Friday, January 1, 2010

பேராசிரியர் எம்.ஏ.சுசீலா



 by முனைவர் கல்பனாசேக்கிழார்

மதுரை பாத்திமாகல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து தற்போது ஒய்வு பெற்று இந்திய தலைநகரான டெல்லியில் வசித்து வருபவர் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்கள். கடந்த சில மாதங்களாக அவர்களுடன் பழகும் வாய்ப்பினைப்பெற்றேன். அவர்கள் மொழிபெயர்ப்புச் செய்த குற்றமும் தண்டனையும் என்னும் நூலை இந்த ஆண்டு புத்தக்கணகாட்சியில் வாங்கியிருந்தேன். அந்நூலே அவர்களை அறிய காரணமாக இருந்தது. பிறகு அவர்களுடன் இணையத்தில் மட்டுமே உரையாடிக்கொண்டு இருந்தேன் . கடந்த மாதம் அவர்கள் நெறிகாட்டுதலில் முனைவர்பட்ட அய்வு மேற்கொண்டு ,முடித்த பெண்ணுக்கு வாய்மொழித் தேர்வுக்கு மதுரை வருவதாக எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள்.

அவர்களைச் சந்திக்க மிகுந்த ஆர்வமாக இருந்தேன்.அவர்கள் மதுரை வந்தவுடன்,சென்று சந்தித்தேன்.நான் வருகிறேன் என்று கூறிய நாளுக்கு முதல் நாளே சென்றேன்.அவர்கள் பணியை ஒதுக்கி வைத்துவிட்டு , என்னோடு நேரத்தைச் செலவிட்டார்கள்.பழகுவதற்கு மிக எளிமையனவராக,இனிமையானவாராக இருந்தார்கள். அவர் அவர்களுடை குடும்ப நண்பர் வீட்டில் தான் தங்கிஇருந்தார்.அவர்களோடு 30 ஆண்டுகால பழக்கமாம்.அவர்களும் மிக அன்போடு வரவேற்றார்கள்.

இலக்கியத்தைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தோம். இன்றைய பெண்ணியம் பற்றி வினாவினேன் . இன்றைய பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் ஏற்றக்கொள்ளும் படி இல்லை என்றார்.காரணம் அவர்கள் பெண்ணுரிமை ,பெண்ணியம் என்பதை தவறாக புரிந்துகொண்டு,இலைமறை காயாக இருக்கவேண்டிய செய்திகளை எல்லாம் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றார்கள் எனச் சாடினார்.

அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது பல ஆண்டுகள் அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பெண் வந்தாள். அந்த பெண் டெல்லியில் சென்று அங்கு வேலை செய்துள்ளாள்,அந்த பெண்ணுக்கு வேண்டிய அனைத்தும் செய்துள்ளார்கள்,அந்த பெண்ணைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தராகவே நினைத்துள்ளனர்.ஆனால் அந்த பெண் வீட்டில் உள்ள அனைவரும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென விரும்பி,அவர்களைப் பலவகையில் துன்புறுத்தியுள்ளாள்.ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டாள் இறந்துவிடுவேன் என்று மிரட்டியும் இருக்கின்றாள். அவர்கள் பயந்து போய் ஊரில் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள்.இப்பொழுது ஏதாவது உதவிசெய்யுங்கள் என்று வந்து நிற்கின்றாள்.சுசீலாஅம்மாவும் முடிந்த உதவியைச் செய்கின்றேன் என்று அனுப்பி வைத்தார்கள்.இன்னா செய்தாருக்கும் இனியவே செய்வார்கள் பெரியோர் என்பதனை அவர்களைப் பார்த்து அறிந்தேன்.

பணியில் இருந்து ஒய்வு பெற்ற பின்னும் நேரத்தைப் பொன்போல் மதித்து, தேனீ போல சுறுசுறுப்பாய் இயங்கி வருகின்றார்கள்.இணையத்திலும் எழுதிவருகிறார்கள்.அவர்களின் இடைவிடாத உழைப்பு
என்னைக் கவர்ந்
து.
நன்றி http://www.sekalpana.com/

.

No comments: