இத்தனை ஊழல்களுக்கு நடுவிலும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா பதக்கப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன வணங்காமுடியாரே? - மகேஷ், கடலூர்.
ஊழல் அரசியல்வாதிகளை முற்றாக விளையாட்டிலிருந்து ஒழித்துவிட்டால் முதலிடம் தொலைவில் இல்லை.
முன்னர் இதுபோன்ற ஒரு வினாவுக்கு விடை அளித்துள்ளதையும் காண்க!
முன்னர் இதுபோன்ற ஒரு வினாவுக்கு விடை அளித்துள்ளதையும் காண்க!
மதுரையில் அழகிரியின் செல்வாக்கு தற்போது எவ்வாறு உள்ளது? - கோமளவல்லி, பெங்களூரு.
எப்போதும்போலதான் உள்ளது; குறையவில்லை.
தேர்தல் வெற்றி தோல்விதான் செல்வாக்கை நிரூபிக்கும்.
தேர்தல் வெற்றி தோல்விதான் செல்வாக்கை நிரூபிக்கும்.
என்ன தான் நாடு முன்னேறினாலும் ஏழை மக்கள் மென்மேலும் ஏழைகளாகத்தானே போய்க்கொண்டிருக்கிறார்கள். இந்நிலை மாற வழியே இல்லையா? - ஷபீர், நாகர்கோவில்.
நாம் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கையில் இதுதான் நடக்கும். கொள்கை மாற வேண்டும்.
ஈராக் போரில் மறைக்கப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது பற்றி? - காஸிம், பல்லாவரம்.உண்மைகள் உறங்கா!
"கோட்டையிலே ஒரு ஆலமரம், அதில்
கூடுகட்டும் ஒரு மாடப்புறா" என்று கண்ணதாசன் பாட்டு எழுதியிருக்கிறார்.
கூடுகட்டும் ஒரு மாடப்புறா" என்று கண்ணதாசன் பாட்டு எழுதியிருக்கிறார்.
மாடப்புறா மரங்களில் கூடுகட்டுமா? - வசீகரன், பட்டுக்கோட்டை.
கவிஞர்கள் சொல்வதற்கெல்லாம் விடை தேடாதீர்கள்.
‘கவிதையை அனுபவிக்க வேண்டும்; ஆராயக்கூடாது’ என எங்கேயோ படித்துள்ளேன்.
கவியரசு கண்ணதாசன் எழுதிய அப்பாடலில் அனைத்து மாடப்புறாக்களும் வந்து ஆலமரத்தில் கூடு கட்டுவதாகக் கூறவில்லை. மாடத்தில் வாழும் ஒரு புறா ஆலமரத்தில் கூடுகட்ட வருவது சிறப்புச் செய்தியாகும் -- 'நாடோடி' 'மன்னனாவது' போல. அப்பாடலில் குறிப்பிடப்பட்ட புறா ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் குறியீடாக இருக்கலாம்.
திரைப்படப் பாடல்களில் இதுபோல அடிக்கடி நிகழும்.
கண்ணதாசன் யாருக்கும் வெட்கமில்லை திரைப்படத்தில்,"மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்; நீ சொன்னால் காவியம்" என்று தொடங்கும் பாடலில்,
"அப்பன் தவறு பிள்ளைக்குத் தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை; அத்தனை பேரையும் படைத்தானே - அந்தச்
சிவனுக்கும் வெட்கமில்லை"
அவனுக்கு வெட்கமில்லை; அத்தனை பேரையும் படைத்தானே - அந்தச்
சிவனுக்கும் வெட்கமில்லை"
என்று எழுதியிருந்தார்.. பாடல் படத்திலும் வந்து விட்டது. படைப்பவன் பிரம்மனல்லவா? அழிப்பவன் தானே சிவன் என ஒரு வினா எழுந்தது.
கவிஞர் முத்துலிங்கம், கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் "மாஞ்சோலைக் கிளிதானோ" என்ற பாடலில் "வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ" என எழுதினார். தென்னந்தோப்பு என்பதைப்போல் வேப்பந்தோப்பு எனக் கூறுவது கிடையாது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது,
“தென்னை மரக்கிளை மீதில் - அங்கோர்
செவ்வாய்ப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்
சின்னஞ் சிறிய குருவி - அது
“ஜிவ்”வென்று விண்ணிடை யூசலிட்டேகும்”

என்று பாரதி எழுதியிருக்கிறாரே; தென்னை மரத்தில் ஏது கிளை?” என்றார்.
இப்படி நிறையச் சொல்லலாம். அதற்கு வ மு விடைப்பகுதியில் இடம் போதாது.
இப்படி நிறையச் சொல்லலாம். அதற்கு வ மு விடைப்பகுதியில் இடம் போதாது.