Saturday, October 30, 2010

க்ராஃபிக்ஸ் பயிற்சி - பாடம் 3

ஹலோ அன்பர்களே!
முந்தைய பாடத்தில் இடைமுகம் (Interface) பகுதியில் Tabbed Window குறித்து கண்டோம். இப்பாடத்தில் ஃபோட்டோஷாப் கருவிகள்(Tools) குறித்துப் பார்க்க இருக்கிறோம்.

ஃபோட்டோஷாப் அப்ளிகேஷனைத் திறந்ததும் இடப்பக்கத்தில் காணும் பகுதியே (முன்னரே நாம் தெரிந்து வைத்துள்ளபடி) Tool Box. ஒருவேளை அது தவறுதலாக நீக்கப்பட்டிருந்து நம் கண்ணில் தென்படாவிட்டால் Menu Bar -> Window -> Tools என்பதை Click செய்து கொண்டு வந்துவிடலாம்.

இப்போது தெரியும் Tool Box ல் மேலே இரட்டை அம்புக்குறி தெரியும் அதை க்ளிக்கும்போது Single Row Pallet ஆக இருந்த டூல்ஸ் இரண்டு Row வாக மாறும். மேலும் Tool Box ஐ வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகவோ, அல்லது மேலே கீழே என எந்த பகுதியிலும் நம்முடைய வசதிக்கேற்ப நாம் அதை நீக்கி வைத்துக்கொள்ளலாம். எங்கு வைத்திருந்தாலும் அதன் பயன்பாட்டில் எந்த நிறையோ குறையோ ஏற்படப்போவதில்லை. இது நம்முடைய வசதிக்காக மாற்றிக்கொள்வதற்கு மட்டுமே!

Tool Box ல் காண்பிக்கப்பட்டுள்ள Tool மட்டுமின்றி உபரியான - தொடர்புடைய பல Tool கள் அதே பகுதியில் மறைந்துள்ளது. (படம் 3_001 காண்க). அதாவது குறிப்பிட்ட சில கருவிளின் கீழ் - வலப்பக்கத்தில் சிறிய அளவிலானதொரு அம்புக்குறி (முக்கோணம்) இருக்கும். அதை க்ளிக் செய்தால் மேலதிக Tool கள் திறக்கும். தேவையான Tool களை அவ்வப்போது நாம் உபயோகம் செய்யலாம்.

Tool Options


குறிப்பிட்ட ஒவ்வொரு கருவிகளையும் நாம் தேர்வு செய்யும்போது அந்தந்த Tool களுக்குத் தேவையான மேலதிக ஆப்ஷன்கள் உண்டு. எந்த Tool க்கு எந்த ஆப்ஷன்கள் தேவையோ அவற்றை இயன்றவரை இலகுவாக உருவாக்கி நமக்கு எளிய வழியைத் தருவதே Adobe யின் இன்னொரு முக்கிய அம்சம்.

அந்த Option (Bar), Menu bar க்கு கீழே திறக்கும். ஒவ்வொரு Tool களாக செலக்ட் செய்து பாருங்கள். ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான Option களை அது வழங்கும்.


உதாரணமாக, T எனக் காணும் Type Tool ஐ க்ளிக் செய்யுங்கள். (மேலுள்ள ம் காண்க). அதாவது படத்தில் மஞ்சள் நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ள Tool ஐ முதலில் க்ளிக் செய்த பின்னர் Menu Bar க்கு கீழே தோன்றும் Option Bar ல்...

* பச்சை நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ள Icon ஐ செலக்ட் செய்வதன் மூலம் எழுத்துக்களை இடமிருந்து வலமாக எழுதுவது மட்டுமின்றி மேலிருந்து கீழாகவும் எழுதலாம். (மேலிருந்து கீழே எழுதுவதற்காக ஒவ்வொரு எழுத்தைத் தொடர்ந்து Enter உபயோகிப்பதுண்டு. குறிப்பிட்ட இந்த வசதியின்மூலம் நூற்றுக்கணக்கான எழுத்துக்களை மிக எளிதில் குறைந்த நேரத்தில் நாம் கம்போஸ் செய்துவிடலாம்.

* வெளிர் நீலத்தில் காண்பிக்கப்பட்டுள்ள பகுதி (font) எழுத்துருவுக்கு எந்த தேவை என்பதை (டைப் செய்யும் முன்பும் பின்னரும்) நாம் தீர்மானிக்கலாம்.

* நீல நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ள பகுதியில் Type Style ஐ தீர்மானிக்கலாம்.

* பிங்க் நிறத்திலுள்ள அளவைகளைக்கொண்டு சிறியது பெரியது என நமக்குத்தேவையான அளவில் எழுத்துக்களை மாற்றிக்கொள்ளலாம். சிகப்பு நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ள மூலமாக எழுத்தின் தன்மையை மாற்றியமைக்கலாம். அதாவது Sharp/Crisp/Strong/Smooth என விதவிதமாக மாற்றி அமைக்கலாம்.

* ப்ரவுன் நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது வழக்கமான Alignment க்கு தேவையான Options ஆகும்.

* ஆரஞ்சு நிறத்திலுள்ள பகுதியில் எழுத்தின் நிறத்தைத் தீர்மானிக்கலாம்.

* அதற்கு அடுத்தாற்போல் காணும் பகுதியைத் தேர்வு செய்து எழுத்துகளை எந்த வடிவத்தில் அமைக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம்.

* இவை அனைத்தும் எழுத்தை கையாள்வதற்குத் தேவையான ஆப்சன்களாகும். இன்னும் கூடுதலாக எதுவும் தேவைப்படும் எனில் வலப்பக்கம் சிகப்பு நிறத்தில் வட்டையாக மார்க் செய்யப்பட்டுள்ள ஐகானை க்ளிக் செய்யவும். நேரடியாக ஆப்சனுக்குக் கொண்டு சென்றுவிடும். அதில் இன்னும் சில மாற்றங்களை நாம் உருவாக்கமுடியும்.

மேற்கண்ட குறிப்புகள் Type Tool ஐ ப்பற்றிய பாடம் அல்ல. ஒரு Tool ஐ திறந்து அதற்குத் தேவையான உபரி Option களை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் ஆகும். உதாரணத்திற்காக மட்டும் Type Tool ஐ சற்று விவரித்தேன்.

Tool களுக்கு Option களை தேர்வு செய்து உபயோகிக்கும்போது ஒரு சில இடங்களில் நாம் செட் செய்துள்ள அளவீடுகள் அப்படியே நிலைத்திருக்கும். சில நேரங்களில் அவசர அவசரமாக நாம் வேலை செய்யும்போது அந்த ப்ரீ செட்(Preset ) நமக்கு இடைஞ்சலாக இருக்கும். எந்தெந்த பகுதியில் எந்தெந்த மாற்றம் (ப்ரீ செட்) செய்து வைத்துள்ளோம் என்பது நினைவில் இருக்காது. எனவே அவற்றை ஒரேயடியாக க்ளியர் செய்யும் வண்ணம் அடோப் நல்லதொரு வசதியைத் தந்துள்ளது. கீழ்க்கண்ட படத்தில் காண்பித்தபடி....
Crop Tool ஐ தேர்வு செய்யவும். படத்தை Crop செய்வதற்கு அதாவது குறிப்பிட்ட காட்சி(பகுதி)யை மட்டும் தேர்வு செய்து மீதமுள்ளவற்றை கட் பண்ணிவிடுவதற்கான Tool ஆகும். எந்த பகுதியிலிருந்து எந்த பகுதிவரை தேவை என்பதை நாமாகவே Crop செய்து கொள்ளலாம். அளவுகளில் வித்தியாசம் இருக்கும். நமக்கு காட்சிதான் முக்கியம் அளவு ஒரு பிரச்சனை இல்லை என்று வரும்போது இந்த முறையைப் பின்பற்றலாம். கீழ்க்கண்ட பார்வையிடவும்....

குறிப்பிட்ட அளவில்தான் வேண்டும் எனில் பின்வருமாறு (கீழ்க்கண்ட படத்தில் காண்பித்தபடி....) நாம் Setting செய்யவேண்டும்.

அதாவது Option Bar ல் Width க்கு 6 cm (சென்டி மீட்டர்) என்றும் Height க்கு 4 cm என்றும் அளவுகளை கொடுத்து படத்தின் ஒரு பகுதியில் க்ளிக்செய்தால் கிடைக்கும் செலக்ஷன் பாக்ஸை தேவையான இடத்தில் க்ளிக் செய்து நகர்த்தி Enter தட்டினால் குறிப்பிட்ட இடம் தவிர மீதி உள்ளவைகள் மாயமாகிவிடும். எனவே 6x4 cm ஐ விட சிறிய படத்தில் 6x4 cm அளவை தேர்வு செய்து கட் பண்ண நினைத்தால் குருவி தலையில் பனங்காயை வைப்பது போன்றாகிவிடும்.
இங்கே நம்முடைய பாடம் இதற்காக Preset செய்த 6x4 சென்டி மீட்டர் மற்றும் இதுபோன்றவைகளை ஒரேயடியாக ரீசெட் செய்வது பற்றியதாகும்.

கீழே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள பகுதியைச் செய்தால் Reset Tool மற்றும் Reset All Tools என இரண்டில் எது தேவையோ அதை க்ளிக் செய்துவிட்டால் மேட்டர் ஃபினிஷ்.இத்தனை Tools & Option களா என ஆரம்பத்திலேயே அசந்து போகவேண்டாம். எத்தனை Tools மற்றும் அதன் Options என எண்ணிக்கை அதிகமாவதை வைத்து அரண்டுவிடத் தேவை இல்லை. எவ்வளவு Tools & Options அதிகமாக உள்ளதோ அவ்வளவு எளிதில் வேலை செய்யமுடியும் என்று புரிந்து கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு அசைவுகளுக்கும் ஒரு படம் என உங்கள் தலையில் பாரம் ஏற்றுவது போரடிக்கும். ஆகவே இயன்றவரை செலக்ட் செய்து குறைந்த படங்களே உதாரணத்துக்குக் கொடுத்துள்ளேன்.

நில்லுங்கள்! மேலே படித்துக் கொண்டே போகாதீர்கள்! இதுவரை தந்த பாடங்களில் உங்களுக்கு ஐயம் ஏதும் இருந்தால் தயக்கமின்றி jothi@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் க்குஎழுதுங்கள். அல்லது பின்னூட்டமிடுங்கள். கேள்விகள் யாவும் இதுவரை பதியப்பட்ட பாடங்களை ஒட்டியே அமையவேண்டும். [இத் தொடர் பற்றிய பாராட்டுக்களையும், இது வரையிலான பாடங்கள் பற்றி மேலதிக சந்தேகங்களை மின் அஞ்சலில் அனுப்பி விளக்கம் பெற்ற வாசகர்களுக்கு நன்றி!]

அடுத்து இனி வரவிருப்பது...1.3 Panels


- jothi@inneram.com
Source : http://www.inneram.com/2010102711494/graphics-training-part-3

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails