வணக்கம்.
நீங்கள் சுட்டி கொடுத்த கவிதையைப்படித்தேன்.
கவிதை என்பது ஒரு ஆழ் மனதின் வெளிப்பாடு. இலக்கியமும் அப்படித்தான். ஆனால் இலக்கியத்தை விட கவிதையில் சொற்களுக்கு மிகுந்த ஆழமான பொருள் உண்டு.
கவிதை நயத்தை அனுபவிக்க தனி மனநிலை வேண்டும். மேலோட்டமாக பார்க்கும்பொழுது ஒரு கருத்தும் ஆழமாக சிந்திக்கும்போது வேறு பல பொருள்களும் புலப்படக்கூடிய ஒரு சிறப்பு கவிதைக்கு உண்டு. ஆகையால் பல கவிதைகளை, அவை என்ன கருத்தை வெளிப்படுத்த அந்த படைப்பாளியினால் எழுதப்பட்டது என்பதை படிப்பவர்கள் புரிந்து கொள்வது சிரமம்.
சாதாரணமாகப் பேசும்போதே வார்த்தைகளின் அர்த்தங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது அல்லவா? அப்படி இருக்கும்போது கவிதையை படிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில்தான் பார்க்க முடியும். கம்பன் காவியத்தையே இன்னும் புரிய முயன்றுகொண்டுதான் இருக்கிறோமே தவிர, முழுவதும் புரிந்துகொண்டோமென்று சொல்ல முடியாதல்லவா?
நீங்கள் திறந்த மனதுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு பதிவர் என்கிற கருத்தில்தான் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். வேறு எந்த தவறான புரிதல்களும் இல்லை.
பயனுள்ள ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்தைத் தொடருவோம்.
நன்றி, வணக்கம்.
அன்புள்ள,
ப.கந்தசாமி
Dr.P.Kandaswamy, Ph.D. Palaniappan
1 comment:
ஆஹா, தங்களுடைய பெருந்தன்மையை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. என்னுடைய சாதாரண கடிதத்தையே ஒரு கவிதையாக்கிவிட்டீர்கள். என்ன சொல்லிப்பாராட்டுவது என்று தெரியவில்லை. நன்றிகள் பல.
Post a Comment