Friday, October 1, 2010

வண்டுதிர்க்கும் பூக்கள் by கலாம் காதிர்


வண்டுதிர்க்கும் பூக்கள்

வண்டுதிர்க்கும் பூக்களாய் வாடும் நிலைதனைக்
கண்டுதிர்க்கும் என்றன் கவிதை மலர்களைக்
கண்டுணர்ந்து கொள்ளாத காதலி யுள்ளமதைக்
கண்டுகொண்டே என்மனம் பேசும்.

வண்டுதிர்க்கும் பூக்களாய் வாடு மதனாலே
உண்டுமகிழ்ந்  துன்னை உதறிடு வெனென்று
கொண்டுள்ள எண்ணத்தால் கொன்று விடாதுடன்
விண்டுவிடு உண்மை நலம்.

வண்டுதிர்க்கும் பூக்களாய் வாழ்வு மடியாது
தண்டுபோ   லுன்னையேத் தாங்கிடு வேனென்று
பண்டுதமிழ் காதல் படித்த நமதுள்ளம்
கொண்டுள்ள பாடமே காண்.



வண்டுதிர்க்கும் பூக்களாய் வாழ்வு குலைந்தாலும்
மீண்டும் மலர்ந்திட மீண்டு வரவேண்டு மென்று
வேண்டும் தொழுகையில் வேண்டினே னென்று
ஈண்டு பகர்தல் சிறப்பு.

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

குறிப்பு: “கவிதை சங்கமம்” நடாத்திய கவிதைப் போட்டியில் எனது இந்த கவிதை முதலிடம் பெற்றது

No comments: