என்னைப்பற்றி… என் நண்பர்
ஹசேனீ மறைகான்Hassane Marecan
'எங்களுக்குச் சலிப்பேற்பட்டு விடக் கூடும் என்று அஞ்சிப் பல்வேறு நாள்களிலும் கவனித்து எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள்" என இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
அனஸ்(ரலி) அறிவித்தார்.
யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6953
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களே! எண்ணத்தைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். தாம் அடைய விரும்பும் உலக(ஆதாய)த்திற்காக, அல்லது தாம் மணக்க விரும்பும் பெண்ணுக்காக ஹிஜ்ரத் செய்கிறவருடைய ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும். இதை உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் சொற்பொழிவாற்றும் போது அறிவித்தார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6963
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்தி விடுவதற்காக ஏலம் மற்றும் பிற பேரங்களின் போது) விலையை அதிகமாகக் கேட்பதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6981
அம்ர் இப்னு ஷரீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அபூ ராஃபிஉ(ரலி) அவர்களிடம் ஸஅத் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் ஒரு வீட்டை நானுறு பொற்காசுகளுக்கு விலை பேசினார்கள். (வீட்டின் உரிமையாளர்) அபூ ராஃபிஉ(ரலி) அவர்கள் ‘அண்மையில் இருப்பதால் அண்டை வீட்டாரே அதிக உரிமை படைத்தவராவார்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றிரா விட்டால் உங்களுக்கு நான் (இந்த வீட்டை) வழங்கியிருக்க மாட்டேன் என்றார்கள்.
1 comment:
"JUST WONDERFUL"
Post a Comment