Wednesday, April 4, 2012

கல்வி மற்றும் அறிவியலில் இஸ்லாத்தின் பங்கு!

 நாகரீக உலகில் வாழ்வின் முன்னேற்றத்திற்கு நாம் கல்வி மற்றும் அறிவியலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமாக உள்ளது. தற்பொழுது இஸ்லாமிய நாடுகள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டன. இது இஸ்லாத்திற்கு புதிதல்ல.  குரானை நாம் ஆராய்ச்சி செய்தால்  அனைவற்றையும் நாம் பெறலாம். பல விஞ்ஞானினிகளுக்கு அது வழிகாட்டியாக இருந்துள்ளது. ஏற்கனவே 19 ஆம் நூற்றாண்டில் எகிப்து, ஓட்டோமேன் துருக்கி மற்றும் பாரசீக சில முஸ்லீம் நாடுகளில்  அறிவியல் மற்றும் குறிப்பாக மருத்துவம் கற்று தரப்பட்டு அங்கு உயர்கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன.
அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.
"நவீன அறிவியலின் இருதயத்தில் இருக்கக்கூடிய சொற்களான அல்ஜீப்ரா (Algebra), அல்கோரிதம் (Algorithm), அல்கலி (Alkali) எல்லாம் அரபியில் இருந்து வந்தவைதான், இவைகள் அவர்களது கலாச்சாரம் எந்த அளவு சிறந்திருந்தது என்பதை உணர்த்துகின்றன. அல்ஜீப்ரா இல்லாமல் நவீன கணிதமோ இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள் இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --- BBC   
அனைத்து மட்டங்களிலும் இந்த நூற்றாண்டின் கல்வி நிறுவனங்கள்  இஸ்லாமிய உலகம் முழுவதும் இக்கல்வி முறை பல்கி பெருகி வருகின்ற
 கணிதத்தின் உயிரியல், நவீன தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில்  பெரும்பாலும் மேற்கு பயிற்சி கல்வி நிலையங்களில் இணைந்து கொண்ட குறிப்பிடத்தக்க விஞ்ஞானிகள் ஆண்கள், பெண்கள் ஒத்துழைப்புடன்  தயாரிக்கப்பட்டவைகளும் இதில் அடக்கம்.  
 இஸ்லாமிய உலகின் முன்னணி சிந்தனையாளர்கள் தற்பொழுது உலகளவில் ஒன்று கூடி மாநாடு நடத்தி  நவீன அறிவியல் முக்கியத்துவத்தை  யோசித்து இணைந்து செயல்பட முனைவது மகிழ்வினைத் தருகின்றது

  இஸ்லாமிய கல்வி முறை ஐரோப்பா மற்றும் ஸ்பெயின்  பல்கலைக்கழகத்தில் அரபு மதரசாக்களில் முதல் இடத்தை பிடித்திருந்தது கற்றல் அல்லது கலைத்  துறையில்  தற்போது  செல்வாக்கு இல்லாமல் மதரசாக்களின் கல்வியை மாற்றத்தில் அமைந்துவிட்டதனை மாற்றி அமைத்து மறுமலர்ச்சி ஏற்பட முயற்சி நடைபெற்று வருவது வரவேற்கப்பட வேண்டியதாகும். மார்க்க கல்வி என்று மதரசாக்களை தனிமைப் படுத்தாமல் அங்கு அனைத்துக் கல்வியும் கிடைக்க வழி செய்ய வேண்டும். இருலோகதிலும் வெற்றி பெற வாய்ப்பை உண்டாக்கித் தரக் கூடிய கல்வியாக அது அமையவேண்டும்.  


நபி (ஸல்) அவர்கள்ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்என்றே அதிகமாகப் பிரார்த்தித்து வந்தார்கள். (பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக. மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக புஹாரி :6389 அனஸ் (ரலி).
 சீனா தேசம் சென்றாகினும் சீர் கல்வியைத் தேடு என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள் .
இதனை (கிளிக் செய்து)சொடுக்கி படியுங்கள்

எதிர்க்குரல்: புதிய அறிவியல் ...

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails