கவிதைக்கு அழகு பொய் கலப்புதானாம். "கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு"
கவிதையோடு வாழ்கையும் பொய்யாகி விட்டது. கணவன் மனைவிக்கிடையே ,அரசு அலுவலகத்தில் ,முதலாளி மற்றும் தொழிலாளிக்கிடையே , ஏன் தொழும் இறைவனிடத்திலும் பொய்யாக வணங்கும் வாழ்கை வந்ததால் எங்கும் நிறைத்த பொய் இனிய வாழ்வினை கெடுக்கின்றது.
எது உண்மை! எது பொய்! என்பதனை கண்டுபிடிக்க ஆய்வு முடிந்தபாடில்லை. அடித்து, உதைத்து, மருந்து கொடுத்து மயங்க வைத்து, மின்சார முறையை கையாண்டு , மனோதத்துவ முறையைக் கையாண்டு அல்லது தவறான முறையில் மகிழ்வை உண்டாக்கி இன்னபிற வகைகளை கையாண்டாலும் உண்மையாக உண்மையான குற்றங்களை மற்றும் அதனை செய்தவர்களை இனம் காண முடியவில்லை. கண்டு பிடித்தாலும் கண்டு கொள்ளாமல் போய்விடுபவர்களை கண்டு பிடிக்கமுடியவில்லை. ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு என்பதால் தானே வந்து ஒரு வேளை உண்மையை ஒப்பித்து விடலாம். கோபமும் தாபமும் நம்மிடையே வந்து போவதால் ஒரு சில நமையும் மற்றும் தீமையும் ஏற்பட வாய்ப்புண்டு. அறிவு ஜீவிகள் ஆத்திரப் பட்டால் சில நல்ல கருத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு
ஓடையில் ஒரு குளிர்ச்சி.ஊடலில் ஓர் மகிழ்வு. அறிவு ஜீவிகள் ஆத்திரப்படுவதால் உண்மை வெளிவந்து உயர்ந்த கருத்துகள் மழையாக கொட்டி மட்றவர் மனதிற்கு செழிப்பினைத் தரும் .அடிக்கடி கோபப்படுங்கள்.கோபத்தினை அடக்கி வைத்தால் உடலுக்கு கேடு தரும். மனிதன்தான் கோபம்,சிரிப்பு,வேதனை,உடல் உபாதைகளை வெளியாக்குவதில் இன்னும் மன அழுத்தங்களை அனைத்தும் அடக்கி வியாதிக்குள்ளாகின்றான். ஆனால் மனிதனைத் தவிர மற்ற (மிருக) இனங்கள் உணர்வுகளை அடக்குவதுமில்லை,ஆள்வதும் இலை மற்றும் நடிப்பதுமில்லை அதனால் அவைகளுக்கு மனோவியாதி வருவதில்லை. ஏன் இந்த அடக்கு முறை நமக்கு மட்டும், நாம் உயர்வாக சொல்லிக்கொள்வது நாம் ஆறறிவு பெற்றவர்கள் என்பது. அதனால்தான் அடக்கியாளும் கலை நடிக்கும் கலை நம்மோடு ஒன்றிவிட்டது. ஆனால் நாம் காலில் விழுந்து காக்காய் பிடிப்பதும் ,மனிதனை வணங்கும் அளவுக்கு(ஹீரோவொர்ஷிப்)போய் நம்மை தாழ்த்திக் கொள்வதும், மனிதனை இறைவனை போற்றும் அளவுக்கு போற்றி நடிப்பதும்,அழிப்பதும்,ஒழிப்பதும் இன்ன பிற குற்றங்கள் செய்து அதனை பெருமையாகப் பேசுவதும் (ஆறறிவு உள்ள) மனிதனுக்கே உள்ள செயலாக நாகரீக உலகத்திலும் தொடர்கின்றது. "உலகம் ஒரு நாடக மேடை அதில் ஒவ்வொரு மனிதனும் நடிகன்" என்பது உண்மையாகிவிட்டது.
No comments:
Post a Comment