Thursday, April 19, 2012

மோடிக்கு டா-டா சொன்னது டைம் 100....

 
டைம் இதழ் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தன் இறுதி (உலகில் 100 அதிக  செல்வாக்குள்ளவர்கள் பட்டியலில்) பட்டியலில் இடம் கொடுக்காமல் டா-டா சொல்லிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ். சர்ச்சைக்குரியவர்களுக்கு ஒரு பகுதி வைத்து அதில் சிரிய அதிபர் பஷர் அசாத் மற்றும் தாலிபான் தலைவர் முல்லா உமர் போன்றவர்களுக்கு இடம் கொடுத்த டைம், அதில் கூட மோடிக்கு இடம் கொடுக்காமல் கைவிரித்து விட்டது. என்னாமா விளம்பரம் பண்ணுனாங்க எல்லாமே போச்சு. அது சரி, மோடியை சேர்க்கலாமா என்று டைம் கேட்டதுக்கே குதியாய் குதித்த ஊடகங்கள் மோடியை "போயிட்டு வாங்க" என்று டைம் சொன்னதை இன்னும் (பலரும்) சொல்லவே ஆரம்பிக்க வில்லையே ஏன்? 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவருக்கு நம் வாழ்த்துக்கள். 

டைம் இறுதி பட்டியலை பார்க்க http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2111975,00.html
இதுகுறித்த செய்தியை பார்க்க http://twocircles.net/2012apr18/modi_voted_out_times_poll.htmlhttp://news.outlookindia.com/items.aspx?artid=760097

அவர்களும் திட்டமிட்டார்கள். இறைவனும் திட்டமிட்டான். தவிரவும், திட்டமிடுதலில் இறைவனே சிறந்தவனாவான் - குர்ஆன். 

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

முடுக்கப்பட்ட சதி, முடக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.