Saturday, April 28, 2012

இரவும் பகலும் இனிமையாக இருக்க "சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே உள்ளன"

 இனிய இரவு முதல் இரவு கணவனும் மனைவியும் இணைந்த இரவு.

 கொடிய இரவு தம்பதிகள் பிரிந்திருக்கும் இரவு.. 

 இவைகள் மனோநிலைகளால் மாறுபடுகின்றன இரவின் நிலா ஒளியினால் மாறும் காட்சியைப்போல், இரவும் பகலும் வருவது ஒளிக்கீற்றின் மாற்றத்தினால். சூரியனும் நட்சத்திரத்தில் ஒன்றுதான் சூரியன் அதன் ஒளி அதிகமாக கிடைக்க  பகலாக, வெளிச்சமாக  உள்ளது நெருங்கி இருப்போரின் நட்பைப் போல், அதைவிட அதிக தூரத்தில் உள்ள நட்சத்திரத்தின் ஒளி குறைவாக கிடைப்பதைப் போல் தூரச் சென்றவர்களின் அன்பும் ,பாசமும் நட்பும் நன்மை தூரமாக்கிவிடுகின்றது, பார்வையை விட்டு அகன்றோர் இனிய இதய பாசத்திலிருந்து காலப்போக்கில் காணாமல் போய்விடுவதனை உணரலாம்  இரவு பகலைப் போல்  ஒரு தொடர்ச்சி எப்பொழுதும் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரே பகலாக இருந்தாலும் கொடுமை தொடந்த இரவாக இருந்தாலும் அது வேதனை. நம் நன்மைக்காகவே இரவும் பகலும் மாறி மாறி வந்து மகிழ்வைத் தருகின்றது.

 சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே உள்ளன – திருகுர்ஆன் 55:05

சூரியனை ஒளி அளிப்பதாகவும் நிலவை ஒளியைப் பிரதிபலிப்பதாகவும் அவனே ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறியும் பொருட்டு அதற்கு பல படித்தரங்களை உண்டாக்கினான். தக்க காரணங்கள் இன்றி ஏக இறைவன் இவற்றைப் படைக்கவில்லை. அறிவுள்ள மக்களுக்கு தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான். திருகுர்ஆன் 10:05



 இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாய் ஆக்கினோம். பின்னர் இரவின் அத்தாட்சியை மங்கச் செய்தோம். உங்கள் இரட்சகனிடமிருந்து நீங்கள் அருளைத் தேடிக் கொள்வதற்காகவும் ஆண்டுகளின் எண்ணிக்கை மற்றும் கணக்கை நீங்கள் அறிவதற்காகவும் பகலின் அத்தாட்சியை பார்ப்பதற்குரியதாகவும் ஆக்கினோம். (இவ்வாறே) ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்தோம். திருகுர்ஆன் 17:12

 இரவைப் பகலில் புகுத்துகிறான். பகலை இரவில் வசப்படுத்தி இருக்கிறான். ஒவ்வொன் றும் (அதற்கு) குறிப்பிட்ட தவணையின்படி செல்கிறது…… திருகுர்ஆன் 35:13

நன்மைகளும் மற்றும்  தவறுகளும் பகலிலும் இரவிலும் நடக்கவே செய்கின்றன. ஆக பகலும் இரவும் நமக்குத் தேவை என்பது அவசியமாகின்றது. பகலை ஒளி கிடைக்காத அறையில் புகுந்து இருட்டாகிக் கொள்வதில் இரவை செயற்கை ஒளி கொடுத்து பகல் போல் மின்சாரத்தின் உதவியுடன் மகிழும் மக்கள் பார்க்கின்றோம்.
 இரவின் அழகு
 BEAUTY OF NIGHT















 ========================================
 இரவு நேர பூபாளம்..

 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.


No comments: