Saturday, December 1, 2012

கவரும் ஹாங்காங்-Catching Hong Kong.


வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் நாடுகளின் பட்டியலில்  ஹாங்காங் உள்ளது.  உலகின் மிக முக்கியமான நிதி  மையங்களில்  ஹாங்காங் ஒன்றாகும். இரவு நேரத்தில் வண்ணமயமான ஒளி விளக்குகளால் அழகை அள்ளித் தந்து  கவரும் ஹாங்காங் சுற்றுலா பயணிகளின் மனதில் நிலைத்த இடம் பிடித்துவிடும் .உலகில் சிறந்த, தொடர்ந்து  வளர்ச்சியடையும் நாடுகளில்  ஹாங்காங் முக்கிய இடம் வகிக்கின்றது . பிரிட்டன் நாடால் குத்தகைக்கு ஆட்சி செய்யப் பட்டிருந்த நாடு திரும்பவும் சீன நாட்டிற்குள் இணைந்து விட்டாலும் சீனா ஹாங்காங்கிற்கு ஓரளவு தன்னாட்சி அதிகாரத்தை தந்துள்ளது .1984 இல் சீனாவும் பிரிட்டனும்  ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் படி 1997 ஜுலை 1 முதல் ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது . ஒப்பந்தப்படி  1997 ஆம் ஆண்டில் இருந்து 2047ஆம் வரை  முதலாளித்துவ கொள்கை நடைமுறையில் இருக்கும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சீன மொழியோடு ஆங்கிலமும் அந்நாட்டு மக்களுக்கு தெரிந்த மொழியாக உள்ளது. உலகில் மக்கள் நெருக்கமான  இடங்களில் ஹாங்காங்கும் ஒன்றாகும்.  பார்க்கும் இடங்களெல்லாம் வானுயர் கட்டிடங்கள் .  பொருளாதார வளர்ச்சியிலும், நாகரீக உச்சத்திலும் முன்னிலை வகிக்கும் நாடு ஹாங்காங்.  இதனை "ஆசியாவின் நகரம்" என்றும் அடைமொழி கொடுத்து அழைகின்றனர்.

 ஹாங்காங் சீனாவின் மகுடமாக திகழ்கின்றது . 90 % சீன மக்கள் நிறைந்த ஹாங்காங்கில்  " திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற மனதோடு  இந்தியர்கள் பிரிட்டன் ஆட்சி காலத்தில் அதிகமாக ஹாங்காங்கில் சென்று தங்குவதற்கு உள்ள வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டார்கள் .பலர்  குடி  உரிமைப் பெற்றும் வாழ்கின்றார்கள் .

ஹாங்காங் ஏர்போர்ட் ரொம்ப அழகு.. இரு பக்கமும் மலையும், கடலும் சூழ்ந்த அழகான லேண்ட்ஸ்கேப்.. ரொம்ப சுத்தம்...



(ஹாங்காங்
21.10. 1970.
நேரம் பகல்  12.30
அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு தம்பி முகம்மது அலி எழுதுவது.
அஸ்ஸலாமு அலைக்கும் . இறைவன் அருளால் நலமே சைகோனிலிருந்து சனி மாலை ஐந்து மணிக்கு கேத்தே பசிபிக் விமானத்தில் பறப்பட்டு ஒன்பது மணிக்கு ஹாங்காங் வந்து சேர்ந்தேன். விமானப்  பயணம் மிகவும் மகிழச்சியைத் தரக் கூ டியது என்பது உண்மையாயினும்  அது பயங்கரமானது என்பதனையும் இப் பிரயாணத்தில் அனுபவத்தில் அறிந்துக் கொண்டேன்
 பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி-2)













  நம்  தமிழ்நாட்டு மக்கள் அங்கு அதிகமாக இருப்பதைக் காணலாம் .அவர்கள் வைர மற்றும் உயர் ரக மாணிக்கக் கற்கள் வியாபாரம் செய்தும் வருகின்றனர்  அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களில் காயல்பட்டினம் ,கீழக்கரை  நீடூர் சார்ந்தவர்களும் அதிகமாக உள்ளார்கள் . சுற்றுலா வரும் மக்களுக்கு உணவு கிடைப்பதற்காக  மக்கள் அருமையான தமிழ் நாட்டு உணவுக் கிடைக்க குறிப்பாக நீடூரைச் சார்ந்தவர்கள்  முதன் முதலில்  உணவகம்  ஆரம்பித்தார்கள் .

1 comment:

சேக்கனா M. நிஜாம் said...

பயனாளிகளுக்கு பயன்தரும் தகவல்கள் !

தொடர வாழ்த்துகள்...