என் இனிய ரிஷான்..
காற்றில் படபடக்கும்..
வெற்று காகிதங்களின்..
படபடப்பின்னும்
காதில் கேட்கலையோ...?
கைவிரல்
ரேகைகளை..
காதலித்து...
தினம்..தினம்..
முத்த தொய்வில்
மனம் குளிரும்...
உன் எழுதுகோல்
ஆங்கோர் ஓரமாய்
உன் தொடுதலுக்கு ஏங்குவது
தெரியலையா..?
மெல்லிய நூல் நுனி பற்றி..
நீ உயரப்பறக்கவிடும்..
வால் படபடக்கும்
பட்டத்தை
அண்ணாந்து அதிசயிக்க..
குழும வீதிகளில்
குழுமியிருக்கும்
அனேகரில்
அடியேனும் ஒருவன்...!
எம் பிரார்த்தனைகளில்
வலுக்கூடும்
சிறகுகள் சிலுப்பி..
சீக்கிரமாய்..எழுந்து வா..
என் தமிழ் தோழா...
நாம் கட்டவேண்டியிருக்கிறது
ஒரு தமிழ்கூடு..!
காற்றில் படபடக்கும்..
வெற்று காகிதங்களின்..
படபடப்பின்னும்
காதில் கேட்கலையோ...?
கைவிரல்
ரேகைகளை..
காதலித்து...
தினம்..தினம்..
முத்த தொய்வில்
மனம் குளிரும்...
உன் எழுதுகோல்
ஆங்கோர் ஓரமாய்
உன் தொடுதலுக்கு ஏங்குவது
தெரியலையா..?
மெல்லிய நூல் நுனி பற்றி..
நீ உயரப்பறக்கவிடும்..
வால் படபடக்கும்
பட்டத்தை
அண்ணாந்து அதிசயிக்க..
குழும வீதிகளில்
குழுமியிருக்கும்
அனேகரில்
அடியேனும் ஒருவன்...!
எம் பிரார்த்தனைகளில்
வலுக்கூடும்
சிறகுகள் சிலுப்பி..
சீக்கிரமாய்..எழுந்து வா..
என் தமிழ் தோழா...
நாம் கட்டவேண்டியிருக்கிறது
ஒரு தமிழ்கூடு..!
இக் கவிதையை எழுதிய இவர் ஒரு வலைப்பதிவராகத்தான்...
........அவர் வெங்கட் தாயுமானவன்.
இறப்பு, மீளச் சுருட்ட முடியாத ஒரு மாயப் போர்வையை ஒத்தது. அது சம்பந்தப்பட்டவரை தன் பரப்பால் எளிதாக மூடிக் கொள்கிறது. அது போர்த்திய யாரையும் மீளவும் எழுப்பிவிடவும் முடியாது. உள்ளே என்ன இருக்கிறதென்று பார்த்துவரவும் முடியாது.
...... என் சார்பாக அவரை நேரில் சென்று சந்தித்து, பல உதவிகளைச் செய்த பதிவுலக நண்பர்கள் அப்துல்லாஹ்வையும், ஷேக் தாவூத்தையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன்
தூறல் மழைக்காலம்
குளிர் காற்றினூடான வானம்
இளநீலம்
மெல்லிய நீர்த்துளிகள்
இசை சேர்த்து வந்து
மேனி முழுதும் தெளிக்கின்றன
நீண்ட காலங்களாக
சேகரித்து வைத்த அன்பை
அமானுஷ்ய ஈரத்தோடு
தளிர் விட்டிருக்கும் அகத்தி
பெண் நெற்றிப் பொட்டு வடிவ
பச்சை நீளிலை மரத்தில்
ஊதாப்பூக் காய்கள் கொத்தியுண்ணும்
ஏழெட்டுக் கிளிகள்
செந்நிறச் சொண்டுகளுடன்
மாதுளம்பூக்கள்
தனிமையை அணைத்தபடி
அடுத்த பாடலை
நான் ஆரம்பிக்கலாம்
அதன் பிண்ணனியில்
மழையும்
நதியின் ஈரலிப்பும்
குளிரின் வாசனையும்
இதே பசுமையும் என்றுமிருக்கும்
நீயும்
என்னுடன் இருந்திருக்கலாம்
- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை http://rishanshareef.blogspot.com
No comments:
Post a Comment