ஒரு படைப்பு எப்படி உருவாகிறது.அது தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது என்று எங்கோ படித்ததாக நினைவு.காய்ந்த இலைச்சருகுகளில் தீப்பொறி பட்டு பற்றி எரிதலைப் போல,கற்பனைக் கோடுகளில் ஒரு புள்ளி முழுமையான படைப்புக்கான நெருப்பைக் கொணர்கிறது.அது ஒரு மழை நாளில் ஆரம்பிக்கலாம்.அல்லது அடர்ந்த இருளின் மறைவில் உறங்கி கொண்டிருக்கலாம்.எதோ ஒரு புத்தகத்தின் ஒரு மூலையில் சிதைந்திருக்கும் ஒரு வார்த்தையால் தட்டி எழுப்பப்படலாம்.அல்லது பேருந்தில் முன் இருக்கையில் தன் தாயின் தோளில் கண்ணயர்ந்திருக்கும் சிறுகுழந்தையின் கண்களிலிருந்து துவங்கலாம்.இப்படித்தான் கதைகள் பிரசவிக்கின்றன என்று எந்த ஒரு படைப்பாளியும் அறுதியிட்டு சொல்வதில்லை.கற்பனைச் சிறகுகள் பறக்க முயலும் தருணம் வரை அதை வண்ணந்தீட்டி கொண்டே இருக்கிறான்.அவ்வப்பொழுது மனதிற்குள் அதற்கு உருப்போடுகிறான்.அழகு குறையாமல் சூசகமாக செதுக்குகிறான்.மொழி பிசகாமல் மெளனமாக கதையோடு உரையாடுகிறான்.உறவாடுகிறான்.இறுதியில் தாயின் வலியோடு பிரசவிக்கிறான்.
************************************************
"மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன."
"பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும்,உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை."
அல்குர்ஆன் 6:59 ஸூரத்துல் அன்ஆம்.
************************************************
நன்றி :http://amsyed.blogspot.com

No comments:
Post a Comment