Monday, October 18, 2010

தாவூத்ஷா

 தாவூத் ஷா

சமயச் சீர்திருத்தம்

   தாவூத்ஷா ஷாவைப் பொருத்தவரை அரசியலுக்கு இரண்டாம் இடந்தான்.  காலத்தின் கட்டாயத்தால் அரசியலில் கலந்து கொண்டார்.
  
அவரது முதல் நோக்கம், முழு உழைப்பு, சமுதாயச் சீர்திருத்தம் தான்.  இஸ்லாமிய சமயத்தைச் சீர்திருத்த வேண்டும், முஸ்லிம் சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டும் என்பதே தாவூத்ஷாவின் உயிர் மூச்சாக இருந்தன.  அவரது பேச்சும், எழுத்தும் சமுதாயச் சீர்திருத்தமும், சமயச் சீர்திருத்தமே ஆகும்.
    சுப் மாஜிஸ்திரேட்டாக இருந்த காலத்திலேயே அவர் சமயப் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.  வெளிய+ர்களுக்குச் சென்று, சமயச் சொற்பொழிவுகள் ஆற்றினார்.
    இதில் என்ன ஆச்சரியம் என்றால், அவர் கம்ப இராமாயண கதாகலட்சேமும் செய்தார்.  கல்லூரியில் படிக்கும் நாளிலேயே அவருக்குக் கம்ப இராமாயணத்தில் நல்ல புலமை இருந்தது.  அவர் சப் மாஜிஸ்திரேட்டாக இருந்த போது, ஒரு நாள் இரவு வேலை முடித்து, தன்னுடைய பணியாட்களுடன் அவர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.  வழியில் ஒரு தெருவில் அவரை “வாங்கோ…வாங்கோ…” என்று வரவேற்று, மேடை ஏற்றினார்கள்.

    அந்தத் தெருவில் சீதா கல்யாணம் கதாகாலட்சேபம் நடப்பதாக இருந்தது.  ஆனால், காலட்சேபம் செய்ய வேண்டிய பாகவதர் வரவில்லை.  இவர் தான் பாகவதர் என்று நினைத்து, இவரை வரவேற்று மேடை ஏற்றி விட்டார்கள்.
    நிலைமையைப் புரிந்து கொண்ட தாவூத்ஷா, அன்று விடிய விடிய “சீதா கல்யாணம்” காலட்சேபம் செய்தார்! நிறையப் பாடல்கள் கூறி விளக்கம் சொல்லி, துணைக் கதைகள் பேசி எல்லோரையும் அசத்திவிட்டார்!
    பிறகு தான் இவர் சப்-மாஜிஸ்திரேட்டு, சாயபு என்பது தெரிந்தது.  கூட்டத்தினர் இவரது புலமையைப் பாராட்டினார்கள்.  “கம்ப இராமாயண சாயபு” என்று பட்டம் கொடுத்தார்கள்.
    அது முதல் தாவூத்ஷாஷா கம்ப இராமாயணச் சொற் பொழிவும் செய்தார்! இஸ்லாமிய சமயப் பிரசாரமும் செய்தார்! யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்ல் இந்த சமய ஒற்றுமையை இனிய மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள்.


- அ. அய்யூப்

1 comment:

Anisha Yunus said...

இப்படியும் சில மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது ரசிப்புக்குரியது. எதிலெல்லாம் மதக்கலவரம் உண்டாக்கலாம் அவன் பேசியதன் அர்த்தத்தை எப்படி திரிப்பது, இவன் பேசியதை வைத்து கோஷ்டிப்பூசல் எப்படி உருவாக்குவது என்றே பல மத குருக்களும், அரசியல்வாதிகளும் சிந்தித்து வரும் வேளையில் இப்படி ஒருவரை பற்றி படிப்பது மனதுக்குன் தெம்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி நீடூர் அலி பாய்.