அல்லாஹ் திருமறையில் கூறுகிறான், "நீங்கள் வசிக்கக்கூடிய வீட்டை நிம்மதியானதாக ஆக்கிக்கொள்ளுங்கள்".
எங்கள் தந்தை வீடு கட்டும்பொழுதே தொழுகை அறை ஒன்று வைத்து கட்டினார்கள்.
இதுவும் மிகவும் அவசியம் என்பது என் கருத்து.
உங்களது இல்லங்களை
கபர்களாக, மண்ணறைகளாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களால் கூறப்பட்டதன் பொருள் வீட்டிலும் தொழுக வேண்டும்
என்பதுதான். ஃபர்ளு அல்லாத, ஃபர்ளுக்கு முன் தொழக்கூடிய சுன்னத்துல் வக்ரா"
12 ரக் அத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வீட்டிலேயே தொழுதார்கள்.
நாம் ஒரு வீட்டிற்குச் சென்றால் அழகுடன் அமைக்கப்பட்ட கூடம் ,படுக்கை
அறை.அடுப்பங்கறை குளியலறை மற்றும் கழிவறைகளை அழகுபடுத்திருப்பதனைக் காட்டி
மகிழ்வார்கள் ஆனால் அந்த வீட்டில் ஒரு தொழுகை அறை இல்லாமல் செய்து
விட்டார்களே என்ற வருத்தம் வந்தாலும் அதனை சொல்லி அவர்கள் மகிழ்வைக்
குறைக்காமல் வருவதுண்டு. தொழுகை அறையில் அவர்கள் தொழுவதற்கு குறிப்பாக
பெண்களுக்கு ஒரு தூண்டுதலாக அமையலாமல்லவா! மற்ற விருந்தினர்கள் வந்தாலும்
அதனைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். வீட்டில் அது ஒரு ஒளிவிளக்காக
('நிப்ராசாக; 'லாந்தராக') ஜோளிக்கும்,அதன் நிமித்தமாக நன்மைகளும்
அனுகூலங்களும் (பரக்கத்தும்) கூடும்.வீட்டின் அழகு மனதினைச் சார்ந்தது.
குடும்ப மகிழ்வு இறை அருளின் பாக்கியம். அந்த இறைவனைத் தொழ அவசியம் ஓர் அறை
அவசியம் தேவை.
எங்கு சென்றாலும் தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து உண்டு உறங்கினால்தான்
நிம்மதி என்பதனை அனைவரும் அறிவர் அப்படியான நிலையில் வீடு கட்டும் போது
சிலவற்றினை நம் மனதில் முன்னிறுத்தி வீடு கட்ட ஆரம்பிப்பது நல்லது. அழகிய
வீடு கட்டுவோர் தமது தேவையை முன்னிறுத்தித்தான் வீடு கட்டவேண்டும்.
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு நேரம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
ஆடம்பரமான வீடுகளை அடுத்தவர் புகழ்ச்சிக்காக கட்டுதல் தவறான முறையாகும்.
வீடு அழகாக இருந்து தேவையான வசதிகளை அவைப் பெற்றிருக்கவில்லையென்றால்
அதில் குடி இருப்பதே விருப்பம் தராத நிலைக்கு வந்துவிடும்.
காற்றோட்டமுள்ள முடிந்தவரை பசுமை தரக் கூடிய செடிகளும் மரங்களும் அமைக்க
இடம் தரப் பட்டிருக்க வேண்டும்.
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்
அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்
அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்
அங்குக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீறும்
பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்
நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும்
அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்
என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்
எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்
அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்
என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்
- பாரதியார் பாடல்
வெளிச்சமும் சூரிய ஒளியும் வரும்படி ஒரு
முற்றம் அமைக்கப் பட வேண்டும். இனிய மனதோடு மகிழ்வாக வாழ சூழ்நிலையும் உதவி
செய்யும். பக்கத்தில் வீடு உள்ளவர்கள் நல்லவர்களாகவும் நண்பர்களாகவும்
உதவி செய்யும் மனோநிலைக் கொண்டவர்களாகவும் மாற்ற முயற்சிக்க நாம் முயற்சி
செய்ய வேண்டும்.அது நாம் அவர்களுக்கு செய்யும் சேவைக்கு உட்பட்டதாக இருக்க
வேண்டும்.
உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) 'உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்'' என்று கூறினான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார்
உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக
இருக்கிறதோ அவருக்கு'' என்றார்கள்.
(குறிப்பு : இன்றைய நிலையில் கை விசிரியினை மற்றும் மெழுகுவர்தியும் விறகும் கையிருப்பில் அவசியம் வைத்திருங்கள்)
1 comment:
இஸ்லாமிய இல்லங்களில் இது இல்லாதது பெரும் குறைதான்.இந்த எண்ணம் அவசியம் அனைத்து முஸ்லிம்களுக்கும் வரவேண்டும்.நல்ல இடுகை.ஜஸகல்லாஹ் கைரன்.
Post a Comment