முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்க ரங்கநாத் ஆணையம் பரிந்துரை!: "
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
by Nidur Faizur AMB
முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 10 சதவீதமும் மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு அளிக்கவும், அனைத்து மதத்தைச் சார்ந்த தலித்துகளையும் எஸ்.சி. பிரிவில் இணைக்கவும் ரங்கநாத் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள மத அடிப்படையிலான மற்றும் மொழி அடிப்படையிலான சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா தலைமையில் தேசிய மத மற்றும் மொழி சிறுபான்மை ஆணையம் என்ற பெயரில் அமைத்தது.
ரங்கநாத் ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வெள்ளிக் கிழமையன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
சிறுபான்மையினர் நடத்தும் கல்விக் கூடங்களில் 50 சதவீத இடம் பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு இருப்பதால், சிறுபான்மை கல்விக் கூடங்களிலும் அவர்கள் 50 சதவீதம் இடங்களையே பெற முடியும் என்ற நிலை இருக்கிறது. இதனைக் களைய கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும் மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
அனைத்து மதத்திலும் உள்ள தலித்துகளையும் எஸ்.சி. பிரிவில் சேர்க்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதுவரை இந்து மதத்தில் உள்ள தலித்துகள் மட்டுமே எஸ்.சி. பிரிவில் இருந்து வந்தனர். பின்னர் பெளத்தம் மற்றும் சீக்கிய மதத்தில் உள்ள தலித்துகளும் எஸ்.சி. பிரிவில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி,
Source : இந்நேரம்.
No comments:
Post a Comment