விட் டுக் கொடுத்தால் கெட்டுப்போக வழி இல்லை .
வெளி நாடுகளில் திருமணம் ஆன பின்பு தனி குடுத்தனம் அமைத்து விடுமுறை நாட்களில் ஒன்றாக இருந்து மகிழ்வர்!
குடும்ப கலாட்டாவுக்கு பல காரணங்கள் உண்டு .அதில் சில. .
கருத்து முரண்பாடு ஏற்படுவது. உருவாகும் பிரச்சினைகளைப் பொருட்படுத்துவது.
குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்
வீட்டுப் பணிகளில் பங்கேற்றல்.இல்லாத மனைவி .
குடும்பத்தில் அனைவரிடமும் அனுசரிக்காமலும் அன்புடனும் இல்லாமல் இருப்பது .
கூட்டு குடும்பத்தில் குழந்தைகள் போடும் சண்டையில் இவர்கள் தலையிட்டு பிரச்சனையிணை அதிகமாக்கி அதனால் ஏற்படும் விளைவு .
பணப் பிரச்சினைகளைப் பொருட்படுத்தும் மனைவி
பொருள் வேண்டியும் மற்ற பிற காரணங்கலுக்காகவும் பொய் பேசியே வாழ்கையினை ஓட்ட நினைப்பது
பெண்வீட்டாரிடத்தில் மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் வரதட்சனை
எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பது.
எல்லாப் பண்புகளும் தன் மனைவியிடமும் ஒன்று சேர அமைந்திருக்க வேண்டுமென ஒப்பீட்டாய்வு செய்வது
மனைவியை சந்தேகிக்கும் கணவன்
கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழும் மனைவி
திருமணத்தின் மிகமுக்கிய அம்சம் கணவன் மனைவி இருவரும் பிரியாமல் வாழ்வது தான்.
மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார் நினைப்பது. அதனை பொருட்படுத்தாத மனைவி.
வேறொரு குடும்பம் வைத்திருப்பதும் மனைவியை விட்டுப் பிரிந்து இருப்பதும். தனி குடும்பம் நாடி குழப்பம் உண்டாக்குவது .
.மனைவின் ஆசையினை அறியாமல் இருப்பது அல்லது கணவனின்
ஆசையினை அலட்சியம் செய்வது.
இல்லற வாழ்வில் நாட்டம் இன்றி தூங்கி வழிவது .
இன்னும் எதனையோ !
பெண்களுக்குத் தேவை மனவுறுதியும், ஆரொக்கியமும், தியாக மனப்பான்மையும், குழந்தைகளை இறைவன் அளிக்கும் மிகப்பெரும் செல்வம் என்று கருதும் மன நிலையும் தான். பணங்காசுகளோ, வசதிவாய்ப்புகளோ அல்ல
”மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.” (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-2832)]
”பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் பெண்கள்(வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே நீடிக்கும். ஆகவே பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்”
(ஸஹீஹுல் புஹாரி: 5186)
1 comment:
I Like your blogs.
Post a Comment