்ற மனது மகனுக்காக பொய் சொல்ல சொல்லிக் கொடுத்தது.
தவறான காரியம் நிகழாமல் தடுக்கவும், நல்லவரைக் காப்பாற்றவும் மற்றவருக்குள் சமாதானத்தினை உருவாக்கும் எண்ணத்தோடும் அதனால் ஒரு நல்ல காரியம் நிகழுமென்றால் பொய் சொல்லலாம். குடும்பத்திற்குள் ஒரு கவலை வராமல் இருக்க குடும்பத்தில் உள்ளோர் மகிழ்வுக்காக தாய் தனது மகனுக்காக சொல்லிய பொய்யை இறைவன் மன்னித்தருள்வான். அவன் மிக்க கருணையுள்ளவன்.

Subscribe to:
Posts (Atom)