Saturday, October 9, 2010

அன்பே வா = பாசம் அன்பு நேசம்


கண்களுக்கு ஒளி எப்படி அவசியமோ, சுவாசப்பைக்கு காற்று எப்படி தேவையாக இருக்கிறதோ, இதயத்துக்கு அன்பு எப்படி வேண்டப்படுகிறதோ அது போன்று தான் மனித நேயத்துக்கு உரிமை இன்றியமையாததாக இருக்கிறது.
பிறர் உரிமையைப் பறிப்பது எவ்வாறு குற்றமோ அவ்வாறே நம் உரிமை பறிபோவதைப் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பதும் குற்றமாகும். அதனால்தான் "Your Liberty ends, where my nose begins" என்று ஆங்கிலத்திலே ஒரு பொன்மொழியைச் சொல்வார். ஒரு குச்சியைக் கொண்டு நீ எப்படி வேண்டுமானாலும் சுழற்றும் உரிமை உனக்கு உண்டு. ஆனால் அது என் மூக்கின் மேல் பட்டுவிடக்கூடாது என்பது தான் அதன் பொருள்.
ஒரு சமுதாயத்தின் வலிமை உடையவர்களிடமிருந்து தயக்கமின்றி உரிமை கிடைக்க வேண்டும் என்பதனால்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சபைகளிலோ அல்லது கடைத்தெருவிலோ உங்களில் எவரும் தம்கையில் ஈட்டியுடன் நடந்து சென்றால் அதன் நுனி மற்றவரின் மீது குத்திவிடாமல் இருக்கும் பொருட்டு அதனை கையில் பிடித்துக் கொள்ளவும் என்று சொன்னார்கள். இந்த நபி மொழியை அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரே சமூகம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே கலாச்சாரம் போன்ற ஒற்றைச் சிந்தனை மனித உரிமைக்கு எதிரானது. ஒற்றைத் தன்மை மனித உரிமையை சிதைக்கும் வேற்றுமையில் ஒற்றுமை எனும் பன்முகத்தன்மை மனித உரிமையை வளர்க்கும்.


மனித உரிமையை காப்பதற்கும் மனித நேயத்தை வளர்ப்பதற்கும்
1. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 (பழைய சட்ட எண்.10/1994)
2.தேசிய மனித உரிமைகள் பொறுப்பாணைக்குழு (நடைமுறை) அதிகாரக் கட்டளைகள் -1994, 3. மாநில மனித உரிமைகள் பொறுப்பாண்மைக் குழு - தமிழ்நாடு - (நடைமுறை) அதிகாரக் கட்டளைகள் - 1997,
4. Universal Declaration of Human Rights - 1948.5. Basic Internation Human Rights Instruments. ஆகியவை அரசாங்கத்தில் இயற்றப்பட்டன.படி வேண்டப்படுகிறதோ அது போன்று தான் மனித நேயத்துக்கு உரிமை இன்றியமையாததாக இருக்கிறது.
பிறர் உரிமையைப் பறிப்பது எவ்வாறு குற்றமோ அவ்வாறே நம் உரிமை பறிபோவதைப் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பதும் குற்றமாகும்.  "Your Liberty ends, where my nose begins"

நட்பு என்பதெல்லாமே ஒரு வகையான காதல்கள்தான். உள்ளங்களுக்கு இடையில் உருவாகும் ஈடுபாடுஅன்பு, இரக்கம், பாசம், விருப்பம், ஆர்வம், உற்சாக, மகிழ்ச்சி, கவலை, கோபம், வெறுப்பு, பயம், - போன்றவை நமது உள்ளத்தில் இயல்பாய் எழுகின்ற உணர்வுகள் ஆகும்.
நமது உணர்வுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அவசியமும் ஒரு மதிப்பும் இருக்கிறது. சான்றாக - கோப உணர்வு - தீமைகளை எதிர்த்துப் போராட மனிதனுக்கு அவசியம். இரக்க உணர்வு - ஏழைகளுக்கு உதவிட மனிதனைத் தூண்டுகிறது. உணர்வுகளே அற்ற வாழ்க்கை - உயிரோட்டமுள்ள வாழ்க்கையாக இருக்க முடியாது.

அன்பு (முஹப்பத்), நேசம் (மவத்தத்) போன்ற சொற்கள் திருக் குர் ஆனில் பல தடவைகள் பயன் படுத்தப் பட்டுள்ளன. இறைவனே கருணையாளனாகவும் (ரஹ்மான்), அன்புள்ளவனாகவும் (ரஹீம்) தான் இருக்கின்றான்.
எனவே அறிவும் உணர்வும் - இஸ்லாத்தில் எப்படி கை கோர்த்துச் செயல் படுகின்றன

 Please click : Listening To The Wise
Rose Flower



பாசம் அன்பு நேசம் தான் காதல்

முன்பே வா என் அன்பே வா
ஊட வா உயிரே வா முன்பே வா
என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வா
ஊட வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூ பூவாய் பூப்போம் வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவ கைகள் வாழி வளையல் சத்தம்
ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவ கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மன பூ வைத்து பூ வைத்த
பூவைக்குள் தீ வைத்தாய் ஓ...

நீ நீ நீ மழையில் ஆட
நான் நான் நான் நனைந்தே வாட
என் ஆழத்தில் உன் ரத்தம்
ஆடைக்குள் உன் சத்தம் உயிரே ஒகோஓ

வாழும் ஒரு சில நாளும்
கனி என ஆனால் தருவேன் என்னை
முன்பே வா என் அன்பே வா
ஊட வா உயிரே வா
நான் நானா கேட்டேன் என்னை நானே

நான் நானா கேட்டேன் என்னை நானே

முன்பே வா என் அன்பே வா
பூ பூவாய் பூப்போம் வா

நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா
நாம் வாழும் வீட்டுக்குள் வேராரும் வந்தாலே
தகுமாஆஆ

தேன்மலை தேக்குக்கு நீதான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல் வேராரும் சாய்ந்தாலே
தகுமா...

நீரும் செங்குள சேறும்
கலந்தது போலே கலந்தவலா

முன்பே வா என் அன்பே வா ஊட வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா

நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே முன்புதான்

முன்பே வா என் அன்பே வா ஊட வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவ கைகள் வாழி வளையல் சத்தம்
ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவ கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவ கைகள் வாழி வளையல் சத்தம்
ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவ கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

No comments: