Wednesday, January 20, 2010

சித்தாரியா அர‌புக்க‌ல்லூரியின் நிருவ‌ன‌ர் அல்ஹாஜ் செய்ய‌து முஹ‌ம்ம‌து புஹாரி ஆலிம் ஃபாஜில் ம‌ன்ப‌யீ க‌ர்னாட‌கா மாநில‌ம் குல்ப‌ர்கா வ‌ருகை

Muduvai Hidayath


சித்தாரியா அர‌புக்க‌ல்லூரியின் நிருவ‌ன‌ர் அல்ஹாஜ் செய்ய‌து முஹ‌ம்ம‌து புஹாரி ஆலிம் ஃபாஜில் ம‌ன்ப‌யீ க‌ர்னாட‌கா மாநில‌ம் குல்ப‌ர்கா வ‌ருகை


இராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் சித்தார்கோட்டையில் ந‌டை பெற்று வ‌ரும் சித்தாரியா அர‌புக்க‌ல்லூரி க‌ட‌ந்த‌  2001 ஆம்ஆண்டு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.இந்த‌ அர‌புப் பாட‌ க‌ல்லூரியில்  ஆராம் வ‌குப்பு முத‌ல் +2 ம‌ற்றும் பிபிஏ,பி காம், பீஏ வ‌ரை பள்ளிக் க‌ல்லூரி க‌ல்வியும் க‌ற்க‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. மேலும் குர் ஆன் ம‌ன‌ன‌ம் (ஹிஃப்ழு த‌ஜ்வீத்)ஐந்து ஆண்டுக‌ள் ஓதி முடித‌த‌ பிற‌கு ம‌வ்ல‌வி ஆலிம் ஸ‌ன‌து வ‌ழ‌ங்குத‌ல் ம‌ற்றும் சென்னை யுனிவ‌ர்சிட்டியில் அஃப்ஜ‌லுல் உல‌மா தேர்வு எழுத‌வும் ப‌யிற்சி அளிக்க‌ப்ப‌டுகிறது.இங்கு ப‌யிலும் மாணாக்க‌ர்க‌ள் ப‌ட்ட‌ம் பெற்று வெளியாகும் பொழுது ம‌வ்ல‌வி ஆலிம் சித்தாரஸ‌ன‌து பெற்ற ஆலிமாக‌வும்,அவ‌ர‌து விருப்ப‌த்திற்கேற்ப டிகிரி பெற்ற ப‌ட்ட‌தாரியாக‌வும் வெளியேருவார்க‌ள்.

அல்லாஹ்வின் ர‌ஹ்ம‌த்தால் தொட‌ர்ந்து மூன்று ஆண்டுக‌ள் ப‌ட்டம‌ளிப்பு விழா நிக‌ழ்த்தி பல‌உல‌மாக்க‌ளை ச‌முதாய‌த்திற்க்காக த‌ந்திருக்கிறார்க‌ள்



ம‌லேசியா பின‌ங்கு க‌பித்தார் ப‌ள்ளிவாச‌லின் இமாமாக ப‌ணி செய்து வ‌ரும்
இராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் சித்தார்கோட்டையைச் சார்ந்த‌ வ‌ரும் தொண்டி,அம்மா ப‌ட்டிண‌ம்,

ஆகிய‌ ஊர்க‌ளில் ந‌டை பெற்று வ‌ரும் அர‌புக்க‌ல்லூரிக‌ளில் நாஜிராக ப‌ணி ஆற்றிய‌வ‌ருமான
அல்ஹாஜ் செய்ய‌து முஹ‌ம்ம‌து புஹாரி ஆலிம் ஃபாஜில் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ள் சேவை

ம‌ன‌ப்பான்மையோடு இக்க‌ல்லூரியை துவ‌ங்கி ந‌ட‌த்தி வ‌ருகிறார்க‌ள்.

 

  இந்த க‌ல்லூரியில் ப‌யிலும் மாணாக்க‌ர்க‌ளின் எதிர் கால‌ம் சிற‌ப்பாக‌ அமைய‌ வேண்டும் என்ற ப‌ர‌ந்த ந‌ன் நோக்க‌த்தில் உருது மொழி ம‌ற்றும் ஃபார்ஸி மொழிக‌ளும் இனி வ‌ரும் ஆண்டுக‌ளில் மாணாக்க‌ர்க‌ளுக்கு க‌ற்பிக்க‌ப்ப‌ட வேண்டும் என்ற அடிப்ப‌டையில் நிருவ‌ன‌ர் அல்ஹாஜ் செய்ய‌து முஹ‌ம்ம‌து புஹாரி ஆலிம் ஃபாஜில் ம‌ன்ப‌யீ க‌ர்னாட‌கா மாநில‌ம் குல்ப‌ர்கா வ‌ருகை த‌ந்து அது ச‌ம்ப‌ந்தமான ப‌ல‌ அர‌புக்க‌ல்லூரிக‌ள் ம‌ற்றும் மார்க்க‌ப் பெருந்த‌கைக‌ளிட‌ம் ஆலோச‌னை செய்யும் முக‌மாக வ‌ருகை த‌ந்துள்ளார்க‌ள்.

இவ‌ர்க‌ளின் சேவைப் ப‌ணி சிற‌க்க துஆ செய்வோமாக‌. ஆமீன்

அன்புட‌ன்
அஹ்ம‌த் ப‌ஷீர் சேட் ஆலிம்

P1020279.JPG


View   Download  
P1020277.JPG


  View   Download  








No comments:

LinkWithin

Related Posts with Thumbnails