Tuesday, January 12, 2010

நோய் உங்களுக்கு எதிரி அல்ல

by ஹைஷ்126

உங்களுக்கு தலைவலி என்றால், அது உங்கள் உடம்பிலுள்ள கோளாறுகளில் ஒன்றினை சுட்டிக்காட்டி உணர்த்தும் செய்யலே ஆகும். (மூளையில் உணர்வு நரம்புகள் கிடையாது). அது மலச்சிக்கலாக இருக்கலாம், அல்லது கண் பார்வையில் கோளாறுகள் இருக்கலாம், இது போன்ற உடல் நலக் குறைபாடுகள் அல்லது வேறு சில காரணங்களும் இருக்கலாம்.

இப்படி இதற்கு பின்னே ஏதோ ஒரு கோளாறு இருப்பதை சுட்டிக்காட்டும். இத்தலைவலி உங்களிடம் வேலை செய்யும் உதவியாளர் போல இருந்து குறைகளை உடனுக்குடன், முன் கூட்டியே சுட்டிக் காட்டுகின்றது. அடிக்கடி விக்கல் வந்தால் உடலில் உப்புச்சத்து அதிகமாக இருக்கிறது எனலாம். அதனால் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ளலாம். வாயில் துர்நாற்றம் வீசினால் வயிற்றுக்குள் குடற்புண் (அல்சர்) இருக்கிறது எனலாம்.

நாக்கில் வெண்ணைப் போன்ற படிமம் படிந்தால், தீராத மலச்சிக்கல் உள்ளவர்களாக இருக்கலாம். இவ்வாறு முன் கூட்டியே சில அறிகுறி உதவியாளர்கள் போல் செயல்பட்டு “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்ற முதுமொழிக்கேற்ப பின்னே வரபோகும் பெரிய நோய்த் தொந்தரவுகளை சுட்டுக் காட்டுகின்றது.  கட்டிடம் இடிந்து விழ சில மணித்துளிகளுக்கு முன்பு சிறிய துகள்கள் விழும். அப்போது எச்சரிக்கையாக இருப்பவர்கள் உடனுக்குடனே அந்த இடத்தை விட்டு விலகி செல்ல வேண்டும். அப்போது விபத்தில் இருந்து தப்பலாம். அது போலவே இச்சிறிய அறிகுறிகள் உணர்த்தும் போதே எச்சரிகையாகி விட பின்பு வரும் பெரிய நோய்களை தவிர்கலாம். அது போன்ற நேரத்திலேயே அதற்கு தக்க வைத்திய முறைகளை மேற்கொண்டு குணமாக்கிக் கொள்ள வேண்டும்.
உடல் நலம்
http://haish126med.blogspot.com

No comments: