பொதுவாக என் அனுபவத்தில் மனிதரிடம் மனதைவிட நிறம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. என்னை பொருத்த வரை மனித கடமைகளில், மனித் தன்மைக்கும், நேயத்திற்கும் முதலிடம், அதன் பிறகுதான் ஆண் அல்லது பெண் என்ற வேறுபாடுகள் கடைசியாக நம்முடைய மற்ற கடமைகளான அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, கணவன், மனைவி, மகன், மகள், நண்பர்கள் அனைத்துமே. இதையே அன்பு, பாசம் என பிரித்து பார்தாலும் மனித்தன்மைதான் முதலிடம் உ.ம் மனைவியே ஒரு வேண்டுகொள் வைக்கிறார் என்றால் மனைவி என்ற முறையில் அதை மறுக்கலாம், ஆனால் அதே வேண்டுகோளை முதலில் மனித்தன்மையுடன் பார்த்து சரி என பட்டால் அதை நிராகரிக்க கூடாது.
முன் பதிவுகளில் கூறியது போல் ஆதி மனிதன் அல்லது முதல் மனிதனின் உடலில் மிஞ்சிய பகுதி 90,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அவனில் இருந்து வந்தவர்கள்தான் நாம் அனைவரும். அந்தந்த சீதோஷண நிலைக்கு தக்கவாறு DNA Mutation எற்ப்பட்டு நமது தோலின் நிறம் மாறுபாடு அடைந்து இருக்கிறது. எப்படி பூமத்திய ரேகைக்கும் நமது தோலின் நிறத்திற்கும் சம்பந்தம் உள்ளது என கீழே இருக்கும் படத்தை பார்த்தால் விளங்கும்.
பொதுவாக நாம் கூறும் மனித வர்கத்தின் நிறங்கள்.
இந்த மாயை விளையாட்டு ஒளியினால் ஏற்படுவது. ஒளி என்பது மின்காந்த அலையதிர்வுகள் என அனைவரும் அறிந்ததே. இது நமது உடலின் உள்ள செல்களினுடன் ஆற்றல் பரிமாற்றம் செய்யும் போது நமது நிறம் அதற்கு ஏற்றவாறு அமைகிறது.
கப உடம்பை பெற்றவர்களுக்கு, கறுப்பு அல்லது மரத்தை போன்ற நிறம் இருக்கும்.
பித்த உடம்பினருக்கு, செம்பு, மஞ்சள் நிறம்.
வாத உடலை பெற்றவருக்கு வெண்மை, வெண்மை கலந்த மஞ்சள் நிறமிருக்கும்.
வாழ்க வளமுடன்
நன்றி :http://haish126med.blogspot.com




No comments:
Post a Comment