Monday, April 30, 2012

ஆயிஷா

கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல்பரிசு பெற்ற நூல் ஆயிஷா. இரா.நடராசன் அவர்கள் எழுதிய ஆயிஷா என்ற அற்புதமான கதை ஏப்பிரல் 2005ல் பாரதி புத்தகாலயம் சிறுநூலாக ரூ5/- விலையில் வெளியிட்டிருந்தது.  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்ட ஏன்? எப்படி? என்ற நூலிலும் இந்தக்கதை முதல் பக்கத்தில் உள்ளது. ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக இந்தக்கதை அமைந்திருக்கும். இதுவரை எட்டு மொழிகளில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுள்ளது.  இந்தக்கதையின் வீடியோ வடிவம் தமிழ்நாட்டிலுள்ள ஒன்று முதல் எட்டுவரை வகுப்பு எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏனைய பிற ஆசிரியர்கள் மற்றும் அனைவரும் இந்த குறும்படத்தினை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
Read more: http://alaiyallasunami.blogspot.com/#ixzz1tVS2ch4Z

 ஆயிஷா கதையினை தமிழில் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும். ஆங்கிலத்தில் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இரா.நடராசன் எழுதிய ஆயிஷா கதையினை வாசிக்கும்போது ஏற்பட்ட அதே உணர்வு படம் பார்க்கும்போதும் ஏற்படும் விதத்தில் அருமையாக குறும்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். தமிழ்நாட்டிலுள்ள ஒன்று முதல் எட்டுவரை வகுப்பு எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏனைய பிற ஆசிரியர்கள் மற்றும் அனைவரும் இந்த குறும்படத்தினை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.அனைவரின் பாராட்டினையும் பெற்ற ஆயிஷா குறும்படத்தினைத் தயவுசெய்து பொறுமையாகப் பாருங்கள்.

No comments: