Showing posts with label பொய். Show all posts
Showing posts with label பொய். Show all posts

Saturday, January 25, 2014

பொய்மையின் மூட்டைக்குள்..!!


உண்மை பொதிந்து கிடக்கிறது,
பொய்மையின் மூட்டைக்குள்..!!

ஒரு பொய்யுடன் சமரசம் செய்துகொண்டு சல்லாபிக்கையில்
மறுபொய்
துரத்தியது கொலைவெறியுடன்..!!

Tuesday, December 10, 2013

வாக்கு


வாக்குத் தவறி
நாக்குப் பிறழ்ந்தவர்கள்
நாசமாகட்டும்

மோசடி செய்து
வயிறு வளர்க்க நினைப்பவர்
மோசம் போகட்டும்

பொய்யும் புரட்டும்
பாதுகாக்குமென நம்பியவர்
பொலிவிழந்து போகட்டும்

நிஜத்தை மறைத்து
சதிசெய்யும் வீணர்கள்
நிர்மூலமாகட்டும்,
நிர்மூலமாகட்டும்
நிர்மூலமாகட்டும்...!!

#குடிக்கக் கஞ்சியற்று
குண்டிக்குத் துணியுமின்றி
குருடராய்ப் போகட்டும்


by Nisha Mansur










-----------------------------------------------
வாக்குக் சொல்லி
போக்குப் காட்டி
காலம் கடந்தாயிற்று

மோசடி செய்ய மனமில்லை
வாக்கை நிறைவேற்ற வழியறியவில்லை
வாக்கை நிறைவேற்றும் வழியை தேடுகின்றேன்

வாக்கு கொடுக்குமுன் என்னிலை நான் அறியாமல் போனேன்
வாக்கை பாதுகாக்க நான் படும் வேதனை நானே அறிவேன்
வாக்கைப் பெற்றவர் இன்னும் என்னை நம்பி நிற்கிறார்
வாழ்க்கையில் பொய்யும் புரட்டும் பேசுவது என் செயலல்ல
வாக்கை கொடுத்தது உண்மையாகவே உள்ளது 
வாக்கை கொடுத்தது கொடுத்தபடியே நிற்கிறது
வாக்கை கொடுத்ததை நிறைவேற்றாமையால் பொலிவிழந்து நிற்கிறேன்
வாக்கை நிறைவேற்றாமல் நிற்பது அமானிதமாக நிற்கிறது
அமானிதம் திருப்பித் தரப் படவேண்டும்
அமானிதம் திருப்பித் தரப் படாமல் போனால் இறைவன் பார்வையிலும் குற்றமாகும்
அமானிதம் திருப்பித் தர
வாக்கை நிறைவேற்ற
இறைவனின் அருள் நாடி நிற்கிறேன்
இறைவன் அருளால் இறைவன் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) வாக்கு நிறைவேற்றப் படும்



இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.  
 குர்ஆன்- 23:8.


                                                by முகம்மது அலி ஜின்னா

Saturday, May 5, 2012

இஸ்லாமியக் கவிதைகளுக்கும் பொய்தான் அழகு! இல்லை என்று யார் சொன்னது?

அதிரை நிருபர் என்கிற வலைத்தளத்தில் அதிரை சித்திக் அவர்கள் ”கவிதைக்கு பொய் அழகு என சில கவிஞர்கள் இன்றும் சொல்ல கேட்கிறோம்” என்று கூறி இருந்தார். அவருக்கு மறுமொழியாக நான் இப்படி எழுதினேன்:

கவிதைக்குப் பொய்யழகு என்பதில் யாதொரு தவறும் இல்லை. நாம் புரிந்துகொள்வதில்தான் தவறிருக்கிறது. பொய் என்று சொல்வது இங்கே கற்பனை வளம் ஏற்றுவதை, அழகு ஊட்டுவதை, இசை கூட்டுவதை. உதாரணம்: ஒரு பெண் குழந்தை என்பது உண்மை. அந்த உண்மைக்கு, பட்டுடுத்தி, பவுடர் இட்டு, கண்ணுக்கு மையிட்டு, சடை பிண்ணி, பூமுடித்து என்ற அத்தனைப் பொய்களையும் செய்து பார்ப்பது தவறல்ல, அழ்கு பெண்ணுக்கு அழகு.

அதுபோலத்தான் கவிதைக்கும் அழகு தேவை. ஒரு கவிதை பொய்யை நடுவில் வைத்து உண்மையைச் சுற்றிக் கட்டி ஏமாற்றுகிறதா அல்லது உண்மையை நடுவில் வைத்து கற்பனை, சொல்லழகு, இசை போன்று பொய்களைச் சுற்றிக்கட்டி நயமாக்குகிறதா என்பதே முக்கியம்.

கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு

என்ற கவிஞர் வைரமுத்துவின் கவிதையைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். கண்ணுக்கு மை என்ற பொய் எப்படி அழகோ அப்படித்தான்,  கவிதைக்குக் கற்பனை என்ற பொய் அழகு. ஆகவே, கவிதைக்குப் பொய் அழகே தவிர கவிதை என்பது மெய்யால் செய்யப்பட்டால் மாத்திரமே அது கவிதை. கவியெனும் மெய்யில் இழைக்கப்படும் அழகு கற்பனைப் பொய்களே கவிதையைக் காலத்தால் அழியாததாய் ஆக்குகின்றன. உரைநடைக்கும் கவிதைக்குமான வித்தியாசம் அதுதானே?

Wednesday, May 2, 2012

அம்மாவின் ஆற்றாமையும் அவரது அவசியமான பொய்யும்!

அன்பு மகனே உன் வருகைக்காக வழிமேல் விழி  வைத்து காத்திருந்தேன். என் மகன் பெரிய படிப்பு படித்து வேலையில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்து முதல் சம்பளம் இன்று வாங்கி வருவான் அதில் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ந்து இறைவனைத் தொழுது அந்த தொகையில் ஒரு பங்கை தர்மம் செய்வதோடு உறவினருக்கும் கொடுத்து ,மற்றொரு பங்கை உனது மேல்  படிப்புக்காக வாங்கிய கடனில் சிறிது கொடுத்து மீதி உள்ளதனில் சிறிது மாத செலவுக்கு சேமிப்பதோடு   மகிழ்வுடன்  நாங்களும் வெகு நாட்களுக்குப் பிறகு  நல்ல உணவு சமைத்து சாப்பிடலாம் என்ற நினைவோடு இருந்தேன் . நான் நினைத்ததை மற்றவர்களிடமும் சொல்லி மகிழ்ந்தேன்.
  பலமணி நேரங்கள் நானும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காத்திருந்தோம். மாலை நேரம் முடிந்தது. இரவு நேரமும் வந்தது. நீ வந்த பின்புதான் அனைவரும் சேர்ந்து உணவு அருந்தும்  முடிவுடன் இருந்தோம். நேரம் கடந்துக் கொண்டே இருந்தது . ஒவ்வொருவராக அயர்ந்து போய் உண்ணாமலேயே இருந்த இடத்திலேயே அமர்ந்தவாறே தூங்க ஆரம்பித்து விட்டனர்.
நான் மட்டும் உறங்காமல் உன் நலம் நாடி இறைவன் பெயரைச் சொல்லி ஓதிக் கொண்டிருந்தமையால் நடுநிசியில் நீ வந்து வாசற் கதவை தட்டும்போது மலர்ந்த முகத்துடன் உன்னை வரவேற்றேன். 'ஏன் இவ்வளவு நேரம்! உன் வருகைக்காக எல்லோரும் காத்திருக்கிறார்களே நேரத்திற்கே வீடு வந்திருக்கலாமே' என்றேன்!   'அம்மா நான் வருவதாகத்தான் இருந்தேன் ஆனால் என்னோடு  வேலை செய்யும்  நண்பர்கள் என்னை அவர்களுக்கு முதல் சம்பளத்தில் ஒரு விருந்து கொடு என்று பெரிய நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து சென்று விட்டாரர்கள். நான் வாங்கிய சம்பளத்தில் பாதி செலவழிந்து விட்டது' என்றான்.
 நான் போட்ட திட்டங்கள் நிறைவேறாமல் போனதே என்ற  ஆற்றாமை மனதில் இடியாகத் தாக்கினாலும் அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல் 'நீ இதனை சொல்ல வேண்டாம் மாதக் கடைசியானதால் விடுபட்ட வேலைகளை முடிக்க நேரமாகிவிட்டது மற்றும் பாதி சம்பளம்தான் தந்தார்கள் மீதியை அடுத்த மாதம் தருவதாக சொல்லியுள்ளார்கள்'  என்று சொல்லிவிடு என்றேன்.
 பெற்ற மனது மகனுக்காக பொய் சொல்ல சொல்லிக் கொடுத்தது.
 தவறான காரியம் நிகழாமல் தடுக்கவும், நல்லவரைக் காப்பாற்றவும் மற்றவருக்குள் சமாதானத்தினை உருவாக்கும்  எண்ணத்தோடும் அதனால் ஒரு நல்ல காரியம் நிகழுமென்றால் பொய் சொல்லலாம். குடும்பத்திற்குள் ஒரு கவலை வராமல் இருக்க குடும்பத்தில் உள்ளோர் மகிழ்வுக்காக தாய் தனது மகனுக்காக சொல்லிய பொய்யை இறைவன் மன்னித்தருள்வான். அவன் மிக்க கருணையுள்ளவன்.

Wednesday, April 25, 2012

உண்மையும் பொய்யும் கலந்த கலவை!


கவிதைக்கு அழகு பொய் கலப்புதானாம்.  "கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு"
கவிதையோடு வாழ்கையும் பொய்யாகி விட்டது. கணவன் மனைவிக்கிடையே ,அரசு அலுவலகத்தில் ,முதலாளி மற்றும் தொழிலாளிக்கிடையே , ஏன் தொழும் இறைவனிடத்திலும் பொய்யாக வணங்கும் வாழ்கை வந்ததால் எங்கும் நிறைத்த
பொய் இனிய வாழ்வினை கெடுக்கின்றது. 
எது உண்மை! எது பொய்! என்பதனை கண்டுபிடிக்க ஆய்வு முடிந்தபாடில்லை. அடித்து, உதைத்து, மருந்து கொடுத்து மயங்க வைத்து, மின்சார முறையை கையாண்டு , மனோதத்துவ முறையைக் கையாண்டு அல்லது தவறான முறையில் மகிழ்வை உண்டாக்கி இன்னபிற வகைகளை கையாண்டாலும் உண்மையாக உண்மையான குற்றங்களை மற்றும் அதனை செய்தவர்களை இனம் காண முடியவில்லை. கண்டு பிடித்தாலும் கண்டு கொள்ளாமல் போய்விடுபவர்களை கண்டு பிடிக்கமுடியவில்லை. ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு என்பதால் தானே வந்து ஒரு வேளை உண்மையை ஒப்பித்து விடலாம். கோபமும் தாபமும் நம்மிடையே வந்து போவதால் ஒரு சில நமையும் மற்றும் தீமையும் ஏற்பட வாய்ப்புண்டு. அறிவு ஜீவிகள் ஆத்திரப் பட்டால் சில நல்ல கருத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு