முனைவர் கல்பனாசேக்கிழார்
நாட்டிலும் வீட்டிலும் நல்லவை ஆவதும் பெண்களால் கெட்டவை அழிவதும் பெண்களால்.இதனைத் தான் ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்று கூறினார்கள்.இதனைச் சிலர் திரித்துக் கூறுவதும் உண்டு.
சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் தலைவன் ஒரு பசுவினை வைத்துக் கொண்டு அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கின்றான் .அவனுக்குத் திருமணம் ஆகின்றது.மனைவியாக வந்தவள் அவனுடைய வாழ்வினைச் செழிப்புடையதாக ஆக்குகின்றாள். அவன் இல்லமே தலைவி விழாக்கோலம் பூண்டது போல செழிப்புற்றுத் திகழ்கின்றது.அவன் கணவனின் வருவாய்க்குத் தக்க குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுவதோடு மட்டும் அல்லாமல்,அவனுக்கு உதவியாகவும் இருந்து செல்வ நிலையிலும் மேன்மையுறவும் உறுதுணையாக விளங்குகின்றாள்.
ஓரான் வல்சில் சிரீல் வாழ்க்கை
பெருநலக் குறுமகள் வந்தென,
இனிவிழவு ஆயிற்று என்னுமிவ் வூரே(குறுந்தொகை,295)
ஏர் பிடித்தவன் என்ன் செய்வான் பானை பிடித்தவள் பாக்கியசாலி என்னும் பழமொழியும் இங்கு நினையத் தகும்.
நன்றி :http://www.sekalpana.com/

No comments:
Post a Comment