Friday, January 29, 2010

காற்றின் முகவரி

Writings of Wind

பாலைவன
அஞ்சல் அட்டையில்
காற்றின் முகவரி
எத்துணை அழகு?

இந்த அடுக்குத் தொடர் .. ..
அண்ணாவின்
அடுக்கு மொழியைக் காட்டிலும்
அழகோ அழகு !

அகன்ற மணற்பரப்பை
ஆட்டோகிராப்
ஆக்கியது யார்?

உலகிலேயே
அழகான கையெழுத்து
காற்றுக்குத்தான் போலும்.

தூரிகையே இல்லாமல்
ஓவியம் வரையும் சூத்திரம்
காற்றுக்கு மாத்திரம்
சாத்தியம்.

நெளிவு சுளிவு
தெரிந்த காற்று
பிழைத்துக் கொள்ளும் !
அரசியல்வாதியின்
பிள்ளையைப்போல !

வளைவுகள்
ஆபத்தானவை என்று
யார் சொன்னது?

இதோ
பாருங்கள்
கவர்ச்சியான
வளைவுகளை !

காற்றுக்கு சூட்சமம்
கற்றுக் கொடுத்தது
யாராக இருக்கும்?

ஓவியர் ஜெயராஜ்தானோ?

நன்றி: http://nagoori.wordpress.com/

No comments: