அமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்
உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?
இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் 2009-ஆம் வருடம் அமெரிக்க
முஸ்லிம்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று.
இதற்கான பதில் -
ஆம் - 80%
முஸ்லிம் அமெரிக்கர்களில் பத்தில் எட்டு பேர் இஸ்லாம் தங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.
காலப் நிறுவனத்தின் அமெரிக்க முஸ்லிம்கள் குறித்த இந்த
ஆய்வறிக்கை கவனிக்கத்தக்க பல தகவல்களை நமக்கு தருகின்றது. அவற்றில் சில
உங்கள் பார்வைக்காக....
1. இனப் பின்னணி:
அமெரிக்க முஸ்லிம்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில், ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம் பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது இஸ்லாம் தான்.
அமெரிக்க முஸ்லிம்களில் 35% பேர் கறுப்பின மக்கள் (African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள் அல்லது தழுவியவர்களின் வாரிசுகள்.
28% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.
அமெரிக்க முஸ்லிம்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
கடைசியாக, சுமார் 1% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic - Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்..

2. தினசரி வாழ்வில் இஸ்லாம்:
முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு அமெரிக்க முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.
சுமார் 80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.
இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
அதாவது, மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர்.
அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.
மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Source : http://onlyoneummah.blogspot.in/2011/09/blog-post_10.html
No comments:
Post a Comment