உடலுக்கு வலிமை, மூட்டுகளுகு வலிமை, தோலுக்கு பளபளப்பு, கண்ணுக்கு குளிர்ச்சி, தோல், மலம், சிறுநீருக்கு நிறம் தருதல், உடலுக்கு மென்மை, வளமை, பொறுமை தருதல், நாவுக்கு இனிப்பு சுவை தோன்றல் போன்ற செயல்களைச் செய்கிறது.
நோய் நிலையில், உடல் குளிர்தல், அரிப்பு, மந்தம், உடல் பாரமாக இருத்தல், உடல் எண்ணைப் பசையாக இருத்தல், உணர்விழப்பு, நாவில் அதிக இனிப்பு சுவை காணுதல், தொழில் செய்ய உற்சாகம் இன்மை, பசியின்மை, உமிழ்நீர் சுரப்பு அதிகரித்தல், இருமல், மேல்மூச்சு, அதிக தூக்கம், தலைசுற்றல், தோல் வறட்சி, நெஞ்சு படபடப்பு ஆகிய அறிகுறிகள் தோன்றும்.
இந்த வாத, பித்த, கப உடலமைப்பு கொண்டவர்களின் உடல் அமைப்பு முறைகளை கொண்டு எப்படி கண்டு பிடிப்பது என அடுத்து வரும் பதிவுகளில்....தொடரும்.
வாழ்க வளமுடன்
உடல் நலம்
நன்றி.http://haish126med.blogspot.com
No comments:
Post a Comment