தென்னகத்தில் இஸ்லாமிய வாணிபர்கள் தாம் திருமறையின் பிரச்சாரகர்களாக விளங்கினார்கள். பண்டை நாளிலிருந்தே தமிழ் மக்களும் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்:
“நீரில் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலில் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும், பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும், அகிலும்
தென்கடல் முத்தும், குணகுடல் துகிரும்
கங்கை வாரியும், காவிரிப் பயனும்
ஈழத்துணவும், காழகத்(து) ஆக்கமும்.
. . . . . . . . . ”
என்று சோழர் துறையாகிய காவிரிப் பூம்பட்டினத்தில் பல்வேறு பண்டங்கள் வந்த குவிவதைப் பத்துப் பாட்டிலுள்ள பட்டினப்பாலை வர்ணிக்கிறது.
அரபுக் குதிரைகளும், மணியும், பொன்னும், அகிலும், சந்தனமும், முத்தும், பவளமும் (துகிரும்), ஈர்த்திருநாட்டின் நற்பொருள்களும், பர்மிய (காழகத்தின்) பொருள்கள் பலவும் அத்துறைமுகத்தில் வந்து நிறைந்தனவாம்.
No comments:
Post a Comment