கணவனின் படுக்கைக்கு வரமறுக்கும் பெண்கள்!:
எல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.
கணவன் தன் உடல் இச்சையைத் தணிப்பதற்காக மனைவியை அழைப்பது ஒரு சாதாரண விஷயம். இஸ்லாம் இதிலும் தலையிட்டு, ''கணவன் அழைத்தால் மனைவி மறுக்கக்கூடாது'' என்று கூறுவதால் ''இஸ்லாம் ஓர் பெண்ணடிமை மதம்'' என்று அவசர முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.
ஆணுக்கு ஏற்படும் உடற்கிளர்ச்சி அவனை, மிருகத்தனத்திங்குத் தள்ளி தனக்கு உரிமையில்லாத அன்னியப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தை பிரயோகிக்கவும் தூண்டி விடுகின்றது. எல்லா ஆண்களும் இப்படி இல்லையென்றாலும், கணிசமான ஆண்கள், அன்னியப் பெண்களிடம் வரம்பு மீறி கீழ்த்தரமாக நடந்து கொள்வது அன்றாடச் செய்திகளில் வாசிக்கிறோம். (சமீபத்திய உதாரணம்; ஆந்திர கவர்னர் திவாரி.)
உடல் உணர்வுகள் கணவனுக்கும், மனைவிக்கும் சரிசமம் என்றாலும், கணவன் தயாராகாமல், மனைவிக்கு உணர்வுகள் ஏற்பட்டு எதுவும் நடந்து விடப்போவதில்லை. கணவனுக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டு, மனைவி தயார் இல்லாமல் இருந்தாலும் காரியம் நடந்துவிடும். அதற்காக கணவன், மனைவியை பலாத்காரம் செய்யலாம் என்று பொருளில்லை. பாலின உடற்கூறுகள், கணவன் தயாராகாமல் மனைவியுடன் உடலுறவு சாத்தியமில்லை.
ஒரு பெண் தன் கணவன் படுக்கைக்கு அழைக்கும் போது மார்க்க ரீதியான தக்க காரணம் இல்லாமல் வராமலிருப்பது ஹராமாகும்.
No comments:
Post a Comment