Sunday, October 10, 2010

பழம் பார்கலையோ பழம்! பார்த்து மகிழுங்கள்.

ஆரோய்கியமான  அழகிய   பழங்கள் பார்பதர்கும் அழகு, மனதிற்கும் இனிமை.
பழம்புதிய பழமாக இருக்க வேண்டும். உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நேரடியாக தரக்கூடியவை பழங்கள் மட்டுமே.
 சில பழங்கள் பனி வெண்மையாகவும், சில மஞ்சள் நிறமாகவும், சில சிவப்பாகவும் ... பழம் இனிப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
பொதுவாக இயற்கை பானங்களை விரும்புவோர் அனைவருமே பழச்சாறுகளை (ஜூஸ்) அதிகம் விரும்பி அருந்துவார்கள்.
பார்த்து மகிழுங்கள்.


















































தொப்பை குறைக்க அன்னாசி

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம்

புதிய பழமாக இருக்க வேண்டும்.பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,
ஆரஞ்சு பழம்  பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம் எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடக்கூடிய பழம்  ஆரஞ்சுப் பழம்   இது உடலுக்கு புத்துணர்ச்சியையும், வலுவையும் தருகிறது 
மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் நமது ரத்தம் அதிகரித்து, உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். மாம்பழம் அதிகம் சாப்பிட்டாலோ உடல் சூடு அதிகமாகும். தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு வாழைபழம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.

எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன், அவர்களுக்கு தினசரி ஒரு செவ்வாழை பழம் கொடுத்து வந்தால் கண்பார்வை தெளிவடைய ஆரம்பிக்கும். கோடை காலம் அடிக்கடி வயிற்றுபோக்கையும் உண்டாக்கும். ரஸ்தாளி வாழை பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து முன்று வேளை கொடுத்தால் வயிற்று போக்கு நின்று விடும்.

கொய்யாபழத்தை குழந்தைகள் அடிக்கடி சாப்பிட வேண்டும். இதில் சி உயிர்ச்சத்து அதிகம். வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் சி, எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கிறது. தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். எப்போதும் கிடைக்கக் கூடிய பழம் பப்பாளி. இதில் வைட்டமின் ஏ நிறைய உள்ளதால் பல் சம்பந்தமான குறைபாடு நீங்கும். சிறுநீர் பையில் உண்டாகும் கல்லை கரைக்கும்.
சீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சைபழம்  .
 எலுமிச்சம் பழம்  ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். 
கோடைக்கேற்றது மாதுளம் பழம்
பொதுவாக பழங்கள் எல்லாம் விட்டமின்கள் நிறைந்தவை . ... சாப்பாட்டுக்கு பின் ஒரு பழம் சாப்பிடுங்கோ என்கிறார்கள்
தொடரும்.......

2 comments:

எஸ்.கே said...

அருமையான பதிவு! மிக அருமை!

Ungal Blog said...

எல்லா பழங்களும் பார்பதற்கு கண்னுக்கு மிக்க குளிர்ச்சியாக இருந்தது. பதிவுக்கு நன்றி