Friday, April 27, 2012

எங்கு அழைத்தாலும் வருவார்கள்..!

 எங்கு அழைத்தாலும் வருவார்கள் ஆனால் என்னோடு வா சுவனம் புகலாம் இந்த மாயையான வாழ்கையை விட்டு நிலையான வாழ்வைத் தேடி சுவனம் போகலாம் என்று அழைத்தாலும் வரமாட்டார்கள் . வரமுடியாமைக்கு ஒரு காரணம் சொல்லி தப்பிக்கவும் செய்வார்கள்.தம்பி "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" விட்டு விடு என்னை.வீண் கற்பனையை .செய்யாதே என்பார்கள்.  பார்த்து வந்து பார்த்துத காட்சிகளையும் அனுபவித்த மகிழ்வையும் நேரில் வந்து சொல் அப்பொழுது  அதனைப் பற்றி யோசிக்கின்றேன்  என்பார்கள்.

 "தாயின் மடியில் சுவனம் உள்ளது" என நாயகம் நவின்றார்கள. தாய் மீது நேசம் காட்டு,மாறாத அன்பு செலுத்து என்பதோடு இதன் கருத்து முடிந்து விடவில்லை. மாறாக  தாய் தனது பிள்ளைகளை வழிகாட்டும் முறை அவள் பிள்ளைகளை  சுவனம் செல்ல வழி வகுக்கும் என்பதும் அடங்குமோ! இதில் தாயின் கடமையும் உள்ளடக்கம் .    தாய் வர மறுப்பது,மகன் மீது எல்லை இல்லா அன்பு கொண்டாலும் அவன் மாண்டால் தானும் அவனோடு சேர்ந்து உயிர் விட மறுப்பது தனக்கு உயிர் மேல் உள்ள ஆசையல்ல மாறாக நீண்ட காலம் வாழ்ந்து இறைவனைத்   தொழுது அவனது இறையருள் அதிகமாகப் பெற வேண்டும் என்ற வேட்கையாகவே இருக்க முடியும். நாம் டார்வின் கண்டுபிடிப்புபோல் குரங்கிலிருந்து வரவில்லையே .நம்மை இறைவன்  இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான்.
 
96:1 ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! 96:2 (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து (மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! 96:3 மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், 96:4 அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; 96:5 மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்)
 
 குரங்கு தன் குட்டி கிணற்றில் விழுந்து விட்டால் அதனை காப்பாற்ற தானும் பாயும் நீர் அதன் காலளவு இருந்தால் குட்டியை இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்ளும், நீர் ஊற மார்பளவு வந்தால் தன் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளும் அதற்கு மேல் நீர் ஊருமானால் குட்டியை  தூக்கிப்  போட்டு விட்டு தான் பாய்ந்து தப்பித்துக் கொள்ளும். நம் தாய் அந்நிலை வந்தால் தான் இறந்தாலும் தன் குழந்தையை காப்பாற்றிவிடுவாள்  . இதுதான் தாய்பாசம்.     

No comments: