Showing posts with label ஆண்கள். Show all posts
Showing posts with label ஆண்கள். Show all posts

Tuesday, January 14, 2014

பெண்கள் ஏன் நம் பின்னால் நடக்கிறார்கள் !


ஆண்கள் இயற்கையாக  பெண்களை விட வேகமாக நடக்கும் சக்தி பெற்றவர்கள். அதில் சில பெண்கள் விதி விலக்கும் உண்டு.
பெண்கள் மரியாதை காரணமாக ஆண்கள் பின்னால் நடந்து செல்வதும் பண்பாடாக கருதுகிறார்கள். அது தாழ்வு மனப்பான்மையால் வந்ததாக கருதுவது தவறு.

 ஆண்கள் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், காப்பாளராகவும் இருக்க வேண்டியதும் இருக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதனால் ஆண்களுக்கு அந்த பொறுப்பும் உள்ளது. 

மனிதன் பெண்ணுக்கு  பாதுகாப்பாக  வழியமைத்து செல்வதற்கு சூழ்நிலையின் அவசியமான கட்டாய கால நிலை.

ஆண்களின் பார்வை அதிகமாக பெண்கள் மீது இருக்கும் இக்கால நிலையில் பெண்களின் நிலை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

Monday, January 7, 2013

நீயா ! நானா !

 ஆண்கள் பலசாலிகளா!
அனைத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில்லை. ஆண்களின் பலம் அவர்களது  வருமானம்
அவர்களது பலவீனம் அவர்கள் அதனை செலவு செய்வது .வருமானம் அதிகமாக இருக்க  கடன் கேட்பார்கள் வருமானம் குறைவாக இருப்பின் நட்பும் பாசமும் மற்றும் மற்ற  தொல்லைகளும்  அதிகமாகும் என்பதால் அதனை மறைத்தே வைப்பார்கள். அலைப்பாயும் மனதை மறைப்பார்கள். மறைவாக அத்தனையும் நடக்கும்.  hypocrite  இறைபக்தி ஒழுக்கமானவன் நம்பிக்கையாளன் இத்தனையும் இவனிடம் இருப்பதாக காட்டிக் கொள்வான். தவறான செயல்களிலிருந்து தப்பிப்பதில் திறமையாளன்

பெண்கள்  பலசாலிகளா!
அனைத்தையும் மற்றவர்களிடம் 'சூது வாது. தெரியாமல் பகிர்ந்துக் கொள்வார்கள். பின்பு மிகவும் வருந்துவார்கள்.
உணர்ச்சி வசப்பட்டவர்கள். அவர்கள் அதிகமாக பெறுவது அனைத்தும் தாய் வழி வந்தவை.எடுத்துச் செல்வது கணவன் வீட்டிலிருந்து. மனதில் இச்சை இருப்பினும் காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆண்கள் அவர்களை தொடர வேண்டும் ஆனால் ஆணுக்கு தான் அடங்கி நடப்பதாக காட்டுவதில் திறமை அதிகம் . நம்பிக்கை இருக்கும் அதில் சந்தேகமும் உள்ளடக்கம். கண்ணீர் அவர்கள் சொத்து .அந்த சொத்து பல சொத்துகளை பெற வழி வகுக்கும்
இரகசியம் காப்பது குறைவு. நடிக்கவும் தெரியும் நேர்மையாக இருக்கவும் தெரியும். 

பி . கு: அனைத்தும் உண்மையாகிவிட முடியாது . ஒருவரின் கருத்து மற்றவருடன் மாறுபடும் . விவாதத்தில் வெற்றி தோல்வி இல்லை . இது விவாதமும் அல்ல .ஒருவர் மனதை ஒருவர் விவாதத்தால் மாற்றுவது இயலாதது.
உடன் வாழ்வோர் கருத்து உடன்பட்டால் உலகம் இயங்காது . ஆய்வும் ,தத்துவமும் விஞ்ஞானத்திற்கு வழி வகுக்கும் . 
இன்றைய அரசியல் நாளைய சரித்திரம் . இன்றைய ஆய்வு விஞ்ஞானத்தின் முடிவு. காயிலிருந்து பழம் வரும்.பழம் நேரடியாக வராது.
கணவனும் மனைவியும் பல கருத்து வேறுபாடுகள்  இருப்பினும் தொடர்ந்து மகிழ்வாக வாழ்கிறார்கள்( தமிழ்நாடு அரசியல் இதற்கு விதிவிலக்கு)

Monday, December 3, 2012

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு தேவையா?

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு தேவையா?
கேஸ் அடுப்பு பற்ற வைக்கும் பெண்களுக்கு படிப்பு தேவையா?
கேஸ் அடுப்பு இருந்தாலும் கேஸ்  இல்லை
திரி அடுப்பு இருந்தாலும் மன்னன்னை இல்லை
அடுப்பு இருந்தாலும் விறகு இல்லை .
ஆக இந்த தலைப்பே சரியில்லை!

பெண்களுக்கு படிப்பு தேவையா?  இது கேள்வியா?
பெண்கள் எதுவரை படிக்கலாம் ! இது சரியா ?
படிப்பென்றால் 'ஆணென்ன பெண்ணென்ன' இதுவும் சரியில்லை
'படிப்பென்றால் நீயென்ன நானென்ன'இப்படி பெண்கள் கேட்டால் !
படிக்கும் பெண்கள் கெடுவதற்கு வாய்ப்புண்டே !
படிக்காத பெண்கள் கெடுவதில்லையா?
பெண்கள் மட்டுமா கெட்டுப் போகிறார்கள் ?
ஆண்களால்தானே  பெண்கள் கெடுக்கப் படுகிறார்கள் !
சினிமாவில் அசிங்கமாக ஆடுகின்றார்களே !
ஆட வைப்பது யார் ? மற்றும் ஆட்டி வைப்பது யார் ?

மார்க்கம் போதிப்பவர்கள் மார்க்கப் படிப்பும் போதும் என்கிரார்களே ! அப்படி படித்தாலும் பள்ளிப் படிப்போடு நிறுத்தி விட வேண்டும் என்று அழுத்தமாக சொல்கின்றார்களே அதுவும் ஆண்களோடு சேர்ந்து படிக்க கூடாது என்றும் கட்டாயப்படுத்துகிரார்களே!

" சீனா தேசம் சென்றாயினும்  கல்வியை கற்றுக்கொள்" நபிகள் நாயகம் ஆண்களுக்கு மட்டுமா சொன்னார்கள் ?

Wednesday, September 12, 2012

பேசாமல் இருந்தால் நாம் நம் நிலை அறியோம்!


இறைவன் மானிடருக்கு கொடுத்த தனிப் பெரும் கருணை பேசுவதும் மற்றும் சிந்திப்பதும் .

ஒலி எழுப்புவத்தின்   வழியாக மற்ற இனங்களும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன.ஆனால் அவைகளுக்கு நம்மைப்  போல் சிறப்பான பேசும் ஆற்றலும்,  சிந்திக்கும்    திறனும்  கிடையாது .
நாம்  பேசுவதால்  நன்மையும்  தீமையும்  விளைகின்றது. அதனால் நாம் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும்.
சிலர் மௌனமாக இருப்பதையே விரும்புவார்கள் . இறைவன் தந்த பேசும் ஆற்றலையும் மற்றும் சிந்திக்கும் திறனையும் முறையாக பயன்படுத்த வேண்டியது நம் கடமை

உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்!
 "நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்."
-திருக்குர்ஆன் 2:42

Wednesday, May 9, 2012

பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...!

  அச்சம் ,மடம், நாணம் ,பயிர்ப்பு  இவை பெண்களுக்கு மட்டும் தேவையா! 
   தவறு செய்வதற்கு அச்சம் இருப்பதுதானே முறை. நாணப் படுவதற்கு நாணப்படுவதுதானே உயர்வு "அஞ்சுவது  அஞ்சாமை  பேதமை" .இது ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியம் தேவை . வீரம் நிறைந்தவனாக ஆண் மட்டும் இருந்தால் போதுமா! தனக்கு வரும் ஆபத்தினை எதிர்கொள்ள ஒரு பெண்ணுக்கும் அவசியம் தேவை . குணங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சில வேறுபாடுகள் இருந்தாலும் இக்காலத்தில் பலவகையான குணங்களை ஆணும் பெண்ணும் அவசியம் பெற்றுக்கொள்ள தேவைப்  படுகின்றது. அனைத்துக்கும்  மேலாக நல்ல காரியங்களுக்காக ஆணும் பெண்ணும் அனுசரித்து போகும் நிலை அவசியம் தேவைப் படுகின்றது . ஆணின் காலில் விழும் பெண்ணின் குணமும் பெண்ணின் காலில் விழும் ஆணின் குணமும் அவசியம் அழிக்கப் படவேண்டும். சுமரியாதையை வளர்த்து இறைவன் ஒருவனுக்கே  அடிபணிவேன் என்ற மனப்பக்குவம் வந்தே ஆக வேண்டும். உனது உரிமை எனது உரிமையை பாதிக்கக் கூடாது என்பது பொதுவான சிந்தாந்தம். வாழ்வோம் வாழ விடுவோம் இதுதான் நம் கொள்கையாக மாற வேண்டும்  

 பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால் அந்த சட்டங்கள் எந்த  முன் அறிவிப்பும் இல்லாமல்   மாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  பெண்கள் ஒருபோதும் தவறுகள் செய்ய மாட்டார்கள் அப்படியே அவர்கள் தவறு செய்ய நேர்ந்தால் அது ஆண்களால் தூண்டப்  பட்டவைகளாகவே  இருக்க முடியும். பெண்கள் மனது சபலம் வாய்ந்தது மாற்றம் நாடுவது. ஆண்கள் மனது நிலை கொண்டது விரும்பியதை  அடைய எந்த வழியும் கையாளும் குணம் கொண்டது

Friday, August 19, 2011

ஆண்களின் தியாக வாழ்வினை அறிய ஆவல் அடையுங்கள்...





இதனைப்  படிக்க சிறுது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் .... ஆண்கள் பற்றி ஏதாவது அறிந்துதான் ஆக வேண்டும்.
  நான் சமீபத்திய கடந்த காலத்தில் அம்மாக்கள்,மனைவிகள் மற்றும் பெண்கள் பற்றி அஞ்சல்கள்,செய்தித் தாள்கள், ஊடகங்கள்  மற்றும் பலவற்றில் சுற்றி திரிகின்ற .நிகழ்வுகளை படித்திருக்கிறேன்.

இப்போது ஆண்கள் பற்றி ஏதாவது அறிய அவசியம்   வந்துவிட்டது!
யார் ஒரு பையன் / மனிதன்?
ஒரு பையன் / மனிதன் இறைவனின் அருமையான படைப்புகளில் ஒன்றாக  இருக்கிறான்.

 அவர் மிக இளம் வயதில் தனக்கு கிடைத்த சாக்லேட்டை தனது சகோதரிக்காக கொடுத்து விடுகிறான். இளம் வயதிலேயே அவனது சமரசமும் தியாகமும் தொடங்குகிறது.





அவர் தனது பெற்றோர் முகத்தில் ஒரு புன்னகை தவழ  தனது காதலை தியாகம் செய்ய வேண்டிய நிலை    அவர் தாமதமாக இரவு நேரத்திலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தால்  தனது மனையிடன் மற்றும் குழந்தைகள்  மீது காட்டும் பாசத்தினையும்  தியாகம் செய்கின்றார்.

அவர் வங்கிகளில் இருந்து கடன்கள் எடுத்து பின்னர் வாழ்க்கை முழுதும்  முறையாக கடனை அடைப்பதில், தனது எதிர்கால நல்ல குடும்பம் உருவாக்குவதில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக் தனது இளமை காலத்தை தியாகம் செய்கின்றார்.

 







  

  


 இவ்வளவு  நிறைய போராட்டங்களை சந்தித்தும்  இன்னமும் அம்மா, மனைவி மற்றும் அவருடைய முதலாளியின் கிண்டல் மற்றும் வசைபாடும் இசை (திட்டும் ) கேட்க வேண்டிய நிலை.  இன்னும் ஒவ்வொரு அம்மா, மனைவி மற்றும் முதலாளி அவரை கட்டுப்படுத்தவே   முயற்சிக்கின்றனர்
 




இறுதியாக அவரது வாழ்க்கை மகிழ்வான காலங்கள் மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பதில் சமரசம் மூலம் முடிவடைகிறது.  இறைவன் அவருக்கு கொடுத்த இந்த தியாக வாழ்வினை யார்தான் போட்டியிட முடியும்!



உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு பையன் / மனிதன் மீதும்  உங்கள் மதிப்பு உயர்வாகவே இருக்கட்டும்.
அவர்கள் நமக்காக செய்த  தியாகங்களை நாம் எப்பொழுதும் அறிந்து அறிந்துக் கொள்ளாமல் இருந்து விடுகிறோம் !






அவர் மீது உங்கள் அன்பை மழைபோல் கொட்டி அவருக்கு பன் மடங்கு உற்சாகத்தினை கொடுங்கள். இது அவருக்கு மிகவும் தேவையானது .அதன் பலனால் அவர் உழைப்பும் உயர்ந்து மனமும் மகிழ்ந்து வாழ்வும் கூடும்.   

 அஞ்சல் வழி  தகவல் தந்தவர்:காமாட்சி நாராயன்     

Friday, December 17, 2010

சரியான போட்டி! ஆண்களே இனியும் ஏமாந்து விடாதீர்கள் !

போட்டி போட்டு ஆண்கள் ஏமாந்துவிட்டார்கள் !
மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை, பேச்சு போட்டி பெண்கள் முன்னிலை .
பாவம் காதலில் ஆண் ரொம்ப ஏமாந்துவிட்டார்
தீர்மானிக்கும் முடிவு கை நழுவி பெண்கள் கை ஓங்கி நிற்கின்றது ,
குடியால் ஆண்கள் எண்ணிக்கை அதிகம் .இனி இனாம் சாராயமும் கிடைக்க அரசாங்கம் வழி செய்ய தேர்தல் வாக்குறுதி வரலாம் . அதற்கும் பெண்கள் போட்டி போடலாம் . வளர்ந்த பட்டினத்தில் ஒரு சில பெண்கள் பீர் குடிப்பதனை இப்பொழுது காண முடிகின்றது .
ஒன்றும் பிரச்சனை இல்லைதான் ஆனால், நாம் தான் கொஞ்சம் ஏமாந்து விட்டோம்  ..... ஆண்களின் முடிவே இறுதி முடிவாக இல்லாமல் போய்விட்டதனால் .
முக்கியமாக வரதட்சிணைக் கொடுமை வழியே பல ஆண்கள் தனது குரலுக்கு பெண் செவி சாய்க்கும் என்று நம்பி ஏமாந்துவிட்டார்கள். 
வரதட்சிணைக் கேட்க தூண்டுவது யார் ? "எனக்கு  வரதட்சிணை வாங்கித்தானே நீங்கள் திருமணம் செய்தீர்கள் அதனை என் மகனுக்கு கேட்கின்றேன் மகளுக்கும் வரதட்சிணை கொடுத்ததனை எப்படி  சரி செய்வது நான் ஒன்றும்  ஏமாளி அல்ல" என்று துண்டும்பொழுது சரி போட்டது யார் ?
 
நிறைய மதிப்பெண்கள் பெற்று ...கல்வியில் வேலை வாய்ப்பில் பெண்களுக்கு முதல் இடம் .  பெண் வேலைக்குப் போகக்கூடாது என்று விரும்பிய காலம் இப்போது வெகுவாகக் குறைந்து வருகிறது.
படித்த பெண்ணையே திருமணம் செய்ய ஒரு படித்த மணமகன் விரும்புவான் என்ற காலம் போய் படித்த ஆணையே ஒரு பெண் விரும்பும்  காலம் வந்து மணப்பெண் கிடைக்காமல் அலையும் நிலையாக மாறிவிட்டது . எந்த நாடு சென்றாலும் என்னை உடன் அழைத்து செல்லும் மணமகன்தான் வேண்டும் என்ற காலம் வந்துவிட்டது.
மார்க்கம் போதிக்கும் வித்தகர் "அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு" "மார்க்க கல்வி போதும்" "சமைக்க தெரிந்தால் சரி"    மேல் படிப்பு கல்லூரி சென்று  படிக்க வேண்டாம் என்று சொன்ன காலம் போய் அவர்கள் வீட்டில் அனைவரும் இன்ஜினியரிங்  கல்லூரி மாணவியாக மாறி  நல்ல மதிப்பெண்கள்  வாங்கி வேலைக்கு செல்கின்றனர் .
ஆண்களுக்கு வேலை கிடைக்காமல் ஏமாற்றம்.
பாவம் ! ஆண்களே இனியும் ஏமாந்து விடாதீர்கள் !