Saturday, January 30, 2010

அம்மா என்றழைத்தால்…

imgakaram
அம்மா என்று அன்போடு அழைத்தால் இப்போதெல்லாம் பெண்கள் கோப்படுகிறார்கள். ”எனக்கென்ன அம்புட்டு வயசா ஆயிடுச்சு?” என்று மூக்குநுனி மின்ன இதழ்கள் ஒட்டியொட்டிப்பிரிய நெற்றி நெறிய கேட்கிறார்கள். அம்மா என்பதற்குப் பொருள் ஒன்றே ஒன்றுதானா? எத்தனை ஆயிரம்? அவற்றுள் சிலவற்றை மட்டும் நான் இங்கே குறிப்பிடுகிறேன் பாருங்கள்
அம்மா – தங்கை
அம்மா – மகள்
அம்மா – பேத்தி
அம்மா – வேலைக்காரி
அம்மா – தாய்
அம்மா – எஜமானி
அம்மா – நண்பரின் தாய்
அம்மா – கருணையோடு பிச்சையிடுபவள்
அம்மா – காதலி (மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா)
அம்மா – நண்பன் (என்னம்மா கண்ணு சௌக்யமா?)
அம்மா – பாரதியின் செல்லம் (கண்ணம்மா)
அம்மா – அன்னை தெரசா (மத்த எல்லாரையும்விட இந்த அம்மாவைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
அம்மா – தமிழ் (தமிழன்னை)
அம்மா – தெய்வம்
அம்மா – மருத்துவர் (டாக்டரம்மா என்னைக் கொஞ்சம் திரும்பிப்பாரம்மா)
அம்மா – துன்பம் அகன்ற நிம்மதி (அம்மாடி இப்பதான் நிம்மதியா இருக்கு)
அம்மா – வலியின் வேதனையில் தன்னைமறந்து சொல்லும் சொல்
அம்மா – கலைஞரின் எதிர் இருக்கை :)
அம்மா – மணமான பெண்ணை அழைக்கும் மரியாதைச் சொல்
அம்மா – பெண்கள்
அம்மா – தாய்க்குலம்
இவ்வளவையும் விட்டுவிட்டு (இன்னும் இருக்கு) ஒரே ஒரு பொருளை மட்டும் எடுத்துக்கொள்வது என்ன ஞாயம்? தமிழன்னை வயதானவளா? என்றென்னும் இளமையானவளல்லவா? அன்னைதெரசா என்று அழைத்தது வயதின் காரணமாகவா? கொஞ்சம் யோசிங்கம்மா!
எல்லாம் சரிதான், ஆனால் எனக்குப் பிடித்த ஒன்று எதுவென்றால், எந்தப் பெண் தன்னை எப்படி அழைக்க விரும்புகிறாளோ அப்படியே அழைப்பதுதான்.
பெண்களைச் சந்தோசப்படுத்தாவிட்டால் எவருக்கும் சொர்க்கம் என்பது இங்கும் இல்லை அங்கும் இல்லை எங்கும் இல்லை!
தொகுப்பு: குடும்பம்  source : http://anbudanbuhari.blogspot.com

No comments: