Sunday, January 31, 2010
மல்லிகையே
வண்ணமல்லியே வசந்தமல்லியே
வாசம்வீசிடும் வசியக்காரியே
வெள்ளைமேனியில் பச்சை பாவாடை
அணிந்திருக்கும் நீ அழகுதேவதை
உன்பட்டுதேகத்தை
தொட்டுத்தொடுக்கையில்
எந்தன் விரல்களும்
வீணைமீட்டுதே
தொடுத்து முடித்ததும்
தலையில் வைக்கயில்
வாசம் வீசியே
சரங்களும் சரசம்பாடுதே
கொடியில் பூத்து
நீ
கொள்ளை கொள்கிறாய்
கூந்தல் ஏறியே
பலரின்
உறக்கம் கொல்கிறாய்
மணத்தைப்பரப்பியே
மயக்கவைப்பியே
மணப் பந்தலையும்
அலங்கரிப்பியே
சின்னமல்லியே உனக்கொரு
சேதி தெரியுமா
எந்தன் மன்னவன்
உன்னில் மயங்கவில்லையே
நானிருக்கையில்
அவனுக்கு
நீ எதற்கடி
என்கூந்தலுக்குள்
நீ ஒளிந்துகொள்ளடி....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
Thanks to http://niroodai.blogspot.com
U9WDWV47RSV3
காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (6)
[ கராச்சியில் ஆல் இந்தியா முஸ்லீம் லீக் மாநாட்டில் டிஸம்பர் 26, 1943 அன்று சக்தி வாய்ந்த வார்த்தைகளைப் பேசியபோது, இஸ்லாம் பற்றிய தன் புரிதலை பிரதிபலித்தார்.
''எது எல்லா முஸ்லீம்களையும் ஒரே மனிதனாக இணைக்கிறது? எது இஸ்லாமிய சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது? திருக்குர்ஆன் - இது மாபெரும் புத்தகம். இதுவே இந்திய முஸ்லீம்களின் அடித்தளம். நாம் போகும் வழியெங்கும் இதுவே. ஒரே இறைவன், ஒரே புத்தகம், ஒரே இறைதூதர், ஒரே தேசம்.'' தனது ''ஈத்'' திருநாள் வாழ்த்துச் செய்தியில் செப்டம்பர் 1945-ல், ''இஸ்லாமில் வெறும் ஆன்மீக விஷயங்களும், சடங்குகளும், ஆன்மீக கோட்பாடுகளும் இல்லை. இது எல்லா முஸ்லீம் சமூகத்தையும் எல்லா வகைகளிலும் நெறிப்படுத்தும் முழுமையான வழிமுறைகள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும், சமூகம் முழுமைக்கும், தனிமனிதருக்கும் முழுமையான நெறிமுறைகளை வகுத்துத்தந்திருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.] 1913-ல் ஆல் இந்தியா முஸ்லீம் லீக் அமைப்பு தன் குறிக்கோளைத் திருத்தி அதில் இந்தியா சுயாட்சி பெறுவதை நோக்கமாக இணைத்ததும் அதில் உறுப்பினராக லண்டனில் இணைந்தார். ஆனால் அவர் அதே வேளையில், அவர் 1903-ல் தான் இணைந்த காங்கிரஸில் தொடர்ந்து உறுப்பினராக இருப்பேன் என்றும் தெளிவாக்கினார். பம்பாயின் முஸ்லீம் மக்கள் அவரது சேவையில் மகிழ்ந்ததால், அந்தத் தொகுதிக்கு மீண்டும் பிரதிநிதியாக 1916-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசுக்குள் அவர் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக உழைத்ததாலும், புகழ்பெற்ற லக்னோ ஒப்பந்தத்தில் இந்து முஸ்லிம் மக்கள் சேர்ந்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு உழைக்க ஏற்பாடு செய்ததாலும் அவர் இந்து முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என அழைக்கப்பட்டார். 1918-ல் 18 வயது நிறைந்த ஃபார்ஸிப் பெண்ணான ருட்டி பெட்டி எனும் பெண்மணி இஸ்லாமை தழுவிய பின்னர் திருமணம் செய்து கொள்ள இசைந்தார். இஸ்னா அஹாரியின் பேஷ் இமாமின் முன்னிலையில் மரியம் என்ற இஸ்லாமியப் பெயரை ருட்டிக்கு சூட்டியதன் பிறகு, அடுத்த நாள் ஜின்னா அவரை பல முஸ்லீம் படிப்பாளிகள் முன்னிலையில் முஸ்லீம் நண்பர்கள் முன்னிலையில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்தார். அந்த சிறப்பான குழுவில் மஹ்மூதாபாத் அரசரும் இருந்தார்.
ஆனால் அவர்களின் இல்லற வாழ்வு நீடிக்கவில்லை. 1929-ல் ருட்டி காலமானார். அவரை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்தார். அவர் பம்பாயிலும் பல இடங்களிலும் இருக்கும் இஸ்லாமிய சேவை நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தார். ஈத் திருநாளன்று அவரது தொகுதி மக்களும் அவரது நண்பர்களும் அவர் வீட்டுக்கு வந்து அவரை கவுரவித்தார்கள். லண்டனில் இருந்தபோதும் (1931-35) அவர் கிழக்கு லண்டனில் இருக்கும் சிறிய மஸ்ஜிதில் ஈத் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டார்.
1918 முதல் 1922 வரை இந்தியாவில் நடந்த கிலாஃபத் இயக்கத்தில், ஜின்னா ஓட்டோமான் (Otoman) பேரரசின் நோக்கத்தை ஆதரித்து, கான்ஸ்டான்டினோபிள் மையமாக இருந்த கிலாஃபத்தை ஆதரித்தார். இங்கிலிஷ் டில்லி, பாம்பே குரோனிகிள் ஆகிய பத்திரிக்கைகளை நடத்திய நிறுவனத்தின் சொந்தக்காரர் என்ற முறையில் அந்த பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த பி.ஜி.ஹாரிமனை கிலாபத் இயக்கத்துக்கும், அதன் தலைவர்களாக இருந்த மெளலானா முஹம்மது அலி, அவரது அண்ணன் மெளலானா ஷவுகத் அலி மற்றும் காந்திஜி ஆகியோருக்கு தேவையான முக்கியத்துவத்தை கொடுக்கத் தூண்டினார். 1920களில், லண்டனில் பாராளுமன்ற கமிட்டியின் முன்னர், இந்தியாவின் முஸ்லீம்கள் ஒட்டோமான் பேரரசு மற்றும் கிலாஃபத் ஆகியவற்றைக் கலைப்பதற்கு எதிரானவர்கள் என்ற பார்வையை பிரபலப்படுத்தினார்.
1935க்குப் பின்னர், இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்த பிறகு, ஆல் இந்திய முஸ்லீம் லீக் தலைவராக ஆனார். அதன் பின்னர் பல முஸ்லீம் கூட்டங்களில் கலந்து கொண்டு, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும், இந்தியாவிலும் வெளியிலும் முஸ்லீம்களின் நோக்கத்தைப் பற்றியும் பேசினார். அவரது பேச்சுக்களில் எல்லாம், இஸ்லாமின் இறைதூதரரின் பெருங்குணங்களைப் பற்றியும், இஸ்லாமின் உலக மயமான போதனைகளைப் பற்றியும் இருந்தன. அல்லாமா இக்பால் அவர்களின் இஸ்லாமிய மறுமலர்ச்சியை வேண்டி நின்ற கட்டுரைகளாலும், அவரது உணர்ச்சி மயமான கவிதைகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜின்னா, இஸ்லாம் பற்றி நிறையப் புத்தகங்கள் படித்தார். மேலும் முஹம்மது அலி ஜின்னா ஷாபிர் அஹ்மத் உஸ்மானி அவர்களின் ஆலோசனையை விரும்பிக் கேட்டார். லாகூர் ஷாஹீத்கஞ்ச் மஸ்ஜித் வழக்கிலும், கான்பூர் மஸ்ஜித் வழக்கிலும் முஸ்லீம் கண்ணோட்டத்தை எடுத்துறைத்தார்.
1926-ல் ஜின்னா மீண்டும் இந்தியாவின் மத்திய சட்டசபைக்கு பம்பாய் முஸ்லீம் தொகுதி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது முஸ்லீம்கள் அவர் மீது கொண்டிருந்த மாபெரும் நம்பிக்கையை வெளிக்காட்டியது. முஹம்மது அலி ஜின்னா தன் மகளான 'டினா'வின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தார். ஆனால் அவர் ஃபார்ஸியாகப் பிறந்த நெவில்லி வாடியாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது, வாடியா முஸ்லீமாக மாறினால் மட்டுமே தான் அனுமதி தரப்போவதாகச் சொன்னார். வாடியா மறுத்துவிட்டபோதும், டினா வாடியாவை திருமணம் செய்தபோது, ஜின்னா தன் மகள் மீது கொண்டிருந்த மகள்-தந்தை உறவை அறுத்துவிட்டார். அவரது வாழ்க்கையில் அவர் மிகவும் கலங்கிப்போய் நின்ற சமயம் அதுதான் என்று கூட சொல்லலாம். கராச்சியில் ஆல் இந்தியா முஸ்லீம் லீக் மாநாட்டில் டிஸம்பர் 26, 1943 அன்று இந்த சக்தி வாய்ந்த வார்த்தைகளைப் பேசியபோது, இஸ்லாம் பற்றிய தன் புரிதலை பிரதிபலித்தார்.
''எது எல்லா முஸ்லீம்களையும் ஒரே மனிதனாக இணைக்கிறது? எது இஸ்லாமிய சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது?
திருக்குர்ஆன் - இது மாபெரும் புத்தகம்
இதுவே இந்திய முஸ்லீம்களின் அடித்தளம்.
நாம் போகும் வழியெங்கும் இதுவே.
ஒரே இறைவன், ஒரே புத்தகம், ஒரே இறைதூதர், ஒரே தேசம்.''
தனது ''ஈத்'' திருநாள் வாழ்த்துச் செய்தியில் செப்டம்பர் 1945-ல், ''இஸ்லாமில் வெறும் ஆன்மீக விஷயங்களும், சடங்குகளும், ஆன்மீக கோட்பாடுகளும் இல்லை. இது எல்லா முஸ்லீம் சமூகத்தையும் எல்லா வகைகளிலும் நெறிப்படுத்தும் முழுமையான வழிமுறைகள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும், சமூகம் முழுமைக்கும், தனிமனிதருக்கும் முழுமையான நெறிமுறைகளை வகுத்துத்தந்திருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.
டில்லியில் ஏப்ரல் 24, 1943 ஆல் இந்திய முஸ்லீம் லீக் மாநாட்டில் முஹம்மது அலி ஜின்னா, ''மனிதனின் சமத்துவம் இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது. சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என்பன இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்று... இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உலகம் சந்தித்த மக்களிலேயே மிகச்சிறந்தவர்... 13 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவர் ஜனநாயகத்தின் அடித்தளத்தை நிறுவினார்'' என்று முழங்கினார்.
ஜின்னா மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்களிடம் சகிப்புத்தன்மையை காட்டினார். ஆகஸ்ட் 11, 1947இல் அவர் பாகிஸ்தான் சட்ட அமைப்பு அஸெம்பிளியில் பேசிய பேச்சு இதற்கு நல்ல உதாரணம். முஹம்மது அலி ஜின்னா மத ஆட்சிக்கும், மதப்பிரிவு வாதத்துக்கும் (theocracy and sectarianism) எதிரானவராக இருந்தார்.
1948 பிப்ரவரியில் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில், கவர்னர் ஜெனரல் ஜின்னா அவர்கள், பாகிஸ்தானின் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயக அமைப்பாக, இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகள் பொதிந்ததாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகச் சொன்னார். இஸ்லாம் முஸ்லீம்களுக்கு மனிதனின் சமத்துவத்தையும், நீதியையும், எல்லோருக்கும் சம வாய்ப்பையும் கொடுக்கச் சொல்லி போதித்திருக்கிறது என்று குறிப்பிட்டுக்காட்டினார். 1947, ஆகஸ்ட் 18ஆம் தேதி, அவர் பாகிஸ்தானிய முஸ்லீம்களுக்கும், இன்னும் உலக முஸ்லீம்களுக்கும் சொன்ன உரையில், ஈத் திருநாளன்று, புதிய விடியலுக்கான ஜின்னாவின் நம்பிக்கையை, ' வளமையான புதிய யுகம் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும், அதன் குறிக்கோள்களுக்குமான புதிய குறியீடாக இருக்கும் ' என்று சொன்னார். அன்றைய கொண்டாட்டத்தில், கராச்சியில் ஈத்கா மைதானத்தில் வெளிர்நிற ஷெர்வானி அணிந்து ஜின்னா தொப்பி அணிந்து ஈத் பிரார்த்தனை செய்து, எல்லா முஸ்லீம்களோடும் வாழ்த்துக்களைப் பறிமாறிக்கொண்டு, பாகிஸ்தான் என்ற பரிசைக் கொடுத்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.....
Saturday, January 30, 2010
நேரடி உணர்வுகளின் கவிக்கோலம் - செப்டம்பர் 11, 2001 இரட்டைக் கோபுரம்
அன்புடன் புகாரி
நேரடி உணர்வுகளின் கவிக்கோலம் - செப்டம்பர் 11, 2001 இரட்டைக் கோபுரம்
இஸ்லாமியச் சட்டம் (4)
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்
வழக்கறிஞர்.
அன்பளிப்பு’ ஓர் அலசல் – 1
ஆங்கிலத்தில் றூஷ்க்ஷூமி என்று சொல்லப்படுவதற்கும், முஸ்லிம் சட்டத்தில் ஹிபா என்று சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. ஒருவர் தன் சொத்துக்களை மற்றவருக்குப் பிரதி உபகாரம் எதிர்ப்பார்க்காமல் வழங்கி, அந்தச் சொத்துக்களை அவருக்கு உரிமையாக்குவதே அன்பளிப்பு எனப்படும். முஸ்லிம் சட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற அன்பளிப்பிற்கு மூன்று முக்கிய நிபந்தனைகள் உண்டு
1. அன்பளிப்பு அளிப்பவர், அன்பளிப்புக் கொடுப்பதாக உறுதிப்படுத்த வேண்டும்.
2. அந்த அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டதாக, அன்பளிப்பைப் பெற்றவர் தெரிவிக்க வேண்டும்.
3. அன்பளிப்பு வழக்கியவரிடமிருந்து அன்பளிப்பு பெற்றவருக்குப் பொருள் கை மாற வேண்டும்.
இவற்றில் முதலாவது நிபந்தனை அன்பளிப்பு வழங்கியவரின் நோக்கத்தையும், இரண்டாவது நிபந்தனை அன்பளிப்பு பெற்றுக் கொண்டவரின் இசைவையும் தெரிவிக்கின்றன. மூன்றாவது நிபந்தனை முஸ்லிம் சட்டத்தின் தனிச்சிறப்பாக விளங்குகிறது. அன்பளிப்பு வழங்க வேண்டும் என்ற உண்மையான எண்ணமின்றி, பொய்யான வெகுமதியாகவோ, பினாமி மாற்றமாகவோ இருப்பின் அந்த அன்பளிப்பு செல்லாது.
முஸ்லிம் சட்டப்படி அன்பளிப்பு வழங்குவது எழுத்து மூலம் இருக்க வேண்டிய அவசியமில்லை; வாய்மொழியாகவும் இருக்கலாம். வீ.P.புஉமி 1292 2வது சட்டத்திலிருந்து முஸ்லிம் சட்டத்திற்கு விதி விலக்கு உண்டு.
எடுத்துக்காட்டாக “பு” என்பவர் ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்னால் தன்னுடைய நிலங்களை “ய” என்பவருக்கு வெகுமதியாகக் கொடுத்துவிட்டதாக அறிவித்து, அந்த நிலத்தை அனுபவிக்கும் உரிமையையும் “ய” என்பாரிடம் கொடுத்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த அன்பளிப்புக்காகப் பத்திரம் எழுதுவதோ, பதிவு செய்வதோ அவசியம் கிடையாது. எனினும் சாட்சியைப் பதிவு செய்து கொள்வது நன்று. மேலும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படின், பதிவு(ரிஜிஸ்ட்டிரேன்) செய்து கொள்வதும் நன்று. ஆனால், அனுபவிக்கின்ற உரிமை கைமாறாத வரைப்பதிவு செய்தாலும் கூட அன்பளிப்பு செல்லாது.
செல்வதும் செல்லாததும் :
புத்தி சுவாதீனமுள்ள மைனர் அல்லாத எந்த முஸ்லிமும் தன் உடைமைகளை அன்பளிப்பாகக் கொடுக்கலாம். கடன்காரர்களை ஏமாற்றுவதற்காகக் கொடுக்கப்படும் அன்பளிப்புகள், கடன் கொடுத்தவர்களின் அனுமதியின் பேரிலேயே செல்லுபடியாகும். பிறக்காத குழந்தைக்கு அன்பளிப்பு கொடுப்பது செல்லாது. இஸ்லாமியச் சட்டப்படி, ஒருவர் தன் வாரிசுகளில் சிலருக்கு, மற்ற வாரிசுகளின் அனுமதியின்றி உயில் மூலம் சொத்துக்களை வழங்க முடியாது. ஆனால் ஒருவர் தன் வாரிசுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.
முஸ்லிம் தன் வாரிசுகளுக்கு எந்தவிதச் சொத்துக்களையும் கொடுக்காமல் உறவினர் அல்லாத வேறு ஒருவருக்கு தன் சொத்துக்களை முழுவதையும் கூட அன்பளிப்பாகக் கொடுக்க முடியும். ஆனால் இது போன்ற அன்பளிப்புக்களை மரணத் தருவாயில் வழங்க முடியாது. வாடகைக்கு விடப்பட்டிருக்கும் சொத்துக்கள், ஜப்தியில் உள்ள சொத்துக்களை இன்சூரன்ஸ் பாலிசி, ஒரு சொத்தின் குறிப்பிட்ட பகுதியிலிருந்து வருகின்ற வருமானம் ஆகியவற்றை அன்பளிப்புகளாக வழங்கலாம்.
ஹிபா பற்றி ஹிதாயா
ஹிதாயா என்னும் சட்டப்புத்தகத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது. கொடுக்கப் படுகின்ற சொத்திலிருந்து பெறுபவனுக்கு வருமானமோ, இலாபமோ கிடைக்க வேண்டும் என்பதே ஹிபா என்னும் அன்பளிப்பின் நோக்கமாகும். அன்பளிப்பு பெறுபவரிடமிருந்து மாற்றாக எதையும் பெற்றுக் கொள்ளாமல், ஒரு பொருளை அவருக்கு உரிமையாக்கித் தருவதுதான் அன்பளிப்பு.
அன்பளிப்பு ஓர் அலசல் – 2
அசையாப் பொருள் அன்பளிப்பு
கணவன் Š மனைவி இருவரில் ஒருவர் மற்றவருக்கு வழங்கும் அசையாப்பொருள் அன்பளிப்பு பற்றி செக்ன் 152(3) விவரிக்கிறது. கணவன் தன் மனைவிக்கு ஒரு வீட்டை அன்பளிப்பாக கொடுத்து விட்டான். ஆனால் அதே வீட்டில் மனைவியுடன் அவனும் குடியிருக்கிறான். இந்த அன்பளிப்பு செல்லும். இது போன்ற வழக்குகளில் வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தால், கணவன் தனக்காக வாடகை வாங்காமல், மனைவிக்காக வாடகை வாங்குகிறானா என்பதைத் தான் கவனிக்க வேண்டும்.
ஆமீனா பீவி Š Vவி கதீஜா பீவி என்ற வழக்கில் கணவன் Š மனைவி இருவரும் தங்கியிருந்த ஒரு வீட்டை மனைவிக்காக கணவன் அன்பளிப்பு கொடுக்கிறார். அந்த வீட்டோடு சேர்ந்த பக்கத்து வீடு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. மனைவிக்காகவே கணவன் வாடகை வசூலித்த காரணத்தினால் இந்த அன்பளிப்பு செல்லும் எனத் தீர்ப்பானது.
மாமி Vவி. கலந்தரம்மாள் என்னும் வழக்கில் கணவன் ஒரு வீட்டை மனைவிக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடுகிறார். நகரசபைப் பதிவுகளில் பெயர்மாற்றம் செய்யப்பட்டு மனைவியே அந்த சொத்தின் உரிமையாளர் என்று குறிக்கவும் பட்டுவிட்டது. பிரிவு கவுன்சில் இந்த வழக்கில் தீர்ப்புக் கூறும் போது “கணவன் மைதீனால் நகரசபைப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் தன் மனைவிக்கு வீட்டை அன்பளிப்புக் கொடுத்தவுடன் பெயர் மாற்றம் செய்தது நீரூபிக்கப்பட்டால், கணவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் மனைவிக்காகத் தான் செய்யப்படுகின்றன என்றே நாம் கருதிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது”.
முஹம்மது சாதிக் Vவி பக்ரஜமான் என்ற வழக்கில் (1932 Š லக்னோ) கணவன் தன் மனைவிக்கு அன்பளிப்பு கொடுத்த சொத்தின் அனுபவிக்கும் உரிமையை அளித்துவிட்டதாக அன்பளிப்புப் பத்திரத்தில் குறிப்பிட்டு, அந்தப் பத்திரத்தை அவளிடம் ஒப்படைத்திருந்தான். அன்பளிப்பு செல்லுபடியாகும் என்றும், பெயர் மாற்றம் தேவையில்லை என்றும் தீர்ப்பாகியுள்ளது.
மைனர்களின் அன்பளிப்பு :
மைனர்களுக்கு தகப்பனாரோ, காப்பாளரோ கொடுக்கும் அன்பளிப்புகளில் அனுபவிக்கும் உரிமையைக் கூட ஒப்படைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அன்பளிப்புக் கொடுத்தவரின் உண்மையான எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டால் போதுமானது.
மைனர் குழந்தையோடு மற்றொரு மேஜருக்கும் சேர்த்து அன்பளிப்பு கொடுக்கப்படுமேயானால் அனுபவிக்கும் உரிமையை ஒப்படைத்தாக வேண்டும். உதாரணமாக மைனர் மகளுக்கும், அவளுடைய மேஜர் கணவனுக்கும் அன்பளிப்புக் கொடுக்கப்படுமேயானால் அனுபவிக்கும் உரிமையை அளித்தாக வேண்டும் என்று சுக்ரபாய் Š Vவி முகம்மது அலி (1934Šபம்பாய்) வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
1960Šல் கேரளாவில் ஒரு வழக்கு “வலியபீடிக்கன்படி கதீஜா உம்மா Š Vவி – பதக்களம்; 1960 கேரளா எல்.ஆர்” வழக்கு என்பது அதன் பெயர். ஒரு ஹனபி முஸ்லிம் மைனராக இருந்த தன் மனைவிக்கு பதிவு செய்த பத்திரத்தின் மூலம் அசையா சொத்துக்கள் உள்ளிட்ட தன் சொத்துக்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவருடைய மனைவிக்காக மனைவியின் தாயார் அந்த அன்பளிப்பை பெற்றுக் கொண்டார். அந்த வீட்டில்தான் கணவனும் மனைவியும் வசித்து வந்தனர். ஆனால் அந்த நேரத்தில் பெண்ணின் தந்தையோ, தந்தையின் தந்தையோ உயிருடன் இல்லை. மேலும் அப்பெண்ணின் தாயிடம் அன்பளிப்புப் பத்திரத்தைக் கொடுத்து அனுபவ உரிமையை சிவில் கோர்ட் நியமிக்கும் ஒரு காப்பாளரிடம் ஒப்படைக்கவும் இல்லை. அப்படியிருந்தும் சட்டப்படி இந்த அன்பளிப்பு செல்லும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அன்பளிப்புப் பத்திரத்தை கணவன் தன் மனைவியிடமே கொடுத்திருந்தால் முஸ்லிம் சட்டப்படி அன்பளிப்பு செல்லுபடியாகியிருக்கும்.
தந்தையின் தந்தையால் (பாட்டனால்) பேரன்களுக்கு அவர்கள் மைனர்களாக இருக்கும் போது அசையாப் பொருள் சொத்துக்கள் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அந்த மைனர்களுக்காக அப்போது உயிரோடு இருந்த அவர்களின் தகப்பனாரிடம் அனுபவிக்கும் உரிமையை அளிக்காமல், அவர்களின் தாயிடம் அது வழங்கப்பட்டது. இந்த அன்பளிப்பு முற்றுப் பெறவில்லை என 1960 Š பம்பாய் Š 210 என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. (டி.பி.ஆக்ட் 1882, செக்ன் 122) தாய்க்கும், மைனர் குழந்தைக்கும் சேர்த்து அன்பளிப்புக் கொடுக்கப்பட்ட சமயத்தில் அதன் பொசினை தாய் மட்டும் பெற்றுக் கொண்டாலும், மைனர் குழந்தைக்கும் சேர்த்து எடுத்துக் கொண்டதாகவே கருத வேண்டும் என்று 1962 ஜே.கே.4(7) என்னும் வழக்கில் தீர்ப்பாயிற்று.
மைனர் என்பதற்காகவே அன்பளிப்பை ஏற்றுக் கொள்வதை முஸ்லிம் சட்டம் தடுக்கவில்லை. (1959 எம்.பி.சி.212) மைனரின் காப்பாளராகச் சட்டப்படி உள்ள தந்தையல்லாத வேறு ஒருவர் டிரஸ்டியாக இருந்து மைனருக்காக அன்பளிப்பைப் பெற்றுக் கொள்வது சட்டப்படி செல்லும். (1963 Š சென்னை, 186).
இஸ்லாமியச் சட்டம் (3)
வழக்கறிஞர்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே விதமான உரிமை இயல் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று குதர்க்க வாதம் பேசுவார், -ரீ அத் சட்டத்தின் காரண காரியங்களையும், பலன்களையும் சீர்தூக்கிப் பார்த்து சிந்திப்பார்களேயானால், இந்தக் காட்டுக் கூச்சலை விட்டுவிடுவார்கள். அத்தோடு குழப்பங்கள் நீங்கி நாடு நலமுறும் ; சமுதாயம் செழுமையுறும். இறைச்சட்டங்களை மாற்றுவது முஸ்லிம்களுக்கு மட்டும் இழப்பு அல்ல; உலக மக்களுக்கே அது பேரழிவை ஏற்படுத்திவிடும்,
ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள், பார்ஸிகள் எனப் பல்வேறு சமயக் கருத்துக்களை உடையவர்கள் அவரவர்களுக்கேற்ற வேதவழிப்பாட்டில் ஈடுபடுவதற்கு உரிமைகள் வேண்டுவது போல, சமய சட்டங்களையும் பின்பற்ற விரும்புகின்றனர். திருமணச்சடங்குகள், வாரிசுரிமைகள், சம்பிரதாயங்கள், கலாச்சாரங்கள் ஆகியன வெவ்வேறானவைகளாகவே இருக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் ஒருமைப்பாடு, ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து, சகிப்புத் தன்மையோடும் தோழமை உணர்வோடும் வாழ்வதுதான் மனித நேயம்.
இஸ்லாமியச் சட்டம் (2)
முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம்
ஒரு முஸ்லிம் திருமணம் செய்து கொண்டால் மனைவிக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் மற்றும் இன்றியமையா வசதிகளை, தன் சக்திக்கேற்ப செய்து கொடுப்பது கடமையாகும். இதே போல மனைவியும் கணவனின் தேவைகளை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்; கணவனின் அழைப்புக்கு செவிசாய்க்க வேண்டும்.
கணவன், மனைவி இருவரும் தத்தமது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி, ஒருவர் மற்றவரது உரிமைகளை மதித்து நடப்பவர்களானால் மணமுறிவுக்கு அவசியமே ஏற்படாது. இதில் யார் தவறு செய்தாலும் பிரச்சினை தான். பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும். இல்லையேல், அது பெரியதாகி விவாகரத்து வரை கொண்டு போய்விடும்.'மனைவியை அன்போடு நடத்த முடியாமல் பிரச்சினை முற்றினால், நல்ல முறையில் அவளைப் பிரித்து விடு' என்பது இஸ்லாத்தின் கட்டளை.
தகுந்த காரணங்களில்லாமல் திருமண இழப்பு ஏற்படக் கூடாது. இதனால் தான் 'அனுமதிக்கப்பெற்ற செயல்களிலேயே அல்லாஹ்வுக்கு மிகவும் கோபமாக செயல் திருமணம் முறிவு தான்' என அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (அறிவிப்பவர்: இப்ன உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ , ( நூல் : அபூதாவூது)
சிறிய பிரச்சினைகளைத் தமக்குள் தம்பதிகள் தீர்த்துக் கொள்ள வேண்டும். முடியாத போது பெற்றோர், அல்லது உறவினர் மூலமாக சமரசம் செய்து கொள்ள வேண்டும். சமரசத்திற்கு இடமின்றி, இனிமேல் அவன் அவளோடு வாழவே முடியாது என்ற நிலையில் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்யலாம். இதை விடுத்து
அவளோடு இணக்கமாக வாழாமலும், பிரிந்து போக அனுமதிக்காமலும் துன்புறுத்தலாகாது. அவ்வாறு துன்புறுத்தினால் மனைவி திருமண இழப்புக் கோரலாம்.
இதற்காகத்தான் 1939 மார்ச் 17-ல் 'முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம்' நடைமுறைக்கு வந்தது. முஸ்லிம் ஒருவன் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விவாகரத்துச் செய்ய மறுத்து, பிணக்கின் காரணமாக மனைவியைத் துன்புறுத்திக் கொண்டிருந்தால், திருமண இழப்புக் கோர மனைவிக்கும் அனுமதி தர வேண்டும் என்ற நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றைக்காட்டி, திருமணமான ஒரு முஸ்லிம் பெண் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
1. நான்கு ஆண்டுகளுக்கு மேலாக கணவன் போன இடம் தெரியவில்லை; கடிதமும் இல்லை; தகவலும் இல்லை; இந்நிலையில் 6 மாத காலக்கெடு கொடுத்து, திருமணம் முறிந்து விட்டதாகத் தீர்ப்பளிக்கப்படும். இதற்கிடையில் கணவன் திரும்பி வந்து மனைவியோடு வாழ விருப்பம் தெரிவித்தால் முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்பு ரத்தாகி விடும்.
2. ஒருவன் தன் மனைவிக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்க்கைப்படி ஜீவனாம்சம் கொடுக்கத் தவறினால், மனைவி விவாகரத்துக் கோரலாம்.
3. கணவன் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்தால்.
4. தக்க காரணமேதுமின்றி கணவன் தன் கடமைகளை 3 ஆண்டுகள் வரை நிறைவேற்றத் தவறினால்,
5. கணவன் ஆண்மையிழந்தவனாக இருந்தால்
6. கணவனுக்கு பைத்தியம், தொழு நோய், பால்வினை நோய் ஆகியன ஈராண்டு காலமாக நீடித்தால்.
7. 18 வயது நிறைவடைவதற்கு முன்பு தந்தையாலோ, காப்பாளராலோ திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, உடலுறவு நிறைவு பெறாத நிலையில் 18 வயதுக்குள் அத்திருமணத்தை ஏற்க அவன் மறுத்திருந்தால்.
8. கணவனால் கொடுமைக்குள்ளாக்கப்பட்டால்
9. இஸ்லாமிய சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வேறு காரணங்கள் இருந்தால்.
மனைவி திருமணத்திற்குப் பிறகு முஸ்லிம் கணவனோ, மனைவியோ மதம் மாறினால், அந்த நேரத்திலேயே இஸ்லாமிய சட்டப்படி திருமண ஒப்பந்தம் முறிந்து விடும்.
கணவன் மதம் மாறியதால், மனவூவி வேறொரு முஸ்லிமை மணந்து கொண்டால்; இதை அறிந்த முதல் கணவன் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்து, தன் மனைவி மறுமணம் செய்த குற்றத்திற்காக வழக்கும் தொடர்ந்தான் என்றால், மனைவி குற்றமற்றவள் என்றே தீர்ப்பு வழங்கப்படும். கணவன் மதம் மாறியதால் மண ஒப்பந்தம் முறிந்து விட்டதே காரணம்.
இஸ்லாமிய சட்டப்படி மனைவி மதம் மாறினாலும் திருமண ஒப்பந்தம் முறிந்து விடும் என்பதே முடிவாகும். ஆனால் 1930-ம் ஆண்டு முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் 4-வது பிரிவின்படி, மனைவி மதம் மாறினாள் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் முறிந்து விடாது. மாறாக அவளோடு வாழ கணவன் மறுத்ததால், 2-வது பிரிவில் தரப்பட்டுள்ள காரணங்களில் ஒன்றைக் காட்டி, அதை நிரூபிப்பதன் மூலம் தீர்ப்பினை பெற முடியும். இதுவே இன்று இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சட்டமாகும்.
ஜீவனாம்சமும் ஷாஹ்பானு வழக்கும்
திருக்குர்ஆன் கூறுகின்றது:
'உங்களில் மனைவியரை விட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்பவர்கள். தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார்களாக! ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற) வற்றைச் செய்து கொண்டார்களாயின், உங்கள் மீது எந்தக் குற்றமும் கிடையாது. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கோனுமாவான்.' (2:240) 'இன்னும் 'தலாக்' சொல்லப்பட்ட பெண்களுக்கு (இத்தா வரை கணவனிடமிருந்து) முறையான பராமரிப்புப் பெற உரிமையுண்டு. (இது) தீமையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வோர் மீது கடமையாகும்.'(2:241) கணவன் மனைவி இடையே மணமுறிவு (
'தலாக்') ஏற்பட்டுவிட்டால், மனைவி 'இத்தா' இருக்கும் நாள்களில் கணவன் அவருக்கு பராமரிப்புத் தொகை (ஜீவனாம்சம்) தர வேண்டும் என்பதை இவ்வசனம் தெளிவுப்படுத்துகின்றது. இதை ஆதாரமாகக் கொண்டே ‘இந்திய இஸ்லாமியர் சட்டம்' வாழ்க்கைப்படி எவ்வாறு தர வேண்டும் என்பதைக் கூறுகிறது. ஏற்கனவே 'மஹர்' தொகை கொடுக்கப்படாமலிருந்தால் உடனடியாக அதனையும் கொடுத்து விட வேண்டும் என்பது சட்டம். மனைவிக்கும் வாழ்க்கைப்படி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக ஹனபி, ஷாபிஈ, ஒயா ஆகிய சட்டப்பிரிவுகளிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. ஹனபி சட்டப்பிரிவின்படி கணவன், மனைவி இருவரின் அந்தஸ்துக்கு தக்கபடி வாழ்க்கை செலவுத் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஷாபி சட்டத்தில் கணவனின் தகுதிக்கேற்பவும், ஒயா பிரிவில் மனைவியின் தரத்திற்கேற்பவும் நிர்ணயித்தல் வேண்டும்.
மணமுறிவுக்குப் பிறகு குழந்தைகள் 18 வயதை அடையும் வரை அவர்களைப் பராமரிக்கின்ற பொறுப்பு தந்தையுடையதாகும். மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டால், தந்தையின் பொறுப்பு நீங்கிவிடுகிறது. இருந்தாலும் மகள் விதவையாகி வந்து நின்றால், அவளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை தந்தையே ஏற்க வேண்டும்.
இந்தியாவில் 1898ல் குற்றவிசாரணைச் சட்டம் (சி.ஆர்.பி.சி) உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தின் 488-வது பிரிவிலிருந்து தான், 1973-ல் உருவாக்கப்பட்ட 125, 127 ஆகிய பிரிவுகள் தோன்றின. அதன் விபரம் பின்வருமாறு.
சி.ஆர்.பி.சி.125-வது பிரிவு கூறுகிறது; 'போதுமான வசதி படைத்திருந்தும் எவரேனும் தன்னைப் பேணிக்காத்துக் கொள்ள முடியாத மனைவி, அல்லது அத்தைகய புறக்கணிப்பு, அல்லது பேணிக்காக்க மறுத்தல் ஆகியன மெய்ப்பிக்கப்பட்ட பின்னர், ஒரு முதல் வகுப்புக் குற்றவியல் நடுவநர், அந்த நபருடைய மனைவி, குழந்தை, தாய் அல்லது தந்தை ஆகியோரைப் பேணிக்காப்பதற்காக மாதந்தோறும் ஒரு தொகையினை அவர்களுக்கு அவர் அளித்து வரவேண்டும் என்று உத்தரவிடலாம். அத்தொகை மொத்தத்தில் மாதம் 500 ரூபாய்க்கு மேற்படலாகாது. குறிப்பு:- மனைவி என்பதில், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பின்னரும், அல்லது விவாகரத்து செய்து கொண்ட பின்னரும் மறுமணம் செய்து கொள்ளாதவளும் அடங்குவாள்.'
சி.ஆர்.பி.சி.127 (3-A) வது பிரிவு கூறுகிறது. 'கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண், அத்தகைய உத்தரவுக்கு முன்போ, பின்போ தன் கணவனிடமிருந்து குல வழக்கப்படியோ, அல்லது சொந்த சட்டப்படியோ விவாகரத்தின் போது அளிக்கப்பட வேண்டிய தொகை முழுவதையும் பெற்றுக் கொண்டார் என்று தோன்றினால் (1) அத்தொகை அந்த உத்தரவுக்கு முன்பே கொடுக்கப்பட்டிருப்பின் கணவன் அவளுக்கு அந்த மாதாந்திர தொகையை அளிக்க காலம் முடிவடைந்த தினத்திலிருந்தும் அந்த உத்தரவை ரத்து செய்யலாம்.' 1973 ஆகஸ்ட் 18-ம் நாள் அன்றைய பிரதமர் இந்திராகாந்தியை முஸ்லிம் தலைவர்கள் சந்தித்து 'முஸ்லிம் பெண்களுக்கு இதில் விதிவிலக்கு வேண்டும்' என்று வற்புறுத்தி கேட்டுக் கொண்டார்கள். அதன் பேரில் முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டது.முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு தலையிடாது என இந்திரா உறுதியளித்தார். அத்தோடு இன்றைய மத்திய அமைச்சர் ஆர்.என். மிஸ்ரா 18.12.1973ல் குற்ற விசாரணைச் சட்டத்தின் மூலம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் அரசு தலையிடாது' என அறிவித்தார். இஸ்லாத்தில் திருமணம் என்பது பரியக் கூடிய கூட்டாகும். எனவே, திருமணம் செய்து வைப்பதோடு மகளைப் பராமரிக்கின்ற பொறுப்பு நிரந்தரமாக முடிந்து போவதில்லை. கணவனால் விவாகரத்து செய்யப்பட்டால் மகளுக்கான பெற்றோர்களின் பொறுப்புப் புதுப்பிக்கப்படுகிறது.’ என டாக்டர் தாஹிர் 1984 ஆகஸ்டில் பம்பாயில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது குறிப்பிட்டார்.
ஷாஹ்பானு வழக்கு
உச்சநீதிமன்றத்தில் ஷாபானு வழக்கு நடந்த போது டாக்டர் தாஹிரின் பேச்சு நகலும் தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் தெரிவித்த கருத்துகளும் உச்சநீதிமன்றத்தில் புறக்கணிக்கப்பட்டன. அன்றைய தலைமை நீதிபதி சந்திரசூட் தமது தீர்ப்பில்; 1843-ல் ஐரோப்பியரான எட்வர்ட் லேன் வெளியிட்ட குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படித்து விட்டு தவறான முடிவுக்கு வந்தார்.
தலைமை நீதிபதிக்கும் அவரது உதவியாளர்களுக்கும் சட்ட நிபுணர் அமீர் அலி அவர்களின் 'வீக்ஷிசி றீPணூயூணூவீ நுய் ணூறீஸிபுனி' என்ற அற்புதமான நூல் கிடைத்திருந்தும், அதனை அவர்கள் பயன்படுத்தவில்லை. இதில் 'இஸ்லாத்தின் பெண்கள் நிலை' என்ற தலைப்பில் ஒரு முழு அத்தியாயமே உண்டு. மேற்கண்ட திருவசனத்தில் (2:241) இடம் பெற்றுள்ள 'மதாஉ' என்னும் சொல்லுக்கு 'னிபுணூஹிவீசிஹிபுஹிளீசி' என மொழி பெயர்த்ததே கோளாறுக்கு காரணம். மெய்ன்டனன்ஸ்' என்பதற்கு வாழ்க்கைச் செலவுத் தொகை, பராமரிப்பு, பேணுகை ஆகிய பொருள்கள் அகராதியில் காணப்படுகின்றன. இதை வைத்து, 'தலாக்' சொல்லப்பட்ட பெண்ணுக்கு, அவள் மறுமணம் செய்து கொள்கிற வரை வாழ்க்கை முழுவதும் ஜீவனாம்சம் தர வேண்டும் எனத் தீர்ப்பளித்தார் சந்திரசூட்.
(இன்ஷா அல்லாஹ், தொடரும்)

வெற்றி மனப்பான்மை
எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
வாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் நாம் விரும்புகிறோம். இது தவறான எண்ணமல்ல. தான் ஒரு திறமை மிகுந்தவனாக ஆகவேண்டும், தன்னால் முடிந்த அளவு வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு முயற்சி செய்வது மிகவும் நல்ல விடயம். இவ்வாறாக முன்னேற வேண்டுமென்ற மனப்பான்மையே மனதில் வெற்றிக்கான விதைகளைத் தூவி விடுகிறது. பதவிகளில் உயர்ந்த அந்தஸ்தினை நோக்கி, போட்டிகளில் வெற்றிகளை நோக்கி எனப்பல எதிர்பார்ப்புக்கள் மனதில் வேர்விடத் தொடங்குகின்றன. இதில் தவறேதுமில்லை. வாழ்க்கையினை முன்னேற்றகரமான பாதையில் திருப்புவதற்கான ஒரு உந்து சக்தியாக இவ் எதிர்பார்ப்புக்கள் ஆகிவிடுகின்றன. அது போல எப்பொழுதும் சோர்ந்திருக்கும் மனங்களுக்கு ‘வெற்றி பெற வேண்டும்’ என்ற எண்ணம் மகிழ்வையும், வாழ்க்கை குறித்தான திருப்தியையும் அளிக்கக் கூடியது.
இவ் வெற்றி குறித்தான எண்ணம் மனதில் தோன்றும்போதே நாம் இன்னொன்றையும் மனதின் மூலையில் இருத்த வேண்டும். அதாவது இவ் எதிர்பார்ப்புக்கள் எல்லாமே எந்தத் தடங்கலுமின்றி நாம் நினைத்தவாறே இலகுவாக ஈடேறாமலிருக்கவும் வாய்ப்புக்களிருக்கின்றன என்பதனையும் மனதில் இருத்த வேண்டும். நமது வாழ்வின் எந்தவொரு போட்டியிலும், முயற்சிகளிலும் முதலாவது, இரண்டாவது என வகைப்படுத்தப்படும் போது எல்லாவற்றிலுமே முதலாவதாக வரும் சாத்தியங்கள் குறைவு. இவ்வாறாகச் சில தோல்விகளைத் தழுவ நேரிடுவதை நமது எதிர்பார்ப்புக்கள் ஈடேறவில்லை எனவும் கொள்ளலாம். ஆனால் எதிர்பார்ப்புக்கள் ஈடேறாமல் போவதற்கு போட்டிகள் மட்டுமே அவசியமென்றும் சொல்லமுடியாது. யாருடனும், எந்தப் போட்டியும் இல்லாதவிடத்தும், தனது மனதில் வேர்விட்ட எதிர்பார்ப்பொன்று ஈடேறாவிட்டால் அவர் மனதளவில் கோழையானவனாக மாறி உயிரற்ற மனநிலைக்கு மாறிவிடக் கூடும்.
ஆகவே போட்டி என்ற ஒன்று இருந்தாலோ, இல்லாவிட்டாலோ தனது எதிர்பார்ப்புக்கள் ஈடேறா விட்டால் அல்லது, தமது இலட்சியத்தை அடைய முடியாமல் போனால் பலர் நிராசையோடு மனதளவில் உடைந்துபோகின்றனர். தொலைக்காட்சிகளில், போட்டி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள். வெற்றியை அறிவிக்கும் போது துள்ளிக் குதிக்கும் அதே வேளை தோல்வியை அறிவிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் தாங்கமுடியாமல் அழுகின்றனர். சிலர் கோபப்பட்டு நடுவர் குழுவினை அநீதம் விளைவித்ததாகத் திட்டுகின்றனர். இப்படியாக மனதில் ஆசையோடு எதிர்பார்த்த ஒன்று கிட்டாமல் போனால் அதற்கான நமது வெளிப்பாடுகள்தான் நமது மன உறுதியினைப் பற்றி வெளியே சொல்கின்றன.
உங்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் ஏதேனும் இருக்கின்றதா? போட்டியொன்றில் முதலாவதாக வரமுடியவில்லையென்று, வாழ்வில் ஆவலாக எதிர்பார்த்த ஒன்று கிட்டாமல் போனதென்று சோர்ந்து போய் தைரியமிழந்த அல்லது அதிகமாகக் கோபப்பட்ட சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்வில் ஏதேனும் உண்டா? சாதாரண மனிதர்களான எமக்கு இது போன்ற உணர்வுகள் ஏற்படுவது இயல்புதான் எனினும் நமது மனதின் மகிழ்ச்சியை நாமே கொன்று விடுவதைப் போன்ற இவ் உணர்வுகள் மிகத் தீங்கானவை. மிகவும் கோழைத்தனமானவை. ‘வெற்றி’ என்றால் என்னவென்று அறிந்த மனங்கள் இதுபோல தோல்விகளில் பெரிதாக ஆர்ப்பரிப்பதில்லை. உடைந்து போவதுமில்லை.
ஏதாவதொரு சந்தர்ப்பத்தில், ஒரு போட்டியில் வெற்றிபெற முடியாமல் போனதென்பது தோல்விக்கான முழு அர்த்தமல்ல என்பதனை மனதிலிருத்துங்கள். வெற்றி மனப்பான்மையோடு, ஒரு எதிர்பார்ப்போடு தைரியமாக அப் போட்டியில் கலந்து கொண்டீர்களே, அதுதான் வெற்றி. உங்களிடம் இருக்கும் திறமை மற்றும் மற்றப் போட்டியாளர்களின் திறமை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்காக போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன எனக் கொண்டாலும் வெற்றி, தோல்வி இரண்டையும் எதிர்கொள்ளும் மனப்பான்மையே உங்கள் உண்மையான திறமையை வெளிக்காட்டுகிறது. வெற்றியில் பெரிதாக ஆர்ப்பரிக்காமலும், தோல்வியில் முழுதாக உடைந்து போகாமலும் இரண்டையும் அமைதியாக, சமமாக எதிர்கொள்வதே உண்மையான வெற்றியெனப்படுகிறது.
ஆனால் நாம் காணும் இன்றைய சமூகத்தில் அநேகமான போட்டிகளில் அடுத்தவர்களைத் தோல்விக்குள்ளாக்கி, அவர்களைக் கீழே அல்லது பின்னால் தள்ளிவிட்டு தான் மட்டும் எல்லா விதத்திலும் எல்லா இடங்களிலும் உயர்ந்த இடத்துக்குச் செல்லவேண்டும் என்ற மனப்பான்மையே மிகைத்திருக்கிறது. அதுவல்ல வெற்றி. அதுவல்ல உண்மையான முன்னேற்றம். ஒருவர் வெற்றியாளராக, இன்னொருவரைத் தோற்கடிக்க வேண்டுமென்பதில்லை. உண்மையான வெற்றியாளரெனப்படுபவர் இன்னொருவரைத் தோல்விக்குள்ளாக்கி, முதலாவதாக வருபவர் அல்லர். தான் பெற்ற வெற்றி, தனது திறமையை உணர்ந்து அவற்றை இன்னும் வளரச் செய்தபடி எந்தவொரு தேவையற்ற வீணான எதிர்பார்ப்புக்களுமின்றி மன உறுதியோடு , தன்னம்பிக்கையோடு, இலட்சியத்தோடு முன்னே செல்லும் மனிதனே உண்மையான வெற்றியாளர் எனப்படுகிறார்.
உலகின் எல்லா மனிதர்களுக்கும் தமக்கென்று ஏதாவதொரு தனித் திறமையாவது இருக்கும். அத் திறமையை மேலும் மேலும் கூர் தீட்டி வளர்த்துக் கொள்வதே வெற்றி மனப்பான்மை எனப்படுகிறது. அதுவல்லாமல் தன்னுடன் போட்டியிட்டுத் தோற்ற ஒருவரிடம் ‘எனது திறமை, உனது திறமையை விடவும் அதிகமாக உள்ளது’ எனச் சொல்லிக் காட்டுவது அல்ல. அடுத்த போட்டியின் போது இக்கருத்து மாறுபடக் கூடும். இன்றைய வாழ்வில் பலர் போட்டிகளில் வெற்றிபெறக் கூடும். தமது இலட்சியங்களை ஈடேற்றிக்கொள்ளக் கூடும். தமது திறமைகளை வெளிக்காட்டுவதில் பெரும் மகிழ்ச்சி அடையக் கூடும். ஆனால் பெரும்பாலாக இவ் வெற்றிகளைப் பெறுபவர்கள் தமது திறமையைக் குறித்தல்லாமல் அடுத்தவரைத் தோற்கடித்தது குறித்தே மகிழ்ச்சியடைகின்றனர். இது உண்மையில் தோல்வி மனப்பான்மையே தவிர வெற்றிமனப்பான்மை அல்ல.
ஆகவே ஒரு சந்தர்ப்பத்துப் போட்டியில் வெற்றி பெறுவதை மட்டுமே வாழ்வின் இலக்கெனக் கொள்ளாமல் முழு வாழ்வையும் தமது திறமைகளால் வெற்றிகொள்வதே வாழ்வின் உண்மையான வெற்றியெனக் கொள்ள வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோல்வியைத் தழுவ நேரும் பட்சத்தில் அதற்காக மனமுடைந்து சோர்ந்து போகக் கூடாது. எதிர்பார்ப்பு ஈடேறவில்லையென துயரப்பட்டு மனமுடைந்து போகக்கூடாது.
எல்லோருக்குமே அவ்வப்போது சில எதிர்பார்ப்புக்கள் ஈடேறாமல் போவது இயற்கை. ஆனால் அதற்காக நகரும் வாழ்க்கையை நிறுத்தி வைக்க முடியாது. அவ்வாறாக எதிர்பார்ப்பு ஈடேறாச் சமயங்களில் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாத வாழ்த்தொன்று உங்களை வந்தடைந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள். ‘அன்று நான் தோற்றுப்போனது நல்லதுதான்’ எனப் பின் வரும் காலங்களில் நீங்களே சொல்லக் கூடுமான அளவுக்கு வெற்றியை அவ் வாழ்த்துக்கள் சுமந்து வந்திருக்கும்.
எனவே ‘தோல்வியடைந்து விட்டோம்’ என்ற சோர்வு மனநிலையை முழுவதுமாக மனதிலிருந்து அகற்றி, தொடர்ந்த எதிர்பார்ப்புக்களை இல்லாமலாக்காது ‘ என்னைத் தோற்கடிக்க நான் விடமாட்டேன்’ என்ற தன்னம்பிக்கையோடும் உறுதியோடும் உங்கள் பாதங்களை முன்வையுங்கள். அடுத்தவரை விழச் செய்வதல்ல, தான் விழாமல் முன்னேறுவதே உண்மையான வெற்றி என உணருங்கள்.அவ் உணர்விருக்கும் நீங்களே வெற்றிமனப்பான்மை கொண்ட உண்மையான வெற்றியாளர்.
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி -
நன்றி : http://www.rishanshareefarticles.tk/

அம்மா
by ஃபஹீமாஜஹான்
இருக்கும் இரு கரங்களும்
போதாதெனப் புலம்பும் அம்மாவின் முதுகின் பின்னால்
எப்பொழுதும் துரத்திக் கொண்டிருக்கும்
இரக்கமற்ற சொற்களும்
இங்கிதமில்லாக் கட்டளைகளும்
ஓய்ந்திருக்கும் இடந்தன்னைப் பறித்துக் கொண்டிருக்கும்
ஓராயிரம் பணிவிடைகளும்
மனமுடைந்து போன சொற்கள்
முட்டிமோதுகின்ற வீட்டில்
எப்பொழுதும் வெடித்துவிடத் தயாராக
நடமாடித்திரிகிறது பொறுமை
வலிய பாதங்களை அதிர வைத்து
நடந்து போகிறது
அனைத்தையும் மறுதலிக்கும்
ஒரு புறக்கணிப்பு
ஓங்கி வைக்கப் படும் பொருட்களிலிருந்தும்
அறைந்து சாத்தப் படும் கதவுகளிலிருந்தும்
புறப்பட்டு வருகிறது
அடுத்தவர் மீதான ஆத்திரங்கள்
கற்களை மாத்திரமே வைத்துக் கட்டப்பட்ட
வீட்டின்
விசாலமான கதவு , யன்னல்கள் வழியே புகுந்து
திரைச்சீலைகளை வீசியெறிந்து
முகஞ்சுழித்தவாறு வெளியேறிப் போகிறது
அன்பில் தோயாத ஒரு வெப்பக் காற்று
சிதறடிக்கப்பட்ட பிள்ளைகளின் வாழ்வையும்
உடைத்து வீசப்பட்ட அன்பின் வரைபடங்களையும்
வீடெங்கும் இறைந்து கிடக்கும்
ஒருவனின் வக்கிரங்களையும்
சேகரிப்பதிலேயே
களைத்துப் போகிறாள்
வருத்தம் கவிழ்ந்த உடலுடன்
என்றாவது அவள் வீழ்ந்து தூங்கும்
ஆழ்ந்த உறக்கத்தை அதிரவைத்துக் கலைக்கும்
தண்ணீர்க் குவளையொன்றுக்காகவோ
அற்பச் சொல்லொன்றுக்காகவோ
கூச்சலிடும் ஒரு குரல்
நடைப்பிணம் போல எழுந்து வரும்
அவளது பாதங்களில் பின்னும்
யுகங்களாகச் சிதைக்கப்பட்டுவரும் நிம்மதியொன்று
என்றோ விதியாகித் தொடரும்
நியதிகளில் நசுங்குண்டவாறு
இரவு நெடு நேரம் வரைத்
துயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள்
எல்லோரும் உண்டு முடித்து எஞ்சும்
குளிர்ந்த உணவுக்காக
கருங்கல் சிலையொன்று
அதிகாரம் செய்த படி அலைகின்ற வீட்டில்
மோதி மோதியே செத்து விட்டன
அவள் வளர்த்த எல்லா மான்குட்டிகளும்
2009.01.02
(நன்றி: “கலைமுகம்”-49)
நன்றிகள் தங்களுக்கு http://faheemapoems.blogspot.com
அம்மா என்றழைத்தால்…
அம்மா என்று அன்போடு அழைத்தால் இப்போதெல்லாம் பெண்கள் கோப்படுகிறார்கள். ”எனக்கென்ன அம்புட்டு வயசா ஆயிடுச்சு?” என்று மூக்குநுனி மின்ன இதழ்கள் ஒட்டியொட்டிப்பிரிய நெற்றி நெறிய கேட்கிறார்கள். அம்மா என்பதற்குப் பொருள் ஒன்றே ஒன்றுதானா? எத்தனை ஆயிரம்? அவற்றுள் சிலவற்றை மட்டும் நான் இங்கே குறிப்பிடுகிறேன் பாருங்கள்
அம்மா – தங்கை
அம்மா – மகள்
அம்மா – பேத்தி
அம்மா – வேலைக்காரி
அம்மா – தாய்
அம்மா – எஜமானி
அம்மா – நண்பரின் தாய்
அம்மா – கருணையோடு பிச்சையிடுபவள்
அம்மா – காதலி (மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா)
அம்மா – நண்பன் (என்னம்மா கண்ணு சௌக்யமா?)
அம்மா – பாரதியின் செல்லம் (கண்ணம்மா)
அம்மா – அன்னை தெரசா (மத்த எல்லாரையும்விட இந்த அம்மாவைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
அம்மா – தமிழ் (தமிழன்னை)
அம்மா – தெய்வம்
அம்மா – மருத்துவர் (டாக்டரம்மா என்னைக் கொஞ்சம் திரும்பிப்பாரம்மா)
அம்மா – துன்பம் அகன்ற நிம்மதி (அம்மாடி இப்பதான் நிம்மதியா இருக்கு)
அம்மா – வலியின் வேதனையில் தன்னைமறந்து சொல்லும் சொல்
அம்மா – கலைஞரின் எதிர் இருக்கை
அம்மா – மணமான பெண்ணை அழைக்கும் மரியாதைச் சொல்
அம்மா – பெண்கள்
அம்மா – தாய்க்குலம்

இவ்வளவையும் விட்டுவிட்டு (இன்னும் இருக்கு) ஒரே ஒரு பொருளை மட்டும் எடுத்துக்கொள்வது என்ன ஞாயம்? தமிழன்னை வயதானவளா? என்றென்னும் இளமையானவளல்லவா? அன்னைதெரசா என்று அழைத்தது வயதின் காரணமாகவா? கொஞ்சம் யோசிங்கம்மா!
எல்லாம் சரிதான், ஆனால் எனக்குப் பிடித்த ஒன்று எதுவென்றால், எந்தப் பெண் தன்னை எப்படி அழைக்க விரும்புகிறாளோ அப்படியே அழைப்பதுதான்.
பெண்களைச் சந்தோசப்படுத்தாவிட்டால் எவருக்கும் சொர்க்கம் என்பது இங்கும் இல்லை அங்கும் இல்லை எங்கும் இல்லை!
தொகுப்பு: குடும்பம் source : http://anbudanbuhari.blogspot.com
உலகப் பெண்கள் பிரச்சினை
தஞ்சை ஜில்லா கல்விச்சங்க துணைத் தலைவரும், நாடறிந்த நாவலரும்,
வழக்குரைஞருமான
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத் நீடூர்
“… … அண்மையில் கோப்பன்ஹேகில் உலகப் பெண்கள் பிரச்சினை குறித்த ஒரு கருத்தரங்கம் நடந்தது. பெண்ணினத்திற்கு சமத்துவம் வேண்டும்; பெண்கள் முன்னேற வேண்டும் என்றெல்லாம் அந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னமேயே தாய்குலத்திற்கான பிரச்சனைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக தீர்த்துவைக்கப்பட்டுவிட்டன. ஆகவே, இஸ்லாமிய சமுதாயத்தில் பிரச்சனைக்கே இடமில்லை. காலப்போக்கில் நாம் மாற்றான் கலாசரத்திற்கு அடிமையாகி, அலைக்கழிந்துவிட்டோம். நம்மை நாமே சீரழிவைத் தேடிக்கொண்டோம். அரபு நாடுகளிலே பெண்களுக்கு மஹர்கட்டியே திருமணம் நடைபெறுகிறது. அங்கு ஆண் ஏழையாகிவிடுகிறான் – பெண் பணக்காரியாகிறாள்! இந்த விழாவில் கலந்து கொள்ள பயந்து கொண்டு கோழைகள் பலர் வரவில்லை. மஹர் தான் நம் சட்டம். ஹிந்துக்களிடையேதான் இந்த வரதட்சனைப்பழக்கம்! பெண்களுக்கு அங்கே சொத்துரிமை இல்லாததால், பெண்ணுக்கு சீராக ஹிந்துத்தந்தை மகளுக்குக் கொடுப்பதில் நியாயமிருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில் பெண்ணுக்கு சொத்துரிமை இருக்கிறது. ஆகவே வரதட்சணைத் தேவையில்லை.
1974-ம் ஆண்டிலே தஞ்சை மாவட்டத்திலே மாய+ரத்தில் மகாநாடு கூட்டி, தீர்மானம்போட்டு, சட்டம் செய்து, கையெழுத்து வாங்கியிருந்தோம். புலனளிக்கவில்லை. 74-க்கு பிறகு 80 நடந்து கொண்டிருக்கிறது. 74-ல் போட்ட சட்டத்தை மீறாதவன் நான் ஒருவன்தான்! மற்றவர்களையெல்லாம் மீறிவிட்டார்கள். எதையுமே நாம் அநுஷ்டானப+ர்வமாக (Pசயஉவiஉயட) அணுக வேண்டும். இந்த வரதட்சனைக் கொடுமைக்கு 60 விழுக்காடு பெண்கள் தான் காரணமாயிருக்கிறார்கள். மகளுக்குக் கொடுத்த சீரை மகன் மூலம் வாங்கித் தீர நமது தாய்மார்கள் துடியாய்த் துடிக்கிறார்கள். பெண்களுக்கு இதில் பொறுப்பு உண்டு. கைக்கூலிக்கு அடிப்படைக் காரணம் நம்மிடையே மார்க்கக்கல்வி சூனியம். நும் மத்தியில் போதிய மார்க்கக் கல்விக்கூடங்கள் இல்லை. அப்படியே அங்குமிங்குமாக தீனியாத் பள்ளிகளை ஆரம்பித்து வைத்தால், நமக்கு தீனியாத் கல்வி பயிலும் ஆர்வமும் ஏற்படுவதில்லை – நமது குழந்தைகளையும் மதரஸாக்களுக்கு அனுப்பி வைப்பதுமில்லை. மஹரைப்பற்றி அறிந்து கொள்வதற்கு நம் பெண்களுக்கு எந்த அளவுக்கு மார்க்கக்கல்வி தெரிந்திருக்கிறது? நாம் என்பதை நாம் யோசித்துப் பார்க்கவேண்டாமா? எல்லாவற்றுமே விலை ஏறியிருக்கும் இந்த 1980-ல் ஒரு பெண்ணுடைய விலையை – மதுரை – 100, 200 ரூபாயாக வைத்துள்ளோம். இதுகேலிக்குரியது. தலாகின் கொடுமை பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தால் இவ்வளவு மலிவாக பெண்ணுடைய வாழ்வு பாழாகிவிட அநுமதிப்போமா? கூக்குரல் இட்டால் மட்டும் போதாது. சுரியான அணுகு முறை (Pழளவைiஎந யிpசழயஉh) நம்மிடையே வேண்டும். எண்ணம் சிறப்பாகயிருந்து, கூட்டுச்செயல் உருவாகுமானால் உங்களைக் கண்டு சமுதாயம் பயப்படும். அந்த அடிப்படையில் இன்றே சபதம் எடுத்துக்கொண்டு செயல்படுங்கள். பெண்கள் முகாமிலே தொண்டர் படையை ஏற்படுத்துங்கள். இறைவன் நம் பக்கம் இருந்து நமது தூய கடமைப் பணிகளுக்கு உரிய பலனை ஈட்டித்தருவது திண்ணம்” என்பதாக சுமார் 1 மணி நேரம் வரை சயீத் சாஹிபவர்கள் தமது வழக்குறைஞர் பாணியிலே, ஆதாரங்களை முன் வைத்து உணர்ச்சிகரமாக உரை நிகழ்த்தினார்.

இஸ்லாமியச் சட்டம் (1)
இஸ்லாமியச் சட்டம் (1)
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்.,
வழக்கறிஞர்.
வழக்கறிஞர்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: 'இவை அல்லாஹ்வின் வரைவுகள். இவற்றை நீங்கள் மீறவேண்டாம். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோர்தான் அநீதி இழைப்போராவர்.' (2:229)
உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு தத்துவங்கள் பின்பற்றப்படுகின்றன. அந்தந்த நாட்டு சூழ்நிலைகளுக்கேற்ப மனித சமுதாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக முடியாட்சியாக இருந்தாலும், குடியாட்சியாக இருந்தாலும், சர்வதிகார ஆட்சியானாலும், சமயங்களில் நம்பிக்கையற்ற கம்யூனிஸ ஆட்சியானாலும் அங்கே சட்டங்கள் அவசியமாகின்றன.முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலும், முஸ்லிம் நாடுகள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிற நாடுகளிலும் குற்றவியல் சட்டங்கள் நிலவரைச் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், சான்றியல் சட்டங்கள் போன்ற விதிமுறைகள் சாதி சமயவேறுபாடின்றி அனைவரையும் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுத்தப் படுகின்றன.
இந்தியவில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகள், போன்ற பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். வேறு நாடுகளில் இது போன்ற பரவலாகக் காணமுடியாது. மதச்சார்பற்றக் கொள்கையை பாரதம் பின்பற்றி வருகிறது. மதங்களின் தனிப்பட்ட சட்ட திட்டங்களில் தலையிடாமல் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே விடுதலை வாங்கித் தந்தவர்களின் கனவாக இருந்தது.
'தனியார் சட்டம்' (PERSONAL LAW)என்பது, அந்தந்த மதங்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டமாகும். ஹிந்து மகவேற்புச் சட்டம் (THE HINDU ADAPTATION ACT) ஹிந்து திருமணச் சட்டம், ஹிந்து இறங்குரிமைச் சட்டம் (THE HINDU SUCCESSION ACT) ஆகியன ஹிந்து சமயத்தாரை மட்டுமே கட்டுப்படுத்தும். இதே போல முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் முதலியன முஸ்லிம்களை மட்டுமே கட்டுப்படுத்தும்.சமயச் சட்டங்களைச் சரிவரத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அந்தந்த சமயங்களின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, தத்துவம், முதலியவற்றை ஓரளாவது அறிந்து கொள்வது அவசியமாகும். அப்படித் தெரிந்து கொள்ளாமலும், தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொள்ளாமலும் காழ்ப்புணர்ச்சியன் அழுத்தத்தில் அவதிப்படுவதன் காரணமாகத்தான், பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சிலர் கூக்குரலிடுகிறார்கள்.
[05] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்
எழுதியவர்/பதிந்தவர்/உரை டாக்டர் ஷேக் சையது M.D
கடந்த தொடரில் நுத்பா என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தம் உள்ள என்று பார்த்தோம்.
இந்தத் தொடரில் விந்துவின் சேர்மங்கள் என்ன என்ன உள்ளது என்றும் நுத்ஃபா என்ற வார்த்தை எவ்வாறெல்லாம் பயன் படுத்தப்பட்டுள்ளது என்பதையும் பார்ப்போம்.
ஓரு ஆணுக்கு ஒரு தடவை விந்து வெளியாகும் போது அதனுடைய அளவு சுமார் 2.5ml முதல் 3.5ml இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதில் ஒரு துளியில் சுமார் 40 கோடி உயிரணுக்கள் இருக்கும். அவற்றில் 70% சதவீதம் மட்டும்தான் வீரியம் உள்ளதாக இருக்கும். அந்த உயிரணுக்கள் தலைப்பகுதி, வால்பகுதி என இரு பகுதியைக் கொண்டிருக்கும். தலைப்பகுதி சற்று நீள உருண்டை வடிவத்திலும், வால்பகுதி சற்று நீண்ட நிலையிலும் இருக்கும். தலை 5 மைக்ரோன் அளவும், வால் 55 மைக்ரோன் அளவும் கொண்டதாகும்.கருவரைக்குள் இருக்கும் கருமுட்டையை மூடியிருக்கும் மெல்லி திரையை தகர்த்து, கருமுட்டையை சென்று அடைவதற்கு துணை புரிகிறது. இந்த உயிரணுக்கள் கருவறையை நோக்கி நீந்தி செல்லும் தன்மை வாய்ந்தது. அவ்வாறு நீந்திச் செல்வதற்கு வாலை துடுப்பாக பயன்படுத்தி ஒரு நிமிடத்திற்கு 3mm வேகம் என்ற விகிதத்தில் முன்னேறிச் செல்கிறது. தலைப்பகுதியில் ஒரு வகை திரவும் சுரந்து கொண்டிருக்கும். அந்த திரவம் பெண்ணின்
இந்த உயிரணு கர்பப்பைய அடைந்து, பெண்ணின் கரு முட்டையுடன் சேர்ந்ததும் வால் பகுதி முறிந்து வெளியில் தங்கி விடும். அந்த கருமுட்டை உயிரணுவுடன் சேர்ந்ததும், வேறொரு உயிரணு வந்து தன்னுடன் சேர்ந்துவிடாமல் இருக்க மெல்லிய தடையை ஏற்படுத்தி விடும். சில வேளைகளில் இறைவனின் நாட்டத்தால் வேறொரு உயிரணுவும் அந்த தடையை தகர்த்துவிட்டு உள்ளே சென்றுவிடும். அப்போது அந்த கரு முட்டை இரண்டு உயிரணுவுடன் சேர்ந்து இரட்டை குழந்தை உருவாகுகிறது. இது போல்தான் அபூர்வமாக பல உயிரணுக்கள் பெண்கரு முட்டையுடன் சேர்ந்துவிடும் போது 3,4,5 குழந்தைகள் பிறக்கும் அதிசயமும் நடைபெறுகிறது. அல்லாஹ் அவ்வப்பொழுது இது போன்ற அதிசயங்களை நிகழ்த்தி, குழந்தை உருவாக்கல் தனது கட்டுப்பாட்டில் மட்டும்தான் இருக்கிறது என்ற உண்மையை மனித சமுதாயத்திற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறான்.
இந்த உயிரணுக்களை பாதுகாப்பாக சுமந்து வருவதற்கு சில திரவங்களும் உற்பத்தியாகும். மீன்கள் உயிர் வாழ்வதற்கு நீர் எவ்வாறு அவசியமோ அது போல இந்த உயிரணுக்கள் உயிர்வாழ்வதற்கும் சில திரவங்கள் அவசியமாகும். அவைகளை பின் வருமாறு மருத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
1. Fructose (ஃபிரக்டோஸ்)
2. Pyro Phasphates (பைரோ பாஸ்ஃபேட்)
3. Ascorbic Acid (அஸ்கார்பிக் அமிலம்) 4. Prosta glandins (புரோஸ்டோ கிளான்டின்ஸ்)
இந்தவகைத்திரவங்கள் சுமார் 60% வரை இருக்கும்.
2. Pyro Phasphates (பைரோ பாஸ்ஃபேட்)
3. Ascorbic Acid (அஸ்கார்பிக் அமிலம்) 4. Prosta glandins (புரோஸ்டோ கிளான்டின்ஸ்)
இந்தவகைத்திரவங்கள் சுமார் 60% வரை இருக்கும்.
1. Citric Acid (சிட்டிரிக் அமிலம்)
2. Cholesterol (கொலஸ்டிரால்)
3. Zinc Phosphates (ஜின்க் பாஸ்ஃபேட்)
4. Acid Phosphates (ஆசிட் பாஸ்ஃபேட்)
5. Bicarbonates (பைகார்பனேட்)
6. Hyalorunic Acid (ஹைலோரினிக் அமிலம்)
இந்த வகைத் திரவஙகள் சுமார் 20% வரை இருக்கும்.

1. Androgen (ஆன்ரோஜன்)
2. Estrogen (ஈஸ்ட்ரோஜன்)
3. Glutamic Acid (குளுட்டாமிக் ஆசிட்)
4. Inositol (இனோசிட்டால்)
5. Inhibin (இன்ஹிபின்)
6. Protein (புரதம்)
இந்த திரவங்களும், உயிரணுக்களும் சேர்ந்து 20% இருக்கும்.
2. Estrogen (ஈஸ்ட்ரோஜன்)
3. Glutamic Acid (குளுட்டாமிக் ஆசிட்)
4. Inositol (இனோசிட்டால்)
5. Inhibin (இன்ஹிபின்)
6. Protein (புரதம்)
இந்த திரவங்களும், உயிரணுக்களும் சேர்ந்து 20% இருக்கும்.
இந்த அனைத்து வகைத் திரவங்களும் உயிணுக்கள் உயிர் வாழ்வதற்கும், பாதுகாப்பாக கர்பறைக்கு செல்வதற்கும் துணை புரிகிறது.
இந்த உயிரணுக்கள், திரவங்கள் சேர்ந்த மொத்தத்திற்கு பெயர்தான் விந்து அல்லது இந்திரியம் என்று கூறுகிறோம். இதனை இறைவன் குர்ஆனில் மாஉ என்றும், மஹீன் என்றும் குறிப்பிட்டிருப்பதை பின்வரும் வசனங்களின் மூலம் அறிந்து கொள்கிறோம்.
ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ
அற்ப நீரிலிருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட மூலத்தில் (நுத்ஃபா) மனிதனின் சந்ததிகளை உண்டாக்கினான். அல் குர்ஆன்: 32:8
أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ
அற்பமான நீரிலிருந்து உங்களை நாம் படைக்க வில்லையா? அல் குர்ஆன்: 77:20
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
குதித்து வெளிவரும் நீரிலிருந்து மனிதன் படைக்கபட்டான். அல் குர்ஆன்: 86:6
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى
(கர்பத்தில்) செலுத்தப்படும் விந்துவில் (மனியில்) உள்ள ஒரு நுத்ஃபாவாக அவன் இருக்கவில்லையா? அல் குர்ஆன்:75:37.
மேற்கூறப்பட்ட முதல் மூன்று வசனத்தில் விந்துவின் மொத்தத்திற்கு மாஉ என்ற வார்த்தையையும், நான்காவது வசனத்தில் மஹீன் என்ற வார்த்தையையும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
ஆனால் நுத்ஃபத் என்ற வார்த்தைக்கு விந்து என்று பொருள் கொள்வதை விட, விந்துவில் உள்ள உயிரணு என்று அர்த்தம் கொள்வது குர்ஆனுடைய வசனங்களுடன் மிகவும் பொருந்தி வருகிறது. இந்த அர்த்ததைக் அந்த வார்த்தைக்கு கொடுத்து பொருள் விளங்கும் போது அல்லாஹ் எவ்வளவு ஆழமாக இந்த விஞ்ஞான செய்தியை சொல்லியிருக்கிறான் என்பதும் நமக்குத் தெரியவரும்.
நுத்ஃபா என்பதற்கு உயிரணு என்று பொருள் கொள்ள வேண்டும் என்பற்கு பின் வரும் வசனங்கள் சான்றாக உள்ளன.
அந்த வசனங்களை ஆய்வு செய்யும் முன்பு இன்றைய மருத்துவ அறிவியலில் இந்த உயிரணு குறித்து என்ன முடிவுக்கு வந்துள்ளது என்ற செய்தியைத் தெரிந்துக் கொள்வோம். கர்பப்பையை நோக்கிச் செலுத்தப்படும் இந்திரியம் அனைத்தும் கர்ப்பையை சென்று அடைவதில்லை. மாறாக ஒரே ஒரு உயிரணு மட்டும்தான் பெண் கருமுட்டையுடன் சேர்ந்து, பல மாற்ற நிலைகளுக்கு உள்ளாகி மனித உருவம் பெற்று குழந்தையாக பிறக்கிறது.
இந்த விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டு பின் வரும் இறைவசனங்களை ஆய்வு செய்து பார்ப்போம்.
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى
(கர்பத்தில்) செலுத்தப்படும் விந்துவில் உள்ள ஒரு நுத்ஃபாவாக அவன் இருக்கவில்லையா? அல் குர்ஆன்:75:37.
இந்த வசனத்தில் கர்ப்பப்பையில் செலுத்தப்படும் இந்திரியத்தில் உள்ள நுத்ஃபா வாக ஆகியருக்க வில்லையா? என்று இறைவன் வினவுகிறான். இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள நுத்ஃபா என்ற வார்த்தைக்கு இந்திரியத் துளி என்ற பொருள் கொடுப்பதைவிட உயிரணு என்ற பொருள் கொடுப்பது இந்த தொடருக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.
அதாவது இந்திரியத்தின் ஒரு துளியாக அவன் இருக்க வில்லையா? என்று பொருள் கொடுப்பதைவிட, இந்திரியத்தில் அவன் ஒரு உயிரணுவாக இருக்க வில்லையா? என்ற பொருள் கொடுத்து இந்த வசனத்தை வாசிக்கும் போது மிகப் பொருத்தமாக உள்ளது.
ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ
பின்னர், (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பபையில்) அவனை நுத்ஃபா ஆக்கினோம். அல் குர்ஆன்: 23:13.
இதற்கு முந்திய வசனத்தில் முதல் மனிதரை களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம் என்ற செய்தியைக் கூறி விட்டு அதற்குப்பிறகு இந்த வசனத்தைக் கூறியுள்ளான் இறைவன்.
முதல் மனிதர் எவ்வாறு களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைக்கப்பட்டாரோ அது போல அவரது சந்ததிகளை அற்பமான நீரின் மூலப்பொருளிலிருந்துதான் படைத்தேன் என்று உணர்த்துவதற்காக இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம். இதையே 32வது அத்தியாயம் 8வது வசனத்தில் குறிப்பிடுகிறான்.
அற்ப நீரிலிருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட மூலத்திலிருந்து மனிதனின் சந்ததிகளை உண்டாக்கினான். அல் குர்ஆன்: 32:8
அந்த மூலம்தான் உயிரணு.
அதனை சுலாலத் என்று 32வது அத்தியாயம் 8வசனத்திலும், நுத்ஃபா என்று மேற்குறிப்பிட்ட வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள நுத்ஃபத் என்ற வார்த்தைக்கு உயிரணு என்று பொருள் கொள்ள வேண்டும் என்று நாம் சொல்வதற்கு காரணம் நுத்ஃபாவை பாதுகாப்பான கர்ப்பப்பையில் ஆக்கியதாக இறைவன் கூறுகிறான். கர்ப்பப்பையில் ஆக்கப்படுவது ஒரு துளி இந்திரியம் அல்ல, அதில் உள்ள ஒரு உயிரணுதான் என்பது அறிவியல் உலகில் ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக நிரூபணம் செய்யப்பட்ட விஷயமாகும். அறிவியலுக்கு எதிரான கருத்தை குர்ஆன் ஒரு போதும் முன் வைக்காது. எனவே இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள நுத்ஃபா என்ற வார்த்தைக்கு உயிரணு என்று பொருள் கொள்வதே சரியானதாகும்.
அதன்படி இந்த வசனத்தின் பொருள் பின்வருமாறு இருக்கும்.
பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) அவனை (பெண் முட்டையுடன் சேரும்) ஒரு உயிரணுவாக ஆக்கினோம்.
ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً
பின்பு நுத்ஃபாவை அலகத்தாக படைத்தோம். அல் குர்ஆன்: 23:14
இந்த வசனத்தில் நுத்ஃபாவை அலகத்தாக (இது குறித்து பின்பு விளக்கப்படும்.) படைத்தோம் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அலகத் என்ற நிலைக்கு மாறுவது கர்ப்பப்பைக்குள் சென்ற ஒரு உயிரணு மட்டும்தான். ஒரு துளி இந்திரியம் அல்ல என்பது இங்கே கவனிக்கத் தக்கதாகும்.
மேற்கூறப்பட்ட மூன்ற வசனங்களிலும் நுத்ஃபா என்ற வார்த்தையை உயிரணு என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்படடிருப்பதை காணலாம். இதன்படி நுத்ஃபா என்பதற்கு உயிரணு என்று பொருள் கொள்ள வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.
إِنَّا خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ
நிச்சயமாக நாம் மனிதனை கலப்பான விந்தணுவிலிருந்து படைத்தோம். அல் குர்ஆன்: 76:2
நுத்ஃபா என்பதற்கு விந்தணு என பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டதின் அடிப்படையில் மேலே கூறப்பட்ட 76 வது அத்தியாயம் 2 வது வசனத்தில் இடம் பெற்றுள்ள நுத்ஃபா என்ற வார்த்தைக்கு விந்தணு என்று பொருள் கொள்ளும் போது அம்ஷாஜ் (கலப்பான) என்ற வார்த்தைக்கு இந்த விந்தணுவை பாதுகாப்பாக சுமந்து வருவதற்கு பயன்படும் வேதியல் திரவங்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். காரணம் அந்த திரவங்கள் இன்றி விந்தணுக்கள் மட்டும் இருக்க முடியாது.
அதன்படி வேதியல் திரவங்களுடன் கலந்த ஒரு விந்தணுவிலிருந்து மனிதனை நாம் படைத்தோம் என்று இந்த வசனத்திற்கு பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறு பொருள் கொள்ளும் போது இந்த விந்தணுவை பாதுகாப்பதற்கு பல திரவங்கள் இருக்கிறது என்ற ஒரு பெரிய அறிவியல்அறிவியல் உலகம் கண்டு பிடித்துள்ளது. உண்மையை 1423 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வசனத்தில் இறைவன் கூறியருப்பதை புரிந்து கொள்ளலாம். அந்த விந்தணுவோடு கலந்த பல்வேறு வேதியியல் திரவங்கள் உண்டு என்றும், அது என்ன என்ன என்பதையும் இப்போதுதான் மருத்துவ
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது!
சிறிது காலத்திற்கு முன்புவரை நமது உடலில் வலியுணர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் மூளையே என்று விஞ்ஞானிகள் எண்ணிக் கொண்டிருந்தனர்.. ஆனால் சமீபத்தில் தான் நுண்ணிய கருவிகளைக் கொண்டு மனித தோல்களை ஆராய்ந்ததில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் நரம்பு மண்டலங்கள் (Pain Receptors) தோல்களிலேயே இருக்கின்றன என்று நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தோல்களில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் இந்த நரம்பு மண்டலங்கள் தீக்காயங்களினால் கருகிவிட்டால் (Third degree burn) நமக்கு எந்த ஒரு வலியுணர்ச்சியும் (வேதனை-Pain) ஏற்படுவதில்லை.
இத்தனை அறிவியல் நுணுக்கம் வாய்ந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சத்தியத்திருமறை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பது நம்மை மட்டுமல்லாது இன்றைய நவீன அறிவியல் ஆராய்ச்சியாளர்களையும் வியப்புக்குள்ளாக்குகிறது.
அல்லாஹ் கூறுகிறான்: -
“யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன்: 4:56)
டாக்டர் டிகாடட் தேஜாஸன் (Dr Tigatat Tejasen) என்பவர் தாய்லாந்தில் உள்ள ஸியாங்மா பல்கலைகழக (Shangma University. Thailand) உடற்கூறு துறையின் பேராசிரியர் ஆவார். அவர் ஒருமுறை சவுதி அரேபியாவிற்கு வந்தபோது அவரிடம் மேற்கூறப்பட்ட திருமறை வசனம் கொடுக்கப்பட்டது. இவர் ஆரம்பத்தில் இத்திருமறை வசனத்தை மறுத்தார். ஏனென்றால் இந்த உண்மை சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அருளப்பட்ட திருமறையில் அவ்வசனம் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்று வாதிட்டார்.
அவரிடம் மேலும் சில அறிவியல் நுணுக்கம் வாய்ந்த வசனங்களை சுட்டிக் காட்டியதும் அவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்யத் துவங்கினார். தன்னுடைய நீண்டகால ஆய்விற்குப்பின் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த எட்டாவது மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறினார்:-
‘1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் கூறப்பட்டது அனைத்தும் உண்மையாகும். அவற்றை தற்கால அறிவியலின் மூலம் நிரூபிக்கக் கூட முடியும். படைப்பாளனான இறைவன் அருளிய இச்செய்தியை தெரிவித்தவர் எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள். எனவே நிச்சயமாக அவர் இறைவனின் தூதராவார்கள். ஆகவே, நான் ‘லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்’ என்பதைக்கூற இதுவே சரியான நேரம் என்பதை உணர்கின்றேன்’ என்று கூறி இஸ்லாத்தை தழுவினார்.
பார்க்கவும் வீடியோ.
அல்ஹம்துலில்லாஹ்!
பார்க்கவும் வீடியோ.
அல்ஹம்துலில்லாஹ்!
நன்றி :http://suvanathendral.com/portal/?p=231
Subscribe to:
Posts (Atom)