Saturday, January 30, 2010

வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது!


சிறிது காலத்திற்கு முன்புவரை நமது உடலில் வலியுணர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் மூளையே என்று விஞ்ஞானிகள் எண்ணிக் கொண்டிருந்தனர்.. ஆனால் சமீபத்தில் தான் நுண்ணிய கருவிகளைக் கொண்டு மனித தோல்களை ஆராய்ந்ததில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் நரம்பு மண்டலங்கள் (Pain Receptors) தோல்களிலேயே இருக்கின்றன என்று நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தோல்களில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் இந்த நரம்பு மண்டலங்கள் தீக்காயங்களினால் கருகிவிட்டால் (Third degree burn) நமக்கு எந்த ஒரு வலியுணர்ச்சியும் (வேதனை-Pain) ஏற்படுவதில்லை.
இத்தனை அறிவியல் நுணுக்கம் வாய்ந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சத்தியத்திருமறை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பது நம்மை மட்டுமல்லாது இன்றைய நவீன அறிவியல் ஆராய்ச்சியாளர்களையும் வியப்புக்குள்ளாக்குகிறது.
அல்லாஹ் கூறுகிறான்: -
“யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன்: 4:56)
டாக்டர் டிகாடட் தேஜாஸன் (Dr Tigatat Tejasen) என்பவர் தாய்லாந்தில் உள்ள ஸியாங்மா பல்கலைகழக (Shangma University. Thailand) உடற்கூறு துறையின் பேராசிரியர் ஆவார். அவர் ஒருமுறை சவுதி அரேபியாவிற்கு வந்தபோது அவரிடம் மேற்கூறப்பட்ட திருமறை வசனம் கொடுக்கப்பட்டது. இவர் ஆரம்பத்தில் இத்திருமறை வசனத்தை மறுத்தார். ஏனென்றால் இந்த உண்மை சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அருளப்பட்ட திருமறையில் அவ்வசனம் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்று வாதிட்டார்.தோல்களில் 
இருக்கும் வலியுணர்ச்சியின் நரம்புகள்!
அவரிடம் மேலும் சில அறிவியல் நுணுக்கம் வாய்ந்த வசனங்களை சுட்டிக் காட்டியதும் அவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்யத் துவங்கினார். தன்னுடைய நீண்டகால ஆய்விற்குப்பின் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த எட்டாவது மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறினார்:-
‘1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் கூறப்பட்டது அனைத்தும் உண்மையாகும். அவற்றை தற்கால அறிவியலின் மூலம் நிரூபிக்கக் கூட முடியும். படைப்பாளனான இறைவன் அருளிய இச்செய்தியை தெரிவித்தவர் எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள். எனவே நிச்சயமாக அவர் இறைவனின் தூதராவார்கள். ஆகவே, நான் ‘லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்’ என்பதைக்கூற இதுவே சரியான நேரம் என்பதை உணர்கின்றேன்’ என்று கூறி இஸ்லாத்தை தழுவினார்.
பார்க்கவும் வீடியோ.
                அல்ஹம்துலில்லாஹ்!

நன்றி :http://suvanathendral.com/portal/?p=231

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails