Monday, November 5, 2012

முதுபெரும் எழுத்தாளர் ஜே.எம்.சாலி அவர்களுக்கு சிங்கப்பூரின் உயரிய கலாச்சார விருது கிடைத்துள்ளது



முதுபெரும் எழுத்தாளர் ஜே.எம்.சாலி அவர்களுக்கு சிங்கப்பூரின் உயரிய கலாச்சார விருது கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள். அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்க பிரார்த்திக்கிறேன். அவருடைய பணி தொடரட்டும்." நாகூர்  ரூமி

ஜே .எம் சாலி அவர்கள் எனது உறவினர் ,நண்பர் ,சமகாலத்தில் படித்தோம் .(நான் சென்னை லயோலா அவர் பிரெசிடென்சி) எனது தாய் மாமாவின் பேத்தியை மணமுடித்தவர் . வாழ்த்துகள். மகிழ்வு


(படத்தில் வடகரை மகதி,ஜே .எம் சாலி, முகம்மது அலி ஜின்னா- சிங்கப்பூரில்)



ஜே .எம் சாலி அவர்களது குடும்பத்தில் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள். ஜே .எம் சாலி அவர்களது அண்ணன் ஜே .எம் ஹுசைன் அவர்கள் மிகவும் சிறந்த எழுத்தாளர். இவர்களது சொந்த ஊர் எரவாஞ்சரி. அவரது வாழ்க்கைத் துணைவி நீடூரைச் சார்ந்தவர் .

சிங்கப்பூர் நான் முதல் முறையாக சென்ற பொது உடனிருந்து  சிங்கப்பூர் சுற்றிப்பார்க்க மிகவும் உதவினார் .அவர் அப்பொழுது தமிழ் முரசு தமிழ் தினசரியில் பணியாற்றி வந்தார் .
அந்தப் பத்திரிக்கையில் என்னை பேட்டி கண்டு எழுதினார்.
"அரசியல் உறுதிப்பாடினால்   சிங்கப்பூர் வழிகாட்டுகிறது " என்று அதற்கு தலைப்பு கொடுத்திருந்தார்.

தமிழக வர்த்தகர் கருத்து பல இன இக்கியத்திற்குப் பாராட்டு
சிங்கப்பூர் இப்போதைய தலைமைதுவத்தின்  கீழ் நெடுங்காலம் அரசியல் உறுதிப்பாட்டுடன் விளங்கி வரும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்த்தகரும், வழக்கறிஞருமான திரு எஸ்.இ.எ.முகம்மது அலி ஜின்னா தெரிவித்தார் .
....என்பதோடு அந்த செய்தி தொடர்கிறது (தமிழ் முரசு 7-12-1970)

தொடர்ந்து படிக்க அரசியல் உறுதிப்பாடினால் சிங்கப்பூர் வழிகாட்டுகிறது,

 முஹம்மது அலி ஜின்னா, நீடூர்.)

(nidurali" "நீடூர்அலி") 















3 comments:

கிளியனூர் இஸ்மத் said...

விருது பெற்ற ஜே.எம்.சாலி அவர்களுக்கு மனமார்ந்த துவா மற்றும் நல் வாழ்த்துக்கள்...
தங்களுக்கு இணைய வலைதளத்திலிருந்து விருது கிடைக்க துவா செய்கிறேன்...

VANJOOR said...

முதுபெரும் எழுத்தாளர் ஜே.எம்.சாலி அவர்களுக்கு சிங்கப்பூரின் உயரிய கலாச்சார விருது கிடைத்ததற்கு மகிழ்வான வாழ்த்துக்கள்.


"நீடூர் அலி" என இணைய தளத்தில் அறியப்படும் வர்த்தகரும், வழக்கறிஞருமான

நீடுரின் தவப்பதல்வர் ஜனாப் எஸ்.இ.எ.முகம்மது அலி ஜின்னா
அவர்களின் வாழ்வின் மகிழ்வான நிகழ்வுகளையும் துளி துளியாக அறியப்பெறுவதும் ஆனந்தமே.

வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

siva gnanamji(#18100882083107547329) said...

best wishes to j.m.salih from his
college/hostel-mate